04/11/2025
மண்டூர் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகள்..!
வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் மண்டூர் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியானது இன்று (04.11.2025) ஆம் திகதி மண்டூர் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மட்/பட்/மண்டூர் இராமகிருஷ்ணன் வித்தியாலைய பாடசாலை மாணவர்களினால் விழிப்புனர்வு நடை பவனி பேரனியானது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி நூலகம் வரைக்கும் சென்று நிறைவு பெற்றது.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் மண்டூர் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களினால் வீதியோர நாடகம் இன்று (04.11.2025) நடைபெற்றுள்ளது.
மேற்படி வீதியோர நாடகம் மண்டூர் பொது நூலகத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரபல்யமான நூல்கள், நாவல்கள், சிறுகதை தொகுப்புக்கள், வரலாற்று ஆவணங்கள்,பாடசாலை நூல்கள் என பல நூல்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வினை போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் அதிதிகளாக கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்தலும் நூலகங்களின் நூலக அங்கத்தவர்களை அதிகரித்தலும்.
இதற்கமைய வாசிப்பு எப்போதும் மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதனை உணர்ந்து, அனைவரையும் நூலகத்தில் இணைத்து வாசிப்பை ஊக்குவிக்க முயலுவோம்.
இன்றைய தினம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் மண்டூர்,தம்பலவத்தை,13 சங்கபுரம் ஆகிய நூலகங்கள் இனைந்து மாணவர்களுக்கு அங்கத்தவர் படிவம் மற்றும் துன்டுப்பிரசுரங்கள் நூலகசேவகர்களினால் வழங்கிவைத்தனர்.
இன்றைய நிகழ்வின் (பி.பிரசாந்தன் - சிரேஷ்ட நூலகர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்றல் நிறுவனம்
கிழக்கு பல்கலைக்கழகம்) மற்றும் போரதீவுப்பற்று
பிரதேசசபையின் சின்னவத்தை வட்டார உறுப்பினர்,
நூலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வாசக வட்ட உறுப்பினர்கள்,வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(ரஞ்சன்)