05/06/2025
கற்றுக்கொண்ட மாணவர்களால் மிளிரும் தேசிய பாடசாலை
(ஏ.பி.ஏம்.இம்றான்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) இன் 2004/2007 பழைய மாணவர்களால் பாடசாலையின் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், பாடசாலை மைதானத்தில் உள்ள அரங்கத்திற்கு (Pavilion) புதிதாக வர்ணம் பூசுதல், விளையாட்டரங்கிற்கு பாடசாலையின் பெயர் அடங்கிய பெயர்ப்பலகை அமைத்தல், புதிய பிரதான நுழைவுவாயிலில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் பெயர்ப்பலகை நிறுவல் மற்றும் பாடசாலை வளாகத்தின் பாதுகாப்புக்கருதி கமராக்கள் (CCTV Cameras) பொருத்துதல் ஆகிய பணிகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு நிறைவு பெற்ற பணிகளை உத்தியோகபூர்வமாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் 08ம் திகதி 2025, ஞாயிற்றுக்கிழமை, பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பாக அறிவிப்பதில் 2004/2007 பழைய மாணவர்கள் ஒன்றியம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.
நன்றி.