Eastern Voice

Eastern Voice இது உங்கள் குரல்

06/12/2025

7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் அபாய எச்சரிக்கை!

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான ஆரம்ப எச்சரிக்கை மையத்தால் இன்று (டிசம்பர் 06) பிற்பகல் முதல் இரவு 11.00 மணி வரை 7 மாவட்டங்களுக்கு மிகக் கடுமையான மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையின்போது பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொழும்பு-பதுளை புகையிரதத்திற்கு நீண்ட விடுமுறை… 😥 மலையக புகையிரத பாதையை பழுது பார்க்க சுமார் 06 மாதங்கள் ஆகும் என அறிவிக...
05/12/2025

கொழும்பு-பதுளை புகையிரதத்திற்கு நீண்ட விடுமுறை… 😥
மலையக புகையிரத பாதையை பழுது பார்க்க சுமார் 06 மாதங்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ✅

மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பல புகையிரத பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

அதேபோல கிழக்கு மற்றும் வடக்கு ரயில் பாதைகளிலும் இப்போதைக்கு சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேராதெனிய பகுதியில் உள்ள யகா பாலம் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் யாரும் அந்தப் பகுதியில் பார்வையிட வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல காரியாலய ரயில்களும் தற்பொழுது நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது இயங்கும் ரயில் சேவைகள்… ✔️

முதன்மை ரயில் பாதை (அம்பேபுஸ்ஸ வரை மட்டும்) ✅
🚆

புத்தளம் ரயில் பாதை ✅

களணி-வெளி ரயில் பாதை ✅

கரையோர ரயில் பாதை மட்டும் இயங்குகிறது. ✅

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில்கள் சிக்கிக்கொண்டிருப்பதும், ரயில் நெரிசல் அதிகரித்திருப்பதாலும், தற்போது இயங்கும் ரயில்களில் பயணம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டுகிறோம்.

ஆபத்தான இடங்களில் நிற்பது அல்லது நகருவதை தவிர்க்கவும்.
ரயில் என்பது உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ⚠️❌

மீண்டும் கூறுகிறோம்—
உங்களை உங்களுடைய குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்…
ஆகையால் தயவுசெய்து பாதுகாப்பாக ரயிலில் பயணம் செய்யுங்கள். ❤️✅

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகமமண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!நேற்றிரவு (29.11.2025)...
30/11/2025

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம
மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!

நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது?

இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது வீடுகளை முழுவதுமாக விழுங்கிக் கொள்கிறது. உள்ளே மனிதர்கள் குழந்தைகள் முதியோர்கள் நோயாளர்கள் எல்லோரும்தான்.

நீரில் கசிந்து வீடுகளில் வீழ்ந்த மண்மேடுகள் பெரும் பெரும் வீடுகளைக் கூட முழுமையாக மூடிக் கொள்கின்றன. மக்கள் மூச்சுக்காற்றை மட்டுமன்றி முகவரியைக் கூட இழந்த பரிதாபம் இது.யாரும் உடனடியாகச் சென்று உதவ முடியாதவாறு பாதைகள், சிறு வீதிகள் எல்லாமே சிதைந்து போனது.அதனால் பல மணித்தியாலங்கள் இந்த கிராமம் உலகப்பார்வையிலிருந்தே துண்டிக்கப்பட்டது.

இப்போதுதான் மக்கள் அங்கே படையெடுக்கிறார்கள்.ஆனால் யாருக்கும் எதுவுமே செய்ய முடியாத நிலை. அந்தப்பிரமாணடமான மண் சரிவுக்கு முன்னால் அவர்கள் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது. இலங்கை இராணுவம் முழு மூச்சாக முயன்றதில் சுமார் பத்துப்பேரின் ஜனாஸாக்களை மட்டும் தோண்டியெடுக்க முடிந்தது. அதற்கு மேல் தம்மால் எதுவுமே செய்ய முடியாதென அவர்களும் கையை விரத்துவிட்டதாகத்தகவல். எஞ்சியுள்ள ஜனாஸாக்களை தோண்டியெடுக்க என்ன செய்யலாம் என அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்.

சுமார் 50 குடும்பங்களைச்சேர்ந்த 200 அல்லது 180 பேரளவில் இந்த கிராமத்தில் மண்மேடுகளால் காவுகொள்ளப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. காரணம் ஒரு வீட்டில் சுமார் நான்கு பேர் உறங்கியிருந்தாலும் அவர்களது மொத்தம் 200.ஆகக்குறைந்தது மூன்றுபேர் என்றாலும் 150 பேர். ஜனாஸாக்களை காலம் கடத்தி தோண்டி எடுப்பது மிகவும் சவால் நிறைந்து.நிஷ்டையில் உயிர்பிரிந்த தியாகிகளின் ஒரு கூட்டு மக்பராகவே அது மாறியுள்ளது. இந்தத்துயரத்தை அல்லாஹ்வை அன்றி யாருடன்தாம் நாம் சொல்லியழ? சுப்ஹானல்லாஹ்!

இந்தக் கிராமம் எங்கேயுள்ளது?
--------------------------------------------------

ரம்புக்வெல விலானகம கிராமம் அக்குரணை நகரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அன்கும்புர-அளவத்துகொட வீதியில் அமைந்துள்ளது. இது அகுரணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 590ஆவது கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ளது. சூழ இருக்கின்ற தமிழ் சிங்கள சமூகத்தையும் உள்ளடக்கிய சனத்தொகை 800 குடும்பங்கள் . முஸ்லிம்கள் சுமார் 400 குடும்பங்கள். அவர்களில் 50 குடும்பமே இந்த வரலாற்றுத் துயரத்தினை எதிர்கொண்டுள்ளன.

இந்த ஊரில் ஒரு ஜீம்ஆ பள்ளியும் இரண்டு தக்யாக்களும் உள்ளன.சுமார் நானூறு மாணவர்களைக்கொண்ட ஒரு Type 2 பாடசாலையும் உண்டு. இந்தப்பாடசாலைக்கு ஒரு முறை (2016) ஆசிரியர் வலுவூட்டும் நிகழ்ச்சியில் வளவாளராக கலந்து கொண்டுள்ளேன்.மிக ரம்மியமான கிராமம் இது. பல்வேறு வகையான புவியமைப்பைக்கொண்ட (Landscaping) இந்த அழகிய கிராமம் இயற்கையின் மடியில் சயனித்திருந்தது கண்டு நான் வியப்பைத் தேன். இப்போது சயனத்தில் இருந்த மக்கள் மண்மேடுகளால் சமாதி கண்டு மனம் வெம்புகிறேன். இதயத்தையே உடைத்துச் போடும் இது போன்ற துயரங்கள் சகிப்பது சாதாரண மனிதர்களால் முடியாத காரியம்.

இந்த மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கதறியழும் காட்சிகளை காண்கையில், அவர்களது அழுகுரல்களைக் கேட்கையில் கண்கள் பனிக்கின்றன. இதயம் கனக்கின்றது.

இதுவரை 40 பேர் மீட்பு. யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபட்ட பஸ் அநுராதபுரம் -  புத்தளம் வீதியில் கலாஓயா பாலத்துக்கருகில் சிக...
29/11/2025

இதுவரை 40 பேர் மீட்பு.

யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபட்ட பஸ் அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாஓயா பாலத்துக்கருகில் சிக்கியிருந்தது.

மீட்புப்பணிகள் தொடர்கின்றன.

இதற்குள் ஜேர்மன் பிரஜையும், மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்டவர்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அன்பர்களே.. தொலைத்தொடர்புகள் சீரற்ற நிலையில் வீதிகள் பற்றிய தகவல்களை பெற முடியாத சூழலும், மழை நின்றாலும் வெள்ளநீர் வரத்து அதிகரிக்கும் நிலையிலும் தயவுசெய்து மாகாணம் கடந்த பயணங்களை செய்ய வேண்டாம்.

மொழி, இடம், மாற்றுப்பாதை சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நாளை வரை பயணங்களை தள்ளிவையுங்கள்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, எலான் மஸ்க்கின் Starli...
29/11/2025

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, எலான் மஸ்க்கின் Starlink நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் டிசம்பர் மாதம் இறுதி வரை தமது இணையச் சேவையை முழுவதுமாக இலவசமாக வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தற்போது சேவையில் உள்ள வாடிக்கையாளர்கள் (Active Customers) எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை; அவர்களுக்கான கட்டணச் சலுகை (Service Credit) தானாகவே கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது. அதேபோல, சேவை இடைநிறுத்தப்பட்ட (Suspended) வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், அவர்களும் தங்கள் கணக்கை மீண்டும் செயற்படுத்தி இந்தக் காலப்பகுதியில் இணையத்தைத் தடையின்றிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இது வெறும் ஒரு சலுகை அறிவிப்பு என்பதைத் தாண்டி, பேரிடர் காலத்தில் தகவல் தொடர்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்யப்படும் ஒரு மனிதாபிமான உதவியாகவே பார்க்கப்படுகிறது. பொதுவாகப் பெரும் வெள்ளம் ஏற்படும்போது தரைவழி இணைய இணைப்புகள் அல்லது மொபைல் கோபுரங்கள் பாதிக்கப்படலாம், ஆனால் செயற்கைக்கோள் மூலம் இயங்கும் Starlink போன்றவை இக்கட்டான நேரத்திலும் சீராகச் செயல்படக்கூடியவை. பாதிக்கப்பட்டவர்கள் உதவி கேட்பதற்கும், தங்கள் நிலைமையை உறவினர்களுக்குத் தெரிவிப்பதற்கும் இந்த 'இணைப்பு' (Connectivity) மிகவும் அவசியமானது. ஒரு வணிக நிறுவனம் லாபத்தை மட்டும் பார்க்காமல், இத்தகைய சூழலில் தாமாக முன்வந்து உதவுவது பாராட்டத்தக்கது. எனவே, Starlink வைத்திருப்பவர்கள் யாரேனும் சேவையைத் தொடராமல் விட்டிருந்தாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களை வெளிலகுடன் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

|

29/11/2025

Free Voice, SMS, DATA

Free calls, SMS and Data available to any network from Mobitel, Dialog, Airtel and Hutch to contact your family and friends due to inclement weather conditions.

Mobitel - Type "YES" and SMS to 7677. (300 mins, 300 SMS and 1GB DATA)

Dialog - #006 # (250mins, 250 SMS & 1GB DATA)

Airtel - #006 # (250mins, 250 SMS & 1GB DATA)

Hutch - *311 # (250mins, 250 SMS & 1GB DATA)

SLT-MOBITEL - Fixed phone contact customers have given free calls and free data to Home Broadband (Fibre, Home 4G LTE and ADSL) customers. (No need to activate)

தாழமுக்கம் “டிட்வா” சூறாவளியாக வலுப்பெற்றது – இரவு 2.00 மணி நிலவரம் (இலங்கை)🔸 வடகிழக்கு வளிமண்டலக் குழப்பம் மேலும் வலுப்...
27/11/2025

தாழமுக்கம் “டிட்வா” சூறாவளியாக வலுப்பெற்றது – இரவு 2.00 மணி நிலவரம் (இலங்கை)

🔸 வடகிழக்கு வளிமண்டலக் குழப்பம் மேலும் வலுப்பெற்று “Cyclonic Storm Ditwah” என பெயரிடப்பட்டுள்ளது.
🔸 கடுமையான மழை, பலத்த காற்று, இடியுடன் கூடிய மின்னல் பல பகுதிகளில் தொடர்கிறது.
🔸 வடக்கு, கிழக்கு, உள்நாடு மற்றும் தென்கிழக்கு கடல்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
🔸 கடல்சார் பகுதிகளில் அலைக்கற்றி மிகுந்த ஆபத்தான சூழல் நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🔸 பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் தாழ்நிலப் பகுதிகளில் தற்காலிக வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.

⚠️ மக்கள் அவதானம்:
• தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்
• மின்கம்பங்கள், பெரிய மரங்கள் மற்றும் தாழ்வான இடங்களில் தங்க வேண்டாம்
• அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்கவும்

அவசரமான அறிவித்தல்தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுகின்ற தாழமுக்கமானது அடுத்து வருகின்ற 06 மணித்தியாலத்தில் ஒரு ச...
27/11/2025

அவசரமான அறிவித்தல்

தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுகின்ற தாழமுக்கமானது அடுத்து வருகின்ற 06 மணித்தியாலத்தில் ஒரு சூறாவளியாக ஒரு மாறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் பொதுமக்கள் பயப்படவோ, அச்சமடையோ வேண்டாம்.

இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Yemen நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Ditwah எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.

Phone  மெமரி புல் ஆனால் இனி கவலை இல்லை 1024 GB Free  Free  Free  Free  Free https://www.terabox.comTeraBox என்பது ஒரு **...
18/11/2025

Phone மெமரி புல் ஆனால் இனி கவலை இல்லை 1024 GB Free Free Free Free Free
https://www.terabox.com
TeraBox என்பது ஒரு **கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) சேவையாகும்.** இது பயனர்கள் தங்கள் கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவுகிறது.

🌟 முக்கிய அம்சங்கள்

1. **பெரிய சேமிப்பு அளவு:**
* இது பொதுவாகப் புதிய பயனர்களுக்கு **1024 GB (1 TB)** இலவச கிளவுட் சேமிப்பு இடத்தைக் கொடுக்கிறது. இது மற்ற கிளவுட் சேவைகளை விட மிக அதிகம்.

2. **கோப்புப் பகிர்வு (File Sharing):**
* பயனர்கள் பெரிய கோப்புகளையும் எளிதாக மற்றவர்களுடன் பகிர முடியும்.

3 **சாதனங்களுக்கிடையேயான அணுகல்:**
* மொபைல் ஆப் (iOS மற்றும் Android), டெஸ்க்டாப் ஆப் மற்றும் வலைத்தளம் மூலம் நீங்கள் எந்தச் சாதனத்திலிருந்தும் உங்கள் கோப்புகளை அணுகலாம்.

4. **தானியங்கி காப்புப் பிரதி (Automatic Backup):**
* புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தானாகவே கிளவுட்டில் காப்புப் பிரதி எடுக்க இது உதவுகிறது.

🌟 சுருக்கமாக, **TeraBox என்பது மிக அதிக இலவச கிளவுட் சேமிப்பிடம் மற்றும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கும் ஒரு கோப்புச் சேமிப்பு தளமாகும்.**

https://www.terabox.com

தாதுசேனன் என்ற மன்னன் கி.பி 455 முதல் 473 வரை அனுராதபுரத்திருந்து ஆட்சி செய்தான். தமிழ்நாட்டில் இருந்து வந்த மன்னர்களின்...
14/11/2025

தாதுசேனன் என்ற மன்னன் கி.பி 455 முதல் 473 வரை அனுராதபுரத்திருந்து ஆட்சி செய்தான்.

தமிழ்நாட்டில் இருந்து வந்த மன்னர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை மீட்டான்.

அவனுக்கு காசியப்பன், மொகலான என்ற இரு மகன்கள் இருந்தனர்.

காசியப்பன் தாதுசேனனின் மூத்த மகன் அதில் மொகலான என்பவன் பட்டத்துகுரிய அரசிக்கு பிறந்தவன்.

காசியப்பானின தாய் தாதுசேனனின் வைப்பாட்டியாவாள் அவள் பல்லவ நாட்டைச் சேர்ந்தவள் அதனால் தனக்குப் பின் மொகலான என்ற தன் இரண்டாவது மகனே அரசை ஆட்சி செய்வான் என தாதுசேனன் பிரகனப்படுத்தினான்.

காசியப்பனுக்கு அப்பிரகடனம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது தன் தந்தை இறந்த பின்னர் மன்னனாக முடியாது என்ற ஏமாற்றம் காரணமாக தந்தையைக் கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற திட்மிட்டான்.

தாதுசேனன் தனது மருமகனும், சகோதரியின் மகனும், பிரதான தளபதியுமான மிகாராவின் வெறுப்புக்கு ஆளானான்.

காரணம் தாதுசேனனின் அன்புமகளை மனைவி என்று பாராது மிகாரா சவுக்கால் அடித்துத் துன்புறுத்தியதற்கு பழி தீர்க்க மிகராவின் தாயை தாதுசேனன் எரித்துக் கொன்றான்.

காசியப்பனுக்கு தாதுசேனனின் மேல் உள்ள வெறுப்பைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த மிகாரா திட்டமிட்டான்.

காசியப்பன் மிகராவின் உதவியோடு தந்தையைக் கொல செய்தான். தாதுசேனனின் உடலை சிறைச்சாலை சுவருக்குள் வைத்து பூசி மெலுகினான்.

புத்த மதத்துக்கு எதிராக காசியப்பன் செயற்பட்டதால் அவனை மக்களும், புத்த பிக்குகளும் வெறுத்தனர்.

மக்களின் வெறுப்பிலிருந்து தன்னை மீட்க பல நல்ல காரியங்களை காசியப்பன் செய்தான் ஆனால் மக்களும் புத்த பிக்குகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தனது அமைதியற்ற மனநிலையில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ள அனுராதபுர தலைநகரத்தை விட்டு விலகி புது தலைநகரமொன்றை அமைக்கத் திட்டமிட்டான்.

அதனால் சிகிரியா என்ற குன்றில் புது தலை நகரத்தை அமைத்தான் அது தனக்கு மன நிம்மதியை கொடுக்குமென காசியப்பன் நினைத்தான் ஆனால் தகப்பனைக் கொன்ற பாவம் அவனை விட்டு நீங்கவில்லை.

600 அடிகள் உயரமுள்ள சிகிரியா குன்று வனத்தால் சூழப்பட்டது தனது புது தலைநகரத்துக்கு சிகிரியா சிறந்த இடமாக அவன் மனதுக்குப்பட்டது.

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் ஆட்சி செய்த அழகாபுரி நகரத்தைப் போலவே தன் நகரமும் அமைய வேண்டும் என்பது அவனது ஆசை.

குன்றத்தின் மேல் அவன் தான் வாழ்வதற்கு கோட்டையை அமைத்தான் அங்கு அழகிய பூந்தோட்டமும், குளிப்பதற்கு நீர் தடாகங்களையும் தோற்றுவித்தான்.

குன்றத்தின் மேற்கு பக்கத்தில் அழகிய அரை நிர்வாணப் பெண்களின் 500 சித்திரங்களை இந்தியாவில் உள்ள அஜந்தா குகைச் சித்திரங்களைப் போன்று ஓவியக் கலைஞர்களைக் கொண்டு வரைவித்தான் அப்பெண்கள் பற்றிய விளக்கமும், வரைந்த சித்திரக் கலைஞர் யார் போன்ற விளக்கங்களும் இல்லை.

காலப்போக்கில் அச்சித்திரங்களில் மழை, காற்று காரணங்களாலும், மனிதர்களின் நாச வேலைகளிலாலும் அழிந்து போயின அச்சித்தரங்களில் சில இன்றும் இலங்கையின் சரித்திர வரலாறு படைத்த ஓவியங்களாக கருதப்படுகிறது.

அவ் ஓவியங்களில் காட்சியளிக்கும் பெண்கள்கள் அபரஸ்கள் எனவும், தாரா என்ற பெண் தெய்வம் எனவும் பல விதமாக கருத்து தெரிவித்தனர் வரலாறு எழுதியவர்கள் சிலர் அதிலுள்ள இளம் பெண்கள் காசியப்பனின் அந்தப்புரத்து பெண்கள் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

காசியப்பன் வானத்தில் தனது கோட்டை இருப்பதாகக் கனவு கண்டு குன்றத்தில் மேகங்களை வரைந்தான் அது கவர்ச்சியாக இல்லாத படியால் பார்த்தவர்கள் இரசிக்கக் கூடிய பெண்களின் சித்தரங்களை வரைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

புத்த பிக்குகளின் ஆதரவைப் பெறாத காசியப்பன் தன் கோபத்தை அவர்கள் மேல் காட்ட பெண்களை சித்திரமாக வரைந்தான் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

சித்திரத்தில் சில பிழைகள் இருக்கிறது என்பது சிலர் கருத்து எது எப்படியானாலும் குப்தா சக்கரவர்த்தி காலத்தில் வரையப்பட்ட அஜந்தா குகைச் சித்தரங்களைப் போன்றவை சிகிரியா சித்திரங்கள் காசியப்பனுக்கு சித்திரக் கலையிலும் கவிதை புனைவதிலும் ஆர்வமுண்டு என்கிறது வரலாறு.

14 வருடங்கள் சிகிரியா கோட்டையில் இருந்து காசியப்பன் ஆட்சி புரிந்தாலும் தன தந்தையைக் கொலை செய்த நினைவினால் பாதிக்கப்பட்டான்.

அவனது இராணுவ தளபதி மிகாராவுக்கும் அவனுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

மிகாரா பெரிய விழாவொன்றை நடத்த காசிப்பன் அனுமதி வழங்காததே அவர்களுக்கு இடையிலான உறவு பாதிப்டைய காரணம் என்கிறது வரலாறு.

மிகாரா மறைமுகமாக காசியப்பனின் சகோதரன் மொகலானவுக்கு உதவி செய்தான். அச்சமையம் மொகலானா காசிப்பனுக்கு எதிராக போர் புரிய தென் இந்தியாவில் இருந்து படை ஒன்றை திரட்டிக் கொண்டிருந்தான்.

கி.பி 495 இல் காசிப்பனுக்கும் தென் இந்தியாவில் இருந்து படையோடு திரும்பிய அவன் சகோதரன் மொகலானவுக்கும் இடையே போர் நடந்தது.

அந்தப் போரில் காசியப்பனின் இராணுவத் தளபதி மிகாரா மறைமுகமாக மொகலானவுக்கு ஆதரவு வழங்கினான்.

போரில் காசியப்பன் தனது யானை மேல் ஏறிச் சென்ற போது ஒரு சதுப்பு நிலத்தை எதிர்கொள்ள நேர்ந்து அதனால் போர் புரிய உகந்த இடமொன்றை காசிப்பன் தேடித் திரும்பிய போது அவனது படைகள் மன்னன் பயத்தால் திரும்புகிறான் என நினைத்து படை சிதறி ஓடியது.

இதைப் பயன்படுத்தி மொகலான தன் சகோதரன் காசியப்பனைத் தாக்கினான் தனது தம்பியிடம் தோழ்வியை ஒப்புக் கொண்டால் தான் கைதாக வேண்டும் என அறிந்ததால் காசியப்பன் கத்தியால் தன் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டான்.

போரில் வெற்றி பெற்ற மொகலான கி.பி 495 இல் மன்னரானான் சிகிரியாவில் இருந்து தனது ஆட்சியை அனுராதபுரத்துக்கு மாற்றினான், விதவையான காசியப்பனின் மனைவியைத் திருமணம் செய்து கொணடான்.

காசியப்பனின் உடல் சிகிரியாவுக்கு அருகே உள்ள பிதுரங்கல குன்றில் புதைக்கப்பட்டது என்கிறது வரலாறு.

Address

Akkaraipattu
32400

Telephone

+94757307001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share