Rks தமிழ்

Rks தமிழ் செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் தெரி? News

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!✍️ எஸ். சினீஸ் கான்சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே...
19/07/2025

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

✍️ எஸ். சினீஸ் கான்

சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால நெருங்கிய நட்புறவும், மதபாரம்பரிய ஒற்றுமையும் நிலவுகின்றன. இஸ்லாமிய உறவுகளை மையமாகக் கொண்டு துவங்கிய இந்த உறவுகள், தற்போது பொருளாதாரம், சமூகசேவை, கல்வி, மனிதாபிமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் நிலவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள சவூதி அரேபியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உதவிகள், இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இருந்துள்ளன.

• மத மற்றும் கலாச்சார உதவிகள்.

இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கு மதப்பணிகள், மஸ்ஜித்கள், அரபுக் கல்விக்கான கல்லூரிகளை நிர்மாணிக்கும் பணிகளில் சவூதி அரேபியா முக்கிய பங்களிப்பு அளித்துள்ளது. பல மஸ்ஜித்கள், இஸ்லாமிய நூலகங்கள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஷாக்கள் ஆகியவை சவூதி நிதியுதவியில் நிறுவப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களுக்கு தேவையான உதவிகள், விசா சலுகைகள், வசதியான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றும் வழங்கப்பட்டுள்ளன.

• பொருளாதார உதவிகள்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளின் போதும், இயற்கை அனர்த்தங்களுக்குப் பிறகும், சவூதி அரேபியா நன்கு ஆதரவளித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கடன் நெருக்கடிகளை சமாளிக்க சவூதி அரசு இலங்கைக்கு எரிபொருள் கையளிக்கவும், நிதி உதவிகளை வழங்கவும் உதவியது. குறிப்பாக 2022-23 ஆம் ஆண்டுகளில் இலங்கை மிகுந்த பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டபோது, சவூதி அரேபியாவிலுள்ள “சவூதி அபிவிருத்தி நிதி” (Saudi Fund for Development - SFD) நிதி உதவிகளை வழங்கியது.

இது தவிர, பல முக்கியமான குடிநீர் திட்டங்கள், பாலங்கள், வீதி அபிவிருத்தி, வைத்திசாலைகள், கல்வி கட்டிடங்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் இந்நிதியின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

• மனிதாபிமான உதவிகள்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது, சவூதி அரேபியா இலங்கைக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்ட உதவிகள் குறிப்பிடத்தக்கவை. அவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளித்தன.

மேலும், சவூதி அரசின் கீழ் இயங்கும் “King Salman Humanitarian Aid and Relief Centre” (KSRelief) நிறுவனம், பல்வேறு நேரங்களில் இலங்கையின் கிழக்குப்பகுதி மற்றும் முஸ்லிம் பகுதிகளில் நிவாரணப் பொதிகள், உணவுப் பொருட்கள், மருத்துவச் சேவைகள் போன்றவற்றை வழங்கியுள்ளது.

• கல்வி மற்றும் பயிற்சி உதவிகள்.

சவூதி அரேபியா பல இலங்கை மாணவர்களுக்கு அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றலுக்கான உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இஸ்லாமியக் கல்வி, அரபு மொழிப் பயிற்சி, ஹதீஸ், ஷரீஅத் சட்டம் உள்ளிட்ட துறைகளில் கல்வியறிவு பெற இலங்கை மாணவர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது, நாட்டில் உயர் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய புலமையை வளர்க்கவும் உதவியாக அமைந்துள்ளது.

அதனுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வி தொடர்பான கருத்தரங்குகள், ஆகியவற்றிலும் சவூதி அரசின் ஆதரவு காணப்படுகின்றது.

அண்மையில் கூட வயம்ப பல்கலைக்கழகம் நகர திட்டம் திறந்துவைக்கப்பட்டது.

இருநாட்டு உறவுகளின் வளர்ச்சி
இலங்கை-சவூதி உறவுகள் நாடுகளின் அதிகாரபூர்வ சந்திப்புகளால் மேலும் வலுவடைந்துள்ளன. பல இலங்கைத் தூதுவர்கள் சவூதியில் பணியாற்றியுள்ளதுடன், சவூதி அரசத் தலைமையிலும் இலங்கை அரசின் உயர் நிலை அரசியல்வாதிகள், அமைச்சர் குழுக்கள் ஆகியோர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

இவ்வாறு இலங்கை - சவூதி அரேபியா உறவுகள் நீண்டகாலமாக தொடர்கிறது.

🔸வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறப்பு விழா தொடர்பான இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர...
15/07/2025

🔸வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறப்பு விழா தொடர்பான இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களது ஊடக அறிக்கை.
---------------------------------------------

2025 ஜூலை 14ஆம் திங்கள் கிழமை, வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவுதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது.

சவுதி அபிவிருத்தி நிதியம், இலங்கை குடியரசில் சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட 15 முக்கிய திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது . இந்த வயம்ப பல்கலைக்கழக திட்டமும் சவூதியின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபிய கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.

பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும், மக்களுக்கிடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.

இந்த திட்டம், எவ்வித உட்புற நோக்கங்களோ அல்லது நிபந்தனைகளோ இல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அபிவிருத்தி கூட்டுறவுகள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, சவூதி அபிவிருத்தி நிதியம், உலகம் முழுவதும் அபிவிருத்தி மற்றும் அமைதிக்காக சேவையாற்றும் சவூதியன் கொள்கையின் அடிப்படையில், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலைத்த பயனுடைய திட்டங்களை செயற்படுத்த மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் மற்றும் பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும், மேலும் இந்த திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்த அனைத்து செயற்குழுக்கள், இலங்கையின் கல்வி அமைச்சில் உள்ள எமது நணபர்கள் அனைவருக்கும் எனது எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இறுதியாக, வயம்ப பல்கலைக்கழகம் அறிவின் கலங்கரை விளக்கமாகவும் நம்பிக்கையின் இல்லமாகவும் இருப்பதையும், மேலும் செழிப்பான மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் புது தலைமுறைகளை உருவாக்கும் தளமாகவும் அமையும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி

🔸அபிவிருத்திக்கான சவூதி நிதியத்துக்கும் (SFD) இலங்கைக்கும் இடையிலான நல்லுறவுகள் ஆரம்பித்ததிலிருந்து, நீர், சக்தி, சுகாதா...
13/07/2025

🔸அபிவிருத்திக்கான சவூதி நிதியத்துக்கும் (SFD) இலங்கைக்கும் இடையிலான நல்லுறவுகள் ஆரம்பித்ததிலிருந்து, நீர், சக்தி, சுகாதாரம், பாதையமைப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மொத்தமாக 13 திட்டங்களை செயற்படுத்த, SFD மொத்தமாக சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவு பெருமதி உள்ள 15 அபிவிருத்திக் கடன்களை வழங்கியுள்ளது.

இவற்றுள் பிரதானமாக நிதியளிக்கப்பட்ட 13 திட்டங்கள்

1. கொழும்பு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் நிர்வாக திட்டம் (1981 இல் கடன் வழங்கப்பட்டது) – நகர குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துதல்.
2. மின்சார பிணைய பராமரிப்பு திட்டம் (1981) – தேசிய மின்சார பாவனை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
3. மஹவெலி கங்கை அபிவிருத்தி – இடது கரை (1980-களின் ஆரம்பத்தில் வழங்கப்பட்டது) – நீர்பாசன வசதி மற்றும் விவசாய ஆதரவு.
4. கொழும்பில் நியுரோ-ட்ரோமா பிரிவு அடங்கலான சுகாதார வளங்கள் அபிவிருத்தி திட்டம் (2002 மற்றும் 2008).
5. மட்டக்களப்பு – திருகோணமலை சாலை அபிவிருத்தி (2004) – கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கு.
6. சுகாதார வளங்கள் அபிவிருத்தி(2008) – கொழும்பு சுகாதார உள்கட்டமைப்பின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி.
7. எப்பிலெப்சி மருத்துவமனை மற்றும் சுகாதார மையம் (கொழும்பு தேசிய மருத்துவமனை) (2008 இல் கட்டப்பட்டது, 2015 இல் இதற்கு மேலதிக கடன் தொகை வழங்கப்பட்டது)– 242 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பு.
8. களு கங்கை அபிவிருத்தி திட்டம் (இடது கரை விரிவு, சுமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, 2010/2017) – பாசனம், நீர்த்தேக்க தொட்டி மற்றும் கால்வாய் அமைப்புகள்.
9. சாலை வலையமைப்பு அபிவிருத்து / தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தல் (பேராதனை – பதுளை- செங்கலடி வரை, சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, 2015 இல் ஆரம்பித்து 2021 இல் முடிவடைந்தது)
10. வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி (சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டு, 2017 இல் தொடங்கியது) – உள்கட்டமைப்பு அபிவிருத்தி செய்து வருடத்திற்கு 5,000-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உதவும் நோக்கம்)
11. சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அமைப்பு (சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர், 2019 இல் ஒப்பந்தம்)
12. கின்னியா பாலம் (திருகோணமலை மாவட்டம்) – சுமார் 2017-இல் கடன் ஒப்பந்தத்தின் கீழ் நிதி பெற்றது, சுமார் 1,00,000 மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
13. கொழும்பு தேசிய மருத்துவமனையில் நியூரோ-டிராமா பிரிவு – சுகாதாரத் துறையின் திட்டங்களின் கீழ் நிதியளிக்கப்பட்ட சிறப்பு நியூரோடிராமா சிகிச்சை மையம்

இந்த திட்டங்களுள் வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டத்தினை பொருத்தமட்டில், வையம்ப பல்கலைக்கழகத்தை மேம்படுத்தும் நோக்கில் 28 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 105 மில்லியன் சவுதி ரியால்) மதிப்புடைய கடன் ஒப்பந்தம் 2017 அக்டோபர் 24-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கத்தைப் பொருத்தளவில், கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கி மேம்படுத்துவதன் மூலம், 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வியில் துணை நிற்பதோடு, கல்வித் தரத்தை உயர்த்தல் மற்றும் சூழவுள்ள சமூகத்தின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக திறன்களை வலுப்படுத்துவதுமாகும். இந்த திட்டத்தின் பரப்பை பொருத்தளவில் கற்பித்தல் வசதிகளை விரிவாக்குதல், கல்விக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் குளியாபிட்டிய மற்றும் மாகந்துர பகுதிகளில் உள்ள வயம்ப பல்கலைக்கழகத்தை ஒரு முக்கிய கல்வி மையமாக மாற்றுதல் ஆகியவை அடங்குகின்றன.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர். தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ...
12/07/2025

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்.

தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான காடயர் குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளனர்.

நேற்று இரவு (11) கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான சிலர் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் காரைதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக உடனுக்குடன் செய்திகள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் எழுதும் ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் பிரபல சமூக செயற்பாட்டாளராகவும், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விரோத செயல்களை துணிந்து கேள்விக்குட்படுத்தி செய்திகள் எழுதி, ஆய்வு கட்டுரைகள் எழுதி வந்த இவர் மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சமீபத்தைய நாட்களில் செயற்பாட்டு ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இலங்கை வருகிறார் சவூதி நிதியத்தின்பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட்.!(எஸ். சினீஸ் கான்)அபிவிருத்திக்கான சவூத...
12/07/2025

இலங்கை வருகிறார் சவூதி நிதியத்தின்
பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட்.!

(எஸ். சினீஸ் கான்)

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நாளை (13) ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

சவூதி அரேபியாவின் 28 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத் தொகையில் நிர்மாணிக்கப்பட்ட வயம்ப பல்கலைக்கழகத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே இவர் இலங்கை வருகிறார்.

கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடனான இந்த நிகழ்வு 14ஆம் திகதி திங்கட்கிழமை வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானி மற்றும் ஆளும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விலும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் ஊடாக வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய மற்றும் மாகுந்தர ஆகிய வளாகங்களில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

🔹 மனிதாபிமான பணிகளும், கல்விச் சேவைகளும் செய்துவரும் சட்டத்தரணி முஜீப் அமீன்..!கிழக்கு மாகாணத்தில் சமூக நலனுக்காகவும் , ...
07/07/2025

🔹 மனிதாபிமான பணிகளும், கல்விச் சேவைகளும் செய்துவரும் சட்டத்தரணி முஜீப் அமீன்..!

கிழக்கு மாகாணத்தில் சமூக நலனுக்காகவும் , கல்வி வளர்ச்சிக்காகவும் ஆர்வத்துடனும் பாடுபட்டு வருகின்றவர் சட்டத்தரணி முஜீப் அமீன். இவரைப் பற்றி பலர் “அவர் ஒரு அரசியல்வாதி” என்ற அளவில் மட்டுமே அறிந்து இருக்கலாம். ஆனால், உண்மையில் இவரது சேவைபாதை அரசியல் எல்லைகளைக் கடந்தவை.

இவர் கடந்த காலத்தில் கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளராக பணியாற்றியவர். சமீபத்தில் நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் பத்துக்கும் குறைவான வாக்குகளால் தோல்வியடைந்தபோதிலும், மனமுடைந்து நின்றுவிடாமல், அதே நாளிலிருந்து தனது சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

இவரது அண்மைக்கால பணிகளை சுருக்கமாக இப்படி கூறலாம்.

குச்சவெளி அல் நூரியா ஆரம்ப பிரிவு பாடசாலைக்கு ஏற்கனவே 02 வகுப்பறை பாடசாலை கட்டிடம் வழங்கப்பட்டுள்து.

இன்னொரு பாடசாலை கட்டிடமும் அதே பாடசாலையில் கட்டப்பட்டு அதுவும் இம் மாதம் திறக்கப்படவுள்ளது.

முதூர் அல் ஹுசைனியா பாடசாலைக்கு ஏற்கனவே 02 வகுப்பறை கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சகல வசதிகளுடனான IT Centre கட்டப்பட்டு இம்மாதம் திறக்கப்படவுள்ளது.

தோப்பூர் பிரதேசத்தில் அல் சல்மா பாடசாலைக்கும் 02 வகுப்பறை கட்டிடம் கட்டப்படவுள்ளது. தற்போது நாட்டின் பல பாகங்களிலுமிருந்து 200 மாணவர்கள் புலமைப்பரிசில் நிதியுதவி பெறுகிறார்கள்.

அதேபோன்று, அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் தொடர்சிச்சியாக உதவி வருகிறார்.

இவரது பணிகள் தொடர எமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

- எஸ். சினீஸ் கான்.

பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!ஆக்கம் - எஸ். சினீஸ் கான்பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொ...
05/07/2025

பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

ஆக்கம் - எஸ். சினீஸ் கான்

பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், உணவு, மருத்துவம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் தேவையான ஆதரவுகளை சவூதி அரசு வழங்கி வருகிறது.

சவூதி அரேபியாவின் மனிதாபிமான மையமான "KSRelief" மூலமாக அவசர தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விமானம், கப்பல் மற்றும் தரை வழியாக பல்வேறு உபகரணங்கள், மருந்துகள், மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம் மற்றும் புனரமைப்பு போன்ற துறைகளிலும் சவூதி அரசு நேரடியாக பங்களித்து வருகிறது. பலஸ்தீன மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள், காயமடைந்தோருக்கான சிகிச்சைகள், சேதமடைந்த கட்டிடங்களுக்கான மறுசீரமைப்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

மேலும், சர்வதேச ரீதியிலும் பலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சிகளில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அடிப்படையில், நீதி மற்றும் மனிதாபிமானம் சார்ந்த நிலைப்பாடுகளை வலியுறுத்தி வருகின்றது.

இந்தத் தொடர்ச்சியான உதவிகள், சவூதி அரேபியாவின் ஆழமான பொறுப்புணர்வையும், பலஸ்தீன மக்களுக்கான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) ...
03/07/2025

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் திரு. இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின் செயலாளர் திரு. எம். ஷிஹாம் மரிக்கர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (3) இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, ​​இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

(எஸ். சினீஸ் கான்)

02/07/2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது...!!!

(றியாஸ் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று (02.07.2025) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சபையில் தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன.

இதில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏ.எஸ்.எம்.உவைஸ் தவிசாளராகவும், உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எப்.நஜீதும் தெரிவு செய்யப்பட்டனர்.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தவிசாளர் தெரிவிற்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய மக்கள் சக்தி சார்பாக எஸ்.பாஹிமா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் ஏ.எஸ்.எம்.உவைஸ் 11 வாக்குகளும், எஸ்.பாஹிமாவுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. இதில் உவைஸ் 08 மேலதிக வாக்குகளினால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் நடு நிலை வகித்தனர்.

உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எப்.நஜீத் சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதன் போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான MS.உதுமாலெப்பை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சீ.சமால்டின் உட்பட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பார்வையாளர் அரங்கில் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி போட்டிப் பரீட்சை மூலம் இம்முறை இலங்கை நிர்வ...
01/07/2025

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி போட்டிப் பரீட்சை மூலம் இம்முறை இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) தெரிவு செய்யப்பட்ட
A.அப்றோஸ் அகமட் (RDO) அவர்களை பாராட்டும் நிகழ்வும் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுகே எ ஹமீட்முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காம பிரதேச...
28/06/2025

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கே எ ஹமீட்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காம பிரதேச சபை பிரதித்தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் இன்று அனுப்பிவைக்கப்பட்டது . மேலும் அவருடைய கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.என்று
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

26/06/2025

ஆண்டுதோறும் நடைபெறும் புனித அனுஷ்டானம்: கஃபாவின் புதிய ஆடை இன்று அணிவிக்கப்பட்டது.



#கஃபா #புனிதஅடை #இஸ்லாமியபண்பாடு #மக்கா #அல்லாஹ்வின்_வீடு

Address

Addalachenai

Alerts

Be the first to know and let us send you an email when Rks தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rks தமிழ்:

Share