Online Breaking News

Online Breaking News Uthayan IT Island
357, Kasthuriyar Road, Jaffna. NEWS- WWW.ONLINEUTHAYAN.COM
RADIO- WWW.UTHAYANRADIO.COM
EPAPER- WWW.EUTHAYAN.COM

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரி*ழந்துள்*ளார்.இன்று அதிகாலை...
10/02/2026

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரி*ழந்துள்*ளார்.

இன்று அதிகாலை(10.02.2026) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரி*ழந்துள்*ளார்.

இன்று அதிகாலை குறித்த சிறுவன் உட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் ஹையேஸ் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தவேளை வீதி கடமையில் இருந்த பொலிஸார் அவர்களை வழி மறித்தனர். பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்தமையால் பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தினர்.

துப்பாக்கி சூட்டில் சித்தங்கேணியை சேர்ந்த குறித்த சிறுவன் ப*லியா*கியுள்ளார். அவருடன் சென்ற நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



04/02/2026

🔏 இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு இணைந்து கிளிநொச்சியில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தன.🔏

🔏 போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 🔏



😢 வலி.வடக்கு தையிட்டி ஆவளை சந்திக்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வா...
02/02/2026

😢 வலி.வடக்கு தையிட்டி ஆவளை சந்திக்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 😢

உயிரிழந்தவர் தையிட்டி பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

😢 இன்று காலை அவர் தனது துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்தின் தீவிரத்தால் அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார். 😢

சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

😢 விபத்து தொடர்பாக மயிலிட்டி இராணுவ காவல்துறையினா் மற்றும் பலாலி பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.😢

இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



🏫 திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உட்பட...
02/02/2026

🏫 திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உட்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 9ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

🏫 திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பிரதான நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன் இந்த உத்தரவை இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளார்.



😢 கிளிநொச்சியில் பாம்பு தீண்டிய இளைஞர் ஒருவர் உயி*ரிழந்து*ள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.😢 கிளிநொச்சி, கல்மடுநகர...
07/01/2026

😢 கிளிநொச்சியில் பாம்பு தீண்டிய இளைஞர் ஒருவர் உயி*ரிழந்து*ள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

😢 கிளிநொச்சி, கல்மடுநகரைச் சேர்ந்த சிறிகாந்தன் கிருசிகன் என்ற 23 வயதான துடிப்பான இளைஞனே பரிதாபகரமாக உயிரி*ழந்து*ள்ளார்.

😢 கல்மடுநகரில் ஆலய வளாகம் ஒன்றைச் சிரமதானம் மூலும் துப்புரவாக்கியபோது இளைஞனைப் பாம்பு தீண்டியுள்ளது. அவர் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

😢 இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயி*ரிழந்து*விட்டார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் அவரது சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.



02/01/2026

👉 நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி, வலி.வடக்கு தையிட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை விடயத்தில் நேரடியாகக் களமிறங்கியிருக்கின்றார்.

👉 தையிட்டில் பொதுமக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை அகற்றப்பட்டு, பொதுமக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நாகதீப விகாரையின் விகாராதிபதி, ஈன்று தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களை நேரில் சந்தித்திருக்கின்றார்.

👉 அதேவேளை, தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், சிங்கள மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதற்காக சிங்கள மொழியில் தென்னிலங்கைளை ஊடகங்களில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதற்கு வலி.வடக்கு பிரதேச சபை இன்று தீர்மானித்துள்ளது.

👉 சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரைக்கு முன்பாக “இதுவொரு சட்டவிரோதக் கட்டடம்” என்ற அறிவிப்புப் பலகையை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தவும் வலி.வடக்கு பிரதேச சபை தீர்மானம் எடுத்திருக்கின்றது.

👉 ஆனால் அவ்வாறான அறிவிப்புப் பலகை நடப்பட்டால் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் வலி.வடக்குப் பிரதேச செயலருக்கு கடிதம் மூலம் அறிக்கப்பட்டுள்ளது.

👉 மறுபுறத்தில், போயா தினமான நாளை தையிட்டில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக்கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

👉 இந்தப் பின்னணியிலேயே, நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி, வலி.வடக்கு தையிட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை விடயத்தில் நேரடியாகக் களமிறங்கியிருக்கின்றார்.

👉 கடந்தவாரம் அவர் வெளியிட்டிருந்த சமூக வலைத்தள நேரலை ஒன்றில், தையிட்டி விகாரைப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு நியாயமான தீர்வை வழங்காவிட்டால், தாம் தமிழ் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய நிலைமை உருவாக்கும் என்று தெரிவித்திருந்தார்.



😍 2026ஆம் ஆண்டு உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும், வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும். 🎇😍 இந்...
01/01/2026

😍 2026ஆம் ஆண்டு உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும், வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும். 🎇

😍 இந்தப் புதிய ஆண்டிலும் எமது பிணைப்பு மேலும் வலுவடைந்து, உண்மைகளை உரக்கச் சொல்லும் எமது பயணம் தொடரும்.



🤔 தையிட்டி விகாரையைச் சூழவுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை எந்தவிதப் புதிய கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என்று விக...
31/12/2025

🤔 தையிட்டி விகாரையைச் சூழவுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை எந்தவிதப் புதிய கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என்று விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார்.

🤔 வழமையான வழிபாடுகளுக்கு மேலதிகமாக எந்த விசேட வழிபாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த தேரர், தெற்கில் இருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுகின்றது என்றும், எதிர்வரும் 3ஆம் திகதி விசேட பெரஹரா நடைபெறவுள்ளது என்றும் வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.

🤔 அவ்வாறான நடவடிக்கைகளுக்கு விசேட அனுமதி வழங்கவில்லை என்றும், அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

🤔 விகாரை விடயத்தில் சட்டவிரோதச் செயல் என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்தால் அதை ஏற்கவும் தயார் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

🤔 அதேவேளை, தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை, பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் பொதுமக்கள் எதிர்ப்புகளையும் மீறி இராணுவத்தினரின் உதவியுடன் இரகசியமாகவே கட்டி முடிக்கப்பட்டிருந்தது.



😢 வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குளித்துக் கொண்டிருந்தபோது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட...
30/12/2025

😢 வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குளித்துக் கொண்டிருந்தபோது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போன இளைஞனின் சடலம், இன்று (30) செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.

😢 சம்பவத்தில் ஆழியவளைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜெசிந்தன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

😢 இந்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் பொழுதுபோக்குக்காக தாளையடி கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தவேளை, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் அலையால் அவர் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, காணாமல் போயிருந்தார்.

😢 கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பகுதி மீனவர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

😢 சம்பவ இடத்துக்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



🧐 கடந்த ஜனவரி மாதம் மன்னார் நீதிமன்றத்தின் முன்பாக இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஒட்பட இருவர்...
29/12/2025

🧐 கடந்த ஜனவரி மாதம் மன்னார் நீதிமன்றத்தின் முன்பாக இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஒட்பட இருவர் நேற்றுப் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🧐 பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விடுதி ஒன்றில்வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

🧐 கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Address

Allaipiddy

Alerts

Be the first to know and let us send you an email when Online Breaking News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share