16/10/2022
அன்புள்ள ஆசிரியர்களே!
👉 வகுப்பறையில் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல பல கைகள் உயர்ந்தால் ஒரு மாணவனை தேர்ந்தெடுங்கள், அவன் விடை சொன்ன அடுத்த கணமே, இந்தப் பதிலை யார் ஆதரிக்கிறீர்கள்! என்று மற்ற மாணவர்களிடமும் கேளுங்கள்! அப்போது இன்னும் பல கைகள் உயரும். அதன்மூலம் அவர்கள் அனைவரும் சரியான விடை அளித்த உணர்வு அவர்களுக்குள் ஏற்படும்.
அன்புள்ள ஆசிரியர்களே!
👉 சரியான விடைகளை நாம் ஊக்குவிப்பது போல நல்ல கோள்விகளை நாம் ஏன் ஊக்குவிக்கக் கூடாது! நல்ல கேள்வியொன்றை ஒரு மாணவன் கேட்டால், ' இது புத்திசாலி மாணவன் கேட்கும் புத்திசாதுர்யமான கேள்வி' என்று சொல்லி பாராட்டுங்கள்! இப்படியொரு கேள்வியை இன்றைய பாடத்தில் யார் கேட்பார் என்று நான் காத்திருந்தேன்' என்று சொல்லுங்கள்!
அன்புள்ள ஆசிரியர்களே!
👉 மாணவர்கள் பாடத்தை சரியாக அவதானிக்காமல் சோர்வாக இருக்கக் கண்டால், இன்றைய பாடத்தை ஒரு சிறிய பரீட்சையுடன் நிறுத்தப் போகிறேன்' என்று சொல்லுங்கள்! அதை நடைமுறைப் படுத்தியும் பாருங்கள்!
அன்புள்ள ஆசிரியர்களே!
👉 நீங்கள் தொடர்ந்து பாடம் நடத்தும் சந்தர்ப்பங்களில், ஒரு நிமிடம் பாடத்தை நிறுத்தி விட்டு மாணவர்களின் முகங்களை பாருங்கள்! 'உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் என் அன்புக்குறியவர்கள் என்று சொல்லிவிட்டு பாடத்தை தொடருங்கள்! இதனால், உங்கள் மனதில் அவர்கள் மரியாதைக்குறியவர்கள் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தும்!
அன்புள்ள ஆசிரியர்களே!
👉 ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மாணவன் தாமதமாக நுழைந்தால், அவனுக்கு தவறிய பாடத்தை சுருக்கமாக சொல்லி விட்டு பாடத்தை தொடருங்கள்! அதனால் அவன் மனதில் உங்கள் மீது மரியாதை அதிகரிக்கும்!
அன்புள்ள ஆசிரியர்களே!
👉 வகுப்பறையில் ஒரு மாணவனுடன் காரசாரமான உரையாடல் ஏற்படும் பட்சத்தில் உரையாடலை நிறுத்துங்கள்!
வகுப்பறையில் அவனுக்கு அது ஒரு சவாலாக மாறிவிடும்! தனியாக அழைத்து அவனை விசாரித்துப் பாருங்கள், வகுப்பறையில் இருந்ததை விட வித்தியாசமாக உரையாடுவதை காணலாம்!
முடிவாக ஆசான்கள் என்போர் துதர்கள், தீர்க்கதரிசிகள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! ஆன்மாக்களை செப்பனிட்டு வளர்க்கும் போதகர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்!
✍ தமிழாக்கம் / imran farook