13/12/2022
|| பாவத்தை ஷைத்தான் அலங்கரித்துக் காட்டும் விதம் ||
✨ போதைப்பொருளுக்கு அல்லது ஒரு பெரிய பாவத்துக்கு அடிமையான ஒருவரைப் பார்க்கும் போது, “எமது உள்ளங்கள் இயல்பாகவே வெறுக்கக்கூடிய பாவங்களை எவ்வாறு இம் மனிதர் செய்கிறார்” என்று ஒரு சாதாரண மனிதர் சிந்திக்கலாம்.
✨உண்மை என்னவென்றால், பாவம் அடிப்படையில் அசிங்கமானது, அருவருக்கத்தக்கது. ஆனால் ஒரு மனிதர் ஒரு பாவத்தை மீண்டும் மீண்டும் செய்யும் போது, ஷைத்தான் அப் பாவத்தின் மீதுள்ள வெறுப்பை நீக்கி, அப் பாவத்தை அம் மனிதருக்கு விருப்பத்துக்குரிய ஒரு செயலாகக் காண்பிக்கின்றான். அப்படியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை விட்டும் நாம் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கேட்க வேண்டும்.