தமிழ் letter

தமிழ் letter Our Channel discusses the Current Political Trends, Social Issues, Sports, Entertainment and all the interesting news feeded with Truth... Truth and Truth Only
(1)

04/07/2025
கிராம சேவகர் ஐ.எல் றக்சானா அவர்களுக்கு சேவை நலன் பாராட்டி நினைவு சின்னம் வழங்கி கௌரவிப்பு!சம்மாந்துறை பிரதேச கருவாட்டுக்...
04/07/2025

கிராம சேவகர் ஐ.எல் றக்சானா அவர்களுக்கு சேவை நலன் பாராட்டி நினைவு சின்னம் வழங்கி கௌரவிப்பு!

சம்மாந்துறை பிரதேச கருவாட்டுக்கல் 2
கிராம சேவகர் பிரிவில் (15/9/2017- தொடக்கம் 11/6/2025) வரை தனது கடமையை பொறுப்பு எடுத்து சிறந்த சேவைகளை மக்களுக்காக பணியாற்றியவர்
மக்களோடு அன்பாக பழகியதோடு நேரம் காலம் பார்க்காமல் தனது சேவையை வழங்கியவர் தற்போது அவருக்கு கிடைத்த இடம் மாற்றம் மூலம் வேறு கிராம சேவகர் பிரிவில் தனது தனது சேவையை வழங்கி வருகிறார் அவர்களின் சேவை நலன் பாராட்டி ஐ எல் றக்சானா அவர்களுக்கு நினைவு
சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டது இந்த நிகழ்வு அவர்களின் இல்லத்தில் 4/7/2025 வெள்ளி கிழமை இடம் பெற்றது

இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்த Social Unity Youth Club (SUYC) தலைவர் ஊடகவியலாளர் எஸ். முபாறக் அஸ்லம் அவர்களின் தலைமையில் பொருளாளர் எஸ் எம் அஸ்றிப் மற்றும் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் கருவாட்டுக்கல் 2 ஆலோசனை குழுவின் பிரதேச உறுப்பினர்களான வீ.எம் .பாஹிம்.ஏ எம் பழில் பீ.எம் அஸ்ரப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆய்வாளர் சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு அக்கரைப்பற்று மண்ணைச் சேர்ந்த சட்டத்தரணி சர்ஜூன் ஜம...
04/07/2025

ஆய்வாளர் சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு

அக்கரைப்பற்று மண்ணைச் சேர்ந்த சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும். சாட்சியாகும் உயிர்கள். எம்.எச்.எம்.அஷ்ரப் மரணம் என்பன தொடர்பான மூன்று நூல்களை இன்று அக்கரைப்பற்று அய்னா கடற்கரை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

*ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தில் கோட்ட மட்ட கணித முகாம் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.*அட்டாளைச்சேனை கோட்ட மட்ட ஆரம்...
03/07/2025

*ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தில் கோட்ட மட்ட கணித முகாம் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.*

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கான கணித முகாம் (Maths Camp) இன்று (03.07.2025) பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது. இக்கணித முகாமில் தரம் 03 , 04 , 05 மாணவர்களின் புத்தாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் A.R.M. றிம்ஸான் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு அல்-மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு அதிதிகளாக அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி பணிப்பாளர் M.H.M. றஸ்மி, பாடசாலை இணைப்பாளர் M.N.F. நழீர் , ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் M.A.C.M.ஜுஹைஸ் , பொத்துவில் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் A.L.M. இப்றாகீம் , தெற்கு பாத்திமா வித்தியாலய அதிபர் I.L. அர்சாத் அலி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இக்கணித முகாமை பார்வையிடுவதற்காக ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

அதிபர்
அல்-மதீனா வித்தியாலயம்

🔸மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம்...
02/07/2025

🔸மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்துகொண்டார்.

இதன்போது, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ரூபா. 450 மில்லியன் கிராமிய வீதி அபிவிருத்திக்திக்கும், மேலதிகமாக ரூபா 250 மில்லியன் இந்த வருடத்திற்குள் செலவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தார்.

1 - கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதான வீதியில் சனநெரிசல் மிக்க சா சந்தியிலௌ வீதி சமிக்கை விளக்கு அமைத்தல்.

2 - ஏறாவூர் பஸ் டிப்போவிற்கான நிருவாகம் கட்டிடம் அமைத்தல்.

3 - மூடப்பட்ட றிஜிதென்ன பஸ் டிப்போவினை மீள திறத்தல்.

4 - காத்தான்குடி பிரதேசத்தில் இயங்காமல் இருக்கின்ற வீதி சமிக்கை விளக்கு தொகுதியினை இயங்க வைத்தல்.

5 - முன்னைய அரசில் ஐ வீதி திட்டதில் முடிக்கப்படாத வீதிகளை இணம்கண்டு, தற்போதை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் T5 வேலைத்திட்டத்தில் உள்வாங்கி, மட்டக்களப்பு மாவட்டத்தில் புணரமைக்கப்படாத அனைத்து வீதிகளையும் T5 திட்டத்தில்உள்வாங்குதல்.

6 - மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய இலங்கை போக்குவரத்து சபையில் நவீன புதிய பஸ்கள் பாவனையில் இல்லாமல் இருப்பதால் புதிய பஸ்களை வழங்குதல்.

7 - மட்டக்களப்பு - கொழும்பு பிரதான புகையிரத பெட்டிகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்தல்.

8 - தற்போது நிறுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு - யாழ்பாணம் புகையிரத சேவையை மீள ஆரம்பித்தல்.

9 - வெளிநாட்டு சுற்றுலாப்பணிகள் பார்வையிட வரும் கல்லடி பாலத்தினை பாராமரித்தல்.

10 - வீதி அபிவிருத்தி அதிகார சபை பராமரிப்பிலுள்ள மின் விளக்குகளை மாற்றுதல்.

11 - ரத்மலான - மட்டக்களப்பு விமான சேவையை மீள ஆரம்பித்தல்.

போன்ற பல்வேறு முன்மொழிகள் முன்வைக்கப்பட்டதுடன் அனைத்தும் விடயங்ளுடம் விரிவாக பரிசீலிக்கப்பட்டு கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சில் செயலாளர்,போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

- ஊடகப்பிரிவு

*ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தில் கோட்ட மட்ட கணித முகாம்*அட்டாளைச்சேனை கோட்ட மட்ட ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கான கணி...
02/07/2025

*ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தில் கோட்ட மட்ட கணித முகாம்*

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கான கணித முகாம் (Maths Camp) இன்ஷா அல்லாஹ் நாளை (03.07.2025) வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம் பெறவுள்ளது. இக்கணித முகாமில் தரம் 03 , 04 , 05 மாணவர்களின் புத்தாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் A.R.M. றிம்ஸான் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி M. மயூரன் , கௌரவ அதிதிகளாக கோட்டக்கல்வி பணிப்பாளர் M.H.M. றஸ்மி, விளையாட்டு இணைப்பதிகாரி A.L.M. பாயிஸ், பாடசாலை இணைப்பாளர் M.N.F. நழீர் ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அதிபர்
அல்-மதீனா வித்தியாலயம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக உவைஸ் தெரிவு செய்யப்பட்டார் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அட்டாளை...
02/07/2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக உவைஸ் தெரிவு செய்யப்பட்டார்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறியுள்ளதால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களது வாக்களிப்பின் மூலம் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி தலைமையில் இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.

இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் வாக்களிப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 18 உறுப்பினர்கள் இருக்கத்தக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எட்டு உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நான்கு உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி மூன்று உறுப்பினர்களையும் தேசிய காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும். ஐக்கிய மக்கள் சக்தி ஒரு உறுப்பினரையும் பெற்றுக் கொண்டன.

இந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன இணைந்து முறையே தவிசாளர் பிரதித் தவிசாளர் பதவிகளை பகிர்ந்து கொண்டனர்.

மூன்று வருடங்களில் மாபெரும் சாதனை சட்டத்தரணி எம்.ஐ.எம்.இர்பான் நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தலைவராக ஏகமானதாக தெரிவு ...
02/07/2025

மூன்று வருடங்களில் மாபெரும் சாதனை

சட்டத்தரணி எம்.ஐ.எம்.இர்பான் நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தலைவராக ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.

சட்டத்தரணி இர்பான் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் நிந்தவூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றார்.

நிந்தவூர் பிரதேசத்தில் மூன்று வருடங்களாகவே வாழ்ந்து வருகின்ற இர்பான் அப் பிரதேசத்தின் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மோட்டார் சைக்கிள் விபத்தில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு கரன் கிளிநொச்சி பூநகரியில்  இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விப...
02/07/2025

மோட்டார் சைக்கிள் விபத்தில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு

கரன்

கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபருக்கு மேலதிக சிகிச்சை வழங்கும் நோக்கில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது நிலைமை தீவிரமாக மாற்றமடைந்ததால்,உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

"இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியமொன்றை அமைக்க அங்கிகாரம் தாருங்கள்.- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ...
02/07/2025

"இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியமொன்றை அமைக்க அங்கிகாரம் தாருங்கள்.

- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு..!

(எஸ். சினீஸ் கான்)

இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (2) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பைத்துல்மால் நிதியம்' என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

இங்கையிலும் இவ்வாறதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் இவ்வாறதொரு நிநியத்தினை இலங்கையில் ஆரம்பிப்போமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களதின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மஸ்கெலியா பிரதேச சபையின் ஆட்சியை சுயெட்சைக் குழு கைப்பற்றியுள்ளது சுயெட்சைக் குழு சார்பாக போட்டியிட்ட கந்தையா ராஜ்குமார்...
02/07/2025

மஸ்கெலியா பிரதேச சபையின் ஆட்சியை சுயெட்சைக் குழு கைப்பற்றியுள்ளது

சுயெட்சைக் குழு சார்பாக போட்டியிட்ட கந்தையா ராஜ்குமார் தவிசாளாராக தெரிவு செய்யப்பட்டார்

தெரிவு தவிசாளர் கந்தையா ராஜ்குமார் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

Address

NO 132 Central Road Addalaichenai 15
Akkaraipattu
32350

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் letter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ் letter:

Share

Category