Team Marsath

Team Marsath 'ஊரின் தன்மானம் காக்க வந்த நமது ஊரின் தங்க மகன்' "உலகறியச் செய்யும் ஊரின் ஒரே ஒரு ஊடகம்"

அக மகிழ வாழ்த்துகிறேன்....!
10/08/2025

அக மகிழ வாழ்த்துகிறேன்....!

21/07/2025
“விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த பங்களாதேஷில் ஏற்பட்ட விமான விபத்து சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன...
21/07/2025

“விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த பங்களாதேஷில் ஏற்பட்ட விமான விபத்து சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
அரசியல் செயற்பாட்டாளர் மர்ஷாத் இரங்கல் செய்தி."

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”
இந்த துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏர் இந்தியா விமான விபத்து ...
பங்களாதேஷில் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து டாக்கா நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சோகமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

-ஊடக பிரிவு-

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அரசியல், சமூக செயல்பாட்டாளர் மர்ஷாத் வாழ்த்து தெரிவித்த...
11/07/2025

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அரசியல், சமூக செயல்பாட்டாளர் மர்ஷாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

மாணவர்களாகிய உங்களின் இந்த வெற்றிக்கு நீங்கள் மேற்கொண்ட அயரா முயற்சிகள் மாத்திரமின்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் அபரிமிதமானது கலந்துள்ளது. அந்தவகையில், மாணவர்களாகிய உங்களின் உயர்ச்சியில் பங்களிப்பு நல்கிய ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், பாராட்டுகின்றேன்.

கல்விக்கான முதற்படியை தாண்டி உயர்கல்வியில் கால்வைக்கின்றீர்கள்.எனவே எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.

பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாதவர்கள் மனம் தளர வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பரீட்சை மாத்திரமே எனவே மனஞ் சோராது மீண்டும் முயற்சி செய்து பரீட்சையில் வெற்றிபேறுங்கள்.

ஊடகப்பிரிவு

30/06/2025

The game; Goal ❤️😄

தலைவர் ஹக்கீமும் எனது தந்தையும் 🥰-Admin -
19/06/2025

தலைவர் ஹக்கீமும் எனது தந்தையும் 🥰

-Admin -

💜💚
19/06/2025

💜💚

மு.கா.தலைவர்-ரவூப் ஹக்கீம்,
எனது தந்தையும் அன்மையில் நேருக்கு நேர் சந்தித்து மகிழ்ந்தனர்.

எனது சிறுவயதில் இருந்து எனது வாப்பாவுக்கு மு.கா.கட்சி மீது அளவு கடந்த பிரியம் எனக்கு அது சரிவராது.

பதற்றப்படாத உடல்மொழி,
அவசரம் இல்லாத வாக்கியங்கள்,
புன்னகையில் நனைந்துவரும் வார்த்தைகள்,
எதிராளியைப் பேசவிட்டுக் கேட்கும்
பெருந்தன்மை,
சக மனிதர்மீது அக்கறை
இவையெல்லாம் தலைமைப் பண்புகளின்
தனிக் குணங்கள்.

வாய்த்திருக்கிறது தலைவர் ஹக்கீம் அவர்களை நேரில் சந்தித்து மகிழ்வதற்கு எனது தந்தைக்கு...

இருவரும் பேசி மகிழ்ந்து வாழ்த்தி
விடைகொண்டனர்....!

07/06/2025

𝐇𝐀𝐏𝐏𝐘 𝐄𝐈𝐃'𝐋 𝐀𝐃𝐇𝐀 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊 𝐓𝐎 𝐀𝐋𝐋!

Wishing you a joyful Eid filled with peace, love, and delicious moments shared with family and friends. Eid Mubarak!

MRM.Marsath

-Media unit -

சகோதரத்துவமும் அன்பு குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட உலகமெங்கும் வாழும் ,அனைத்து நண்பர்களுக்கும் ஹஜ்ஜு பெருநாள் நல் வ...
06/06/2025

சகோதரத்துவமும் அன்பு குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட
உலகமெங்கும் வாழும் ,அனைத்து நண்பர்களுக்கும் ஹஜ்ஜு பெருநாள்
நல் வாழ்த்துக்கள் ! எம்.ஆர்.எம்.மர்ஷாத்

“புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் என் அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்”என அரசியல் செயற்பாட்டாளர் மர்ஷாத் வெளியிட்டுள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வெளிநாடுகளிலும் தாய்நாட்டிலும் ஈதுல் அழ்ஹா ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் என் அன்பின் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் மழை பொழிய வேண்டும், அவர்களது வாழ்க்கை வளம்பெற வேண்டும், இறை கருணையில் அவர்கள் நிழல்பெற வேண்டும் என்று ஏக இறையோன் அருளாளனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்.

எனவே எமது மார்க்கம் சமாதானத்துக்கானது என்ற தூதையும் நாங்கள் தேசத்தின் நல்லாட்சிக்கான பங்காளர்கள் என்ற செய்தியையும் சகோதர சமூகங்களுக்கு சிறப்பாக சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அதற்கு முன் நாமே இந்த பேருண்மையை புரிய வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
இப்ராஹீம் (அலை) அவர்களது வாழ்வியல் வரலாற்றின் உன்னத பாடத்தை புகட்டும் இப்புனித பெருநாளில், நாம் அனைவரும் திட சங்கற்பம் கொள்ள வேண்டும்.

எனவே நாம் அனைவரும் எம் தாய்த்திருநாட்டை பீடித்துள்ள ஊழல், இனவாதம், வறுமை, போதைப்பரவல், அடக்குமுறை, அந்நிய ஆதிக்கம், வேலையின்மை போன்றவற்றுக்கு எதிராக பாடுபட இப்புனித நாளில் உறுதி கொள்வோம். முஸ்லிம்களது மட்டுமன்றி முழு நாட்டினரதும் உரிமைகள் பாதுகாக்கப் படவும் , ஜனநாயக விழும்பியங்கள் இராணுவ சர்வாதிகாரத்துக்குள் காவுகொள்ளப்படாதிருக்கவும் விழிப்போடு செயற்படுவோம். இப்புனித நன்னாளில் எம் நாடு வளமாகவும் அனைவருக்கும் சுபீட்ஷமான நல்வாழ்வு கிட்டவும் இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் இது போன்ற நன்னாளை நற்சுகத்தோடும் சுபீட்ஷத்தோடும் நல்லருளோடும் மீண்டும் மீண்டும் வந்தடையச் செய்வானாக.
எம்மையும் உங்களையும் அவன் பொருந்திக் கொள்வானாக.
ஈத் முபாரக் - இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்.

-ஊடக பிரிவு-

01/06/2025

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!

நண்பர், தோழர் ஜெமீன் அவர்களின் திருமண பந்தத்தில் ஒன்றாக இணைந்த மகிழ்ச்சிகரமான தருணம்.

ஜெமீன் அந்த நேரம் அவர் கொஞ்சம் விசி.

Address

Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Marsath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share