Miz tv tamil

Miz tv tamil Bringing community-based useful information to people

குரங்குகளால் 100 மில்லியன் தேங்காய்கள் நாசம்இலங்கையில் குரங்குகளால் 100 மில்லியன் தேங்காய்கள் நாசமாகியுள்ளதாக கூறப்படுகி...
11/03/2025

குரங்குகளால் 100 மில்லியன் தேங்காய்கள் நாசம்

இலங்கையில் குரங்குகளால் 100 மில்லியன் தேங்காய்கள் நாசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் மந்திகள், குரங்குகள், மர அணில்கள், மற்றும் மயில்கள் ஆகிய விலங்குகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதின் காரணமாக இந்த மாதம் 15 ஆம் திகதி விலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

விலங்கு கணக்கெடுப்பிற்கான செலவு செய்துள்ள தொகை குறைவானது எனவும் ,சேவை வழங்கும் அதிகாரிகள் சுயேச்சையாக முன் வந்துள்ளதாகவும் விவசாய, கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பீ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்த போதிலும் அதற்காக இதுவரை முறையான மதிப்பீடுகள் மேற்கொள்ளாமையை அடிப்படையாகக் கொண்டு இந்த யோசனை முன்மொழியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த கணக்கெடுப்பு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான தீர்வாக அமையாது எனத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

குரங்குகள் உட்பட பல்வேறு விலங்குகளால் கடந்த வருடத்தில் எதிர்பார்த்த தேங்காய் அறுவடையில் 100 மில்லியன் தேங்காய்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்

தமிழ் பேசும் சமூகங்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு மூத்த தமிழ் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்புச் செய...
18/02/2025

தமிழ் பேசும் சமூகங்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு மூத்த தமிழ் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளனர்.

கே எ ஹமீட்

"மெட்டுப் போடு" நூல் வெளியீட்டு விழாவில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவிப்பு

தமிழ் பேசும் சமூகங்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு மூத்த எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்பு வழங்கி வந்தனர் என கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் "மெட்டுப் போடு" நூல் வெளியீட்டு விழா பாலமுனை அமீர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்…

நமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மூத்த எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்பு வழங்கி வந்தனர். நாம் எப்போதும் எமது சமூகத்திற்காக அர்ப்பணிப்போடு பங்களிப்பு வழங்கிய மூத்த எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் கெளரவிக்க வேண்டும். எமது மூத்த தமிழ் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் நமது மக்களின் உணர்வுகளை தற்கால மக்கள் மத்தியில் வெளிக் கொண்டு வர வேண்டும். நமது சமூகத்தின் பேராசிரியர்களும், கல்விமான்களும் நமது சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பேராசிரியர்களான அனஸ், றமீஸ், அப்துல்லாஹ் ஆகியோர்களின் பங்களிப்பு குறித்து நமது சமூகம் ஆறுதல் அடைகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை மன்றக் கல்லூரியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் (பா.உ) அவர்களினால் உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அனஸ் அவர்கள் கடந்த காலங்களில் நமது முஸ்லிம் சமூகம் இனவாதிகளினால் பாதிக்கப்பட்ட வரலாற்றினை நினைவுபடுத்தியதுடன், முஸ்லிம் சமூகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரும் பேச வேண்டும், நமது முஸ்லிம் சமூகம் தொடர்பான பதிவுகளை இட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அண்மைக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தன. இவைகளை நமது முஸ்லிம் சமூகம் யதார்த்தபூர்வமாக இப்போதுதான் உணர்ந்துள்ளனர். நமது முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம். அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயாக்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் வாழும் எல்லா இன மக்களும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட நாள் ஒன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். பௌத்த மக்கள், இந்து மக்கள், கிறிஸ்தவ மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நாள் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான எந்த விடயங்களும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலமை உள்ளது எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்..!!(எஸ். சினீஸ் கான்)எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்...
18/02/2025

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்..!!

(எஸ். சினீஸ் கான்)

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றிய கலந்துரையாடலொன்று
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது.

இதன்போது கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். நழீம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோர் உட்பட, கொழும்பு மாவட்ட மத்திய குழுவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கமிட்டியினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றி தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்த உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம...
21/01/2025

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்த உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்து அர்ச்சுனா தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று (21) காலை பாராளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வாகனத்தில் விஐபி (VIP) விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காலை பாராளுமன்றத்திற்கு சென்ற வேளை..
இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

இந்நிலையில், ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார் மொட்டுக்கட்சி ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான ந...
20/09/2024

பஸில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்

மொட்டுக்கட்சி ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று (09/20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

பசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் துபாய்க்கு சென்றுள்ளார்.

பசில் ராஜபக்ஷ இந்த விமான சேவைக்காக 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Gold Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பசில் ராஜபக்ஷ துபாய் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்வார் எனவும் அவர் அமெரிக்கா செல்வதற்கு எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிப...
19/09/2024

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்திருந்தது.

18/09/2024
மாறும் வரலாறு முல்லைத்தீவு
01/09/2024

மாறும் வரலாறு
முல்லைத்தீவு

16 வயது மாணவி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 16 வயதான மாணவி சாதனை!சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு  மும்பையைச் சேர்ந்த  'காம...
30/05/2024

16 வயது மாணவி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 16 வயதான மாணவி சாதனை!

சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு மும்பையைச் சேர்ந்த 'காம்யா கார்த்திகேயன்' என்ற 16 வயதான பாடசாலை மாணவியொருவர் நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற பெருமையைக் குறித்த மாணவி பெற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவிக்கு நேபாள பிரதமர் தமது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கசிவை ஏற்புடுத்திய இந்திய கப்பல் பிடிக்கப்பட்டதுகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கச...
30/05/2024

எரிபொருள் கசிவை ஏற்புடுத்திய இந்திய கப்பல் பிடிக்கப்பட்டது

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள நிலையில்இ எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்இ கப்பலில் இருந்து ஹைட்ராலிக் எண்ணெய் கசிந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்கு சொந்தமான நிறுவனமும் தவறை ஏற்றுக் கொண்டு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த இந்திய கப்பலின் கெப்டன் நாட்டை விட்டு வௌியேறுவதை தடுக்கும் வகையில் அவருக்கு பயணத்தடை விதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு துறைமுக பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவுடன் அமெரிக்க தூதுவர் திடீர் சந்திப்பு!இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அம...
29/05/2024

தேர்தல் ஆணைக்குழுவுடன் அமெரிக்க தூதுவர் திடீர் சந்திப்பு!

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தனது x வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார்.

தேர்தலுக்கான திட்டங்கள் மற்றும் வெளிப்படையான செயல்முறையை நிலைநிறுத்துவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடனான சந்திப்பு பாராட்டுக்குரியது. இலங்கை. அமெரிக்கா மற்றும் பல நாடுகள் இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதால் ஜனநாயக ஆட்சியின் தூணாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.' என அவர் தனது x பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Address

Akkaraipattu
32350

Telephone

+94785124505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miz tv tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miz tv tamil:

Share

Category