27/03/2026
வாசிக்கும் தமிழகம்
~
என் பால்யத்தின் கோடை காலம் மறக்கவியலாதது. அப்போது எங்கள் வீட்டில் ஒரு டிவி கூட இல்லை. அப்பா ஆசிரியர். படிக்கும் பழக்கம் உள்ளவர். குமுதம், விகடன், ராணிமுத்து, மாலைமதி, வாங்கி வருவார். இதனால் இயல்பாகவே படிக்கும் வழக்கம் தொற்றிக் கொண்டது.
கோடை விடுமுறைக்கு அம்மா பிறந்த ஊரான சேதியூர் போவோம். எங்கள் மாமன் மகன்கள், மகள்கள் அனைவரும் வாசிப்பவர்கள். வாண்டு மாமா, இரும்புக்கை மாயாவி இப்படி வகைதொகை இல்லாமல் படித்தோம்.
எங்கள் மாமன்களில் ஒருவர் பி.ஏ வரலாறு படித்தார். இன்னொருவர் தமிழ்ப் புலவர் படித்தார். கதைப் புத்தகங்கள் தீர்ந்தபோது இந்திய, உலக வரலாற்றுப் புத்தகங்களைப் படித்தேன். சங்க இலக்கியங்களைப் படித்தேன்.
மணிமுத்தா நதியைப்போல எங்கள் கற்பனை ஊற்றெடுத்த காலம். கதைகள் வளர்ந்த காலம். சுஜாதா, சாண்டில்யன், புலியூர் கேசிகன் போன்றோர் எங்கள் வெய்யிலை அழித்தார்கள். தாகத்துக்கு புத்தகங்களைப் பருகினோம்.
இன்றைய அதிவேக உலகில், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. மக்கள் சராசரியாக ஐந்து மணி நேரம் தங்கள் மொபைல் சாதனங்களில் செலவிடுவதாக சமீப ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அதீதப் பயன்பாடு பெரும்பாலும் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது. இப்போது Digital Detox அவசியமாகத் தேவைப்படுகிறது.
மன, உடல் ஆரோக்கியத்தின் சமநிலையை மீட்டெடுக்க, திரைகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளிலிருந்து சிறிய இடைவேளை தேவைப்படுகிறது.
வரப்போகும் கோடையில் நமது கவனத்தையும் படைப்புத் திறனையும் மேம்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
அதற்கு நாம் அதிகம் புழங்கும் படுக்கையறை, உணவு மேசை போன்ற இடங்களில் திரைப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
மாறாக புத்தகங்கள் படிப்பதை அதிகமாக்க வேண்டும். இதற்கு இசைவாக ,களம் புதிது பதிப்பகம், தன் வெளியீடுகளை மே மாதம் முடியும்வரை 25% கழிவில் தருகிறது.
வாசிப்பில் அக்கறையுடையோர் பயனடைவீர்.
#கோடை_வாசிப்பு
#களம்_புதிது