Akp News

Akp News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akp News, News & Media Website, 615, main Street, Akkaraipattu.

நம்பகமான செய்திகளின் நாயகன் அக்கரைப்பற்று , தேசிய மற்றும் சர்வதேச செய்திகள், பயனுள்ள நேரலை நிகழ்வுகள், நேரடி ஜும்மா பிரசங்கங்கள் போன்றவற்றை பார்வையிட எமது பக்கத்தை லைக் செய்யுங்கள்

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான கலைப் பயணம்: திஹாரியில் கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட கலைஞர் ஞெய் ரஹீம் சஹீத்.இலங்கை வானொலி மற்றும்...
29/08/2026

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான கலைப் பயணம்: திஹாரியில் கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட கலைஞர் ஞெய் ரஹீம் சஹீத்.

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கலை மற்றும் ஒலிபரப்புப் பணியாற்றி வரும் சிரேஷ்ட கலைஞரும் அறிவிப்பாளருமான கலாபூஷணம் ஞெய் ரஹீம் சஹீத் கௌரவிக்கப்பட்டார்.

1963ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் முஸ்லிம் மற்றும் தமிழ்ச் சேவைகளுக்கான கலைஞர் தேர்வுகளில் வெற்றி பெற்ற இவர், அறிவிப்பாளர், நடிகர், பாடகர் என பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார்.

குறிப்பாக, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அபு நானா’ நாடகத்தில் இவர் ஏற்ற ‘ஆரிபா தாத்தா’ கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

இலங்கை தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்களிலும் இவர் தனது கலைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

‘கலைத் தாரகை’, ‘நவரசத் திலகம்’, ‘முத்தமிழ் தாரகை’, ‘கலாபூஷணம்’ உள்ளிட்ட பல கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், 2025ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் நூற்றாண்டு விழாவையொட்டி களனி பல்கலைக்கழகத்தினால் வானொலி வளர்ச்சிக்கு பங்களித்த முன்னோடிகளில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற “ரேடியோ மீலாத் 2026” நிகழ்வில், முஸ்லிம் சேவைக்கும் கலைத்துறைக்கும் ஆற்றிய நீண்டகால பங்களிப்பைப் பாராட்டி கலாபூஷணம் ஞெய் ரஹீம் சஹீத் கௌரவிக்கப்பட்டார்.

--- திஹாரிய நியூஸ் ---

29/08/2026

சவால்கள் மிகுந்த யுகத்தில் நேர்-மைய பெற்றோரியம் "
அஷ்ஷெய்க் றவூப் ஸெயின்
Video: Avathani Media.lk

29/08/2026
உன் கதையை முடிப்பவன் மனிதன் அல்ல.உன் ஆயுளை நிர்ணயிப்பவன் அல்லாஹ்நேபாளத்தில் பேரழிவு அனைத்தையும் புரட்டிப் போட்டது ஆனால் ...
29/08/2026

உன் கதையை முடிப்பவன் மனிதன் அல்ல.
உன் ஆயுளை நிர்ணயிப்பவன் அல்லாஹ்

நேபாளத்தில் பேரழிவு அனைத்தையும் புரட்டிப் போட்டது ஆனால் அதன் மத்தியிலிருந்த ஒரு வீடு மட்டும் தப்பியது!
அதுவும் அந்த வீட்டில் இருந்த முழு குடும்பமும் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.

சில காட்சிகள் நமக்கு ஒரு பெரிய உண்மையை நினைவூட்டுகின்றன:

உயிரைக் காப்பவன் வீடல்ல… அல்லாஹ்!

உன் உயிர் வாழ வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால்,
கடலின் நடுவே கப்பல் கவிழ்ந்தாலும்…
அலைகளுக்கு மத்தியில் இருந்தும் அல்லாஹ் உன்னை காப்பாற்றுவான்!

ஆகவே வாழ்க்கையில் எவ்வளவு சோதனை வந்தாலும் துவண்டு விடாதே…

உன் கதையை முடிப்பவன் மனிதன் அல்ல.
உன் ஆயுளை நிர்ணயிப்பவன் அல்லாஹ்! 🤍

“அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த உயிரும் மரணிப்பதில்லை; அது நிர்ணயிக்கப்பட்ட காலமாகும்.”
(அல்குர்ஆன் 3:145)

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை…
அவன் உனக்காக எழுதியது உன்னைத் தவறாமல் வந்து சேரும்.

china fort

கோதுமை மாவின் விலை 17 ரூபாய் அதிகரித்தது
29/08/2026

கோதுமை மாவின் விலை 17 ரூபாய் அதிகரித்தது

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நாளை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்திற்கு வருகிறார் அக்கரைப்பற்றில் இ...
29/08/2026

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நாளை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்திற்கு வருகிறார்

அக்கரைப்பற்றில் இளைஞர் , விளையாட்டு சமூகத்துடன் விசேட சந்திப்பு!

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அதம்பாவா அபூபக்கர் அவர்களுடன் இணைந்து அக்கரைப்பற்று பொது மைதானத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

📅 திகதி: 30.08.2026 – ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்: மாலை 4.00 மணி
📍 இடம்: அக்கரைப்பற்று பொது மைதானம்

இளைஞர்களின் எதிர்காலம், விளையாட்டுத்துறையின் வளர்ச்சி மற்றும் பிரதேசத்தின் விளையாட்டு வாய்ப்புகள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடுவதற்கான ஒரு முக்கிய சந்திப்பாக இது அமையும்.

அக்கரைப்பற்று பிரதேசத்தின் அனைத்து விளையாட்டுக் கழகங்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🤝 ஒன்றிணைவோம்!
⚽ விளையாட்டை வளர்ப்போம்!
🚀 இளைஞர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்!

செப்டம்பர் 8 முதல் நான்கு நாட்களுக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.
29/08/2026

செப்டம்பர் 8 முதல் நான்கு நாட்களுக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.

ஜனாஸா அறிவித்தல்அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும்   அட்டாளைச்சேனை வசிப்பிடமாகக் கொண்ட எஸ். யூசுப் (NWSDB) இன்று (29)  காலமான...
29/08/2026

ஜனாஸா அறிவித்தல்

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும்
அட்டாளைச்சேனை வசிப்பிடமாகக் கொண்ட எஸ். யூசுப் (NWSDB) இன்று (29) காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

இவர் ரிசார்ட், நஸ்ரின் Nasreen Yousuff ஆகியோரின் தந்தைமாவார்.

ரபீக் ,ஐயூப், சபீக் (வன இலாகா)
இர்ஷாத், றிஸான் (முன்பள்ளி பாடசாலை பணியகம்), அஷ்ரப் நிஷா (ஓய்வுபெற்ற டீச்சர்) மர்ஹும் நஸீறா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்

நல்லடக்க விபரம்
தைக்கா நகர் ஜும்மா பள்ளிவாசலில் காலை 10 மணிக்கு தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நடை பெறும்

29/08/2026

போன் அதிகமாக பாவிக்கும் பிள்ளைகளுக்கு கிரகிக்கும் திறன் குறைவு
(3min) அஷ்ஷெய்க் ரஊப் செயின்
முழுமையாக பார்க்க https://youtu.be/NO_pDGjLTwM?si=brRPmISSlMTHRWgG

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 100 பேர் உயிரிழக்கின்றனர்.
29/08/2026

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 100 பேர் உயிரிழக்கின்றனர்.

Address

615, Main Street
Akkaraipattu

Alerts

Be the first to know and let us send you an email when Akp News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share