
25/06/2025
குவைத்தில், இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு குவைத் வங்கிகளுக்கு நாளை விடுமுறை..
ஹிஜ்ரி 1447 இஸ்லாமிய புத்தாண்டுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறையைக் கடைப்பிடிக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் நாளை, வியாழக்கிழமை, ஜூன் 26 அன்று செயல்பாடுகளை நிறுத்துவதாக குவைத் வங்கி சங்கம் அறிவித்துள்ளது.
குவைத் மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஜூன் 29 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
குவைத் தமிழ் சோசியல் மீடியா