16/11/2025
தாழமுக்கம்:
நேற்றைய தினம் வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, தற்போது இலங்கையின் கிழக்காக காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போதும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன்,
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 01.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
இந்த தாழமுக்க பகுதியானது மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து,
இலங்கையின் தெற்காக - குமரிக்கடல் வழியாக - அரபிக் கடல் நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் பின்னர் இதேபோன்று இம்மாத இறுதிவரை மேலும் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக இருக்கின்றது.
எதிர்வரும் 20ஆம் திகதியளவில் உருவாக இருக்கின்ற இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப் பகுதியினுள் பெரும்பாலும் ஒரு சூறாவளியாக ஒரு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு இது ஒரு சூறாவளியாக வலுவடையுமானால் இதற்கு
New Delhi இல் உள்ள பிராந்திய விஷேட வானிலை மையத்தினால் (RSMC - Regional Specialized Meteorological Center)
ஐக்கிய அரபு அமீரகத்தினால் (United Arab Emirates) பரிந்துரை செய்யப்பட்ட SENYAR (pronounce as Sen-Yaar) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.
இதேவேளை நேற்றைய தினம் (15.11.2025) இலங்கையில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக யாழ்ப்பாணம் மாவட்டம் அச்சுவேலி பிரதேசத்தில் 61.4mm மழை வீழ்ச்சியும்,
அது கூடிய வெப்பநிலையாக அம்பாந்தோட்டை பிரதேசத்திலும் 32.1c வெப்பநிலையும்,
அதை குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா பிரதேசத்திலும் 12.0c வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள்:
மட்டக்களப்பு: 12.0mm,
நவகிரி: 16.0mm,
தும்பன்கேணி: 33.0mm,
உன்னிச்சை: 15.2mm,
உறுகாமம்: 27.8mm,
வாகனேரி: 19.6mm,
கட்டுமுறிவுகுளம்: 8.0mm.
-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி)