𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ

𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ, Media/News Company, Amparai.

பாலமுனையில் மற்றும் ஒரு வீதி அபிவிருத்தி 48 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் ஆரம்பம்.தேசிய மக்கள் சக்தியின் கிராமிய ...
16/09/2025

பாலமுனையில் மற்றும் ஒரு வீதி அபிவிருத்தி 48 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் ஆரம்பம்.

தேசிய மக்கள் சக்தியின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம் - 2025 அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான பல வீதிகள் பிரேரிக்கப்பட்டு முதற்கட்டமாக 48 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணப் பணிகள் உத்தியோக பூர்வமாக இன்று ஆரம்பிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் இன்று (16.09.2025), பாலமுனை தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஹிறா நகர் வீதி,பாலமுனை -01 யில் அங்குரார்ப்பண வைபவம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Athambawa Aboobucker அவர்களால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நிகழ்வில் கிரிமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார் மற்றும் , பிரதேச செயலாளர், ,வீதி அபிவிருத்த அதிகார சபையின் பிரதான பொறியியலாளர், நிறுவேற்று பொறியியலாளர், பிராந்திய பொறியியலாளர், பாலமுனை தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள், மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் நடமாடும் சேவை தற்போது பிரதான வீதியிலுள்ள மசூர் சின்னலெவ்வை...
15/09/2025

அட்டாளைச்சேனை பிரதேச சபைனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் நடமாடும் சேவை தற்போது பிரதான வீதியிலுள்ள மசூர் சின்னலெவ்வை சந்தை சதுக்கத்தில் பொது மக்கள் தமது சேவைகளை உச்சாகமாக பெற்றுக் கொள்ளும் காட்சி..

மாலை 04.00மணி வரை சேவைகளை பெற்றுக் கொள்ள, வருகை தந்து பயன் பெறுமாறு பொதுக்களுக்கு அறியத்தருகிறோம்.

அரசாங்கத்தின் PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களிடம் விவசாயிகளின் வேண்டுக...
13/09/2025

அரசாங்கத்தின் PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களிடம் விவசாயிகளின் வேண்டுகோளுக்கினங்க 9.5 மில்லியன் செலவில் பாலமுனை அரசடி வீதிக்கான 105M கொங்ரீட் மற்றும் தடுப்புச்சுவர் இடுவதற்கான அங்குறாப்பன நிகழ்வு இன்று (13.09.2024) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, வீதி அபிவிருத்தி தினைக்கள பொறியியாளர் முனாஸ், அட்டளைச்சேனை பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் அதிகாரிகள்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார் மற்றும் அட்டளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் செய்யற்பட்டாளர்கள்,விவசாயிகள்,பொது மக்கள் என பலரும் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை SLMC மத்திய குழுவின் விசேட கலந்துரையாடல்...!!!(முகம்மட் அன்வர்)SLMC அட்டரளைச்சேனை மத்திய குழுவின் விசேட  க...
11/09/2025

அட்டாளைச்சேனை SLMC மத்திய குழுவின் விசேட கலந்துரையாடல்...!!!

(முகம்மட் அன்வர்)

SLMC அட்டரளைச்சேனை மத்திய குழுவின் விசேட கலந்துரையாடல் தலைவர் SLA.ஹலீம் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு இடம் பெற்றது.

இதன்போது, SLMC கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹித் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், மத்திய குழுவின் செயலாளர் ACM.ஹாரீத் மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SLMC கட்சிக்கு அதிகாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் கட்சியின் வளர்ச்சிக் காக அட்டாளைச்சேனை மத்திய குழு பெரும் பங்காற்றியதை கூட்டத்தில் பலரும் சுட்டிக் காட்டியமை குறிப்பிடத் தக்கதாகும்.

மர்ஹும் MHM.அஷ்ரப் நினைவாக எதிர் வரும் 16ஆம் திகதி அட்டாளைச்சேனை மேற்கொள்ள உள்ள கத்தமுல் குர்ஆன் நிகழ்வு தொடர்பில் இக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக மத்திய குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இது உண்மை இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

SLMC கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் விசேட கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு MPCS மண்டபத்தில் மத்திய குழுவின் தலைவ...
07/09/2025

SLMC கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் விசேட கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு MPCS மண்டபத்தில் மத்திய குழுவின் தலைவர் ஹலீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் பிரதே சபை உறுப்பினர்கள், கிளைக்குழு உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இதேவேளை, இன்று நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக சொல்லப்பட்ட நிலையிலும், மத்திய குழுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டம் நடத்துவதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக்குழுவினர் சட்டவிரோதம...
07/09/2025

கூட்டம் நடத்துவதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக்குழுவினர் சட்டவிரோதமாக இன்றைய தினம் (07) கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே – அதனைத் தடுத்து நிறுத்துமாறும் கோரி – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை இந்த முறைபாட்டைச் செய்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளராகவும் உதுமாலெப்பை எம்.பி பதவி வகிக்கின்றார்.

எதிர்வரும் 16ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினமாகும். அதனை அட்டாளைச்சேனையில் அனுஷ்டிப்பதற்கான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யும் பொருட்டு, அதற்கான கலந்தாலோசனைக் கூட்டமொன்றை, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளையினர் இன்று (07) மாலை 4.30 மணிக்கு நடத்தவுள்ளர்.

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி கலந்தாலோனைக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் – பலருக்கும் அனுப்பி வைக்கப்படுள்ளதோடு, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளராகிய தன்னிடம் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக – இவ்வாறாதொரு கலந்தாலோசனைக் கூட்டத்தை, அட்டாளைச்சேனை கிளைக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே – அதனைத் தடுத்து நிறுத்துமாறும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை முறைப்பாடு செய்துள்ளார் என, அவரின் தரப்பு தெரிவிக்கிறது.

இந்தக் கூட்டம் நடைபெற்றால் – அங்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் எனவும், உதுமாலெப்பை எம்.பியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக் குழுவின் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் மற்றும் செயலாளர் ஏ.சி.எம். ஹாரித் (ஆசிரியர்) ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் தொடர்பு கொண்டு, மேற்படி முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை கிளைக் குழுவின் தலைவர் ஹலீம் உறுதிப்படுத்தினார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் நினைவுநாள் நிகழ்வை, அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கு ஒருபுறம் அந்தக் கட்சியின் கிளைக்குழவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறமாக, குறித்த நினைவுநாள் நிகழ்வை அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கு – நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் அறிய முடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக்குழுவினரின் கூட்டம் இன்றைய தினம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள இடத்துக்கு, அக்கரைப்பற்று பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்படுவதற்கும் ஏற்பாடாகியுள்ளதாக அறியமுடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக் குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்கும் இடையில் மிக நீண்ட காலமாக இருந்துவந்த உட்பிரச்சினைகளும், முறுகல் நிலையும் – தற்போது பூதாகரமான நிலையில், பொலிஸ் நிலையம் வரைச் சென்றுள்ளது.

புதிது

31/08/2025

✌️LEGENDS IS ALWAYS LEGENDS
Congratulations Addalaichenai MMV Legend!
LPL Champion-2025🏆

அட்டாளைச்சேனையச் சேர்ந்த அல் ஹாபிழ் மௌலவி நுசைர் அஹ்மத் ( சித்தீகி) தனது அறிவுப் பயணத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட...
30/08/2025

அட்டாளைச்சேனையச் சேர்ந்த அல் ஹாபிழ் மௌலவி நுசைர் அஹ்மத் ( சித்தீகி) தனது அறிவுப் பயணத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த ஓர் வழக்கறிஞ்சராக மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

இவர் அட்டாளைச்சேனை (AC) பள்ளியில் ஹிப்ழு மத்ரஸாவில் முழு குர்ஆனையும் மனனம் செய்த ஹாபிழாகவும், அக்கரைப்பற்று அபூபக்கர் சித்திக் அரபுக் கலாசாலையில் 06 வருட இஸ்லாமிய ஷரீஆ கல்வியையும் கற்று ஒரு ஆலிமாக வெளியேறியதன் பின்னர் பாணந்துறை ஜாமிஆ இப்னு உமர் கலாபீடத்தில் விஷேட ஹதீஸ் கலை கற்கைநெறியையும் பூர்த்தி செய்தவர்.

வல்லவன் அல்லாஹ் அவர் கற்ற கல்வி மூலம் தானும் பயன் பெற்று பிறரையும் பயன் பெறச் செய்வானாக!

Admin
Dheenul Islam Media Akkaraipattu
30.08.2025

அட்டாளைச்சேனை ஹக்கீம் Art Work Shop நிறுவனத்திற்கு விருது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற ஹக்கீம் ஆர்ட் வோக் ...
19/08/2025

அட்டாளைச்சேனை ஹக்கீம் Art Work Shop நிறுவனத்திற்கு விருது

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற ஹக்கீம் ஆர்ட் வோக் சொப் நிறுவனத்திற்கு 2025 ஆம் ஆண்டிற்கான கலை. திறமை. சமூக தாக்கத்திற்கான விருது வழங்கப்பட்டது.

Diamond Excellent Award அமைப்பினால் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போது இவ் விருது நிறுவனத்தின் பணிப்பாளர் மொளலவி எம்.பி.ஹக்கீம் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மொளலவி எம்.பி.ஹக்கீம் அகமட் அவர்கள் கலைத் துறையில் ஆற்றிய பங்களிப்பு மற்றும் சமூக மாற்றத்துக்கான செயற்பாட்டிற்காகவும் கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று வெளியாகியுள்ள பெறுபேறுகளின் படி பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த Dr.சுதைஸ் முகம்மட் அவர்கள் மகப்பேற்று வைத்திய நிபுணர் இ...
13/08/2025

இன்று வெளியாகியுள்ள பெறுபேறுகளின் படி பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த Dr.சுதைஸ் முகம்மட் அவர்கள் மகப்பேற்று வைத்திய நிபுணர் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.!

Dr.Suthais Mohamed got through his final examination of Gynaecologist & Obstetrics (VOG) today.

வாழ்த்துக்கள் பாலமுனை மண்ணின் முதல் VOG!

02/07/2025

🔖அட்டாளைச்சேனை மண்ணுக்கு -தவிசாளர்
🔖பாலமுனை மண்ணுக்கு -உப தவிசாளர்
வாழ்த்துக்கள்💓

அன்றே கணித்தோம்! வாழ்த்துக்கள்!💓
02/07/2025

அன்றே கணித்தோம்! வாழ்த்துக்கள்!💓

Address

Amparai
32350

Telephone

+94750750164

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝗔𝗱𝗱𝗮𝗹𝗮𝗶𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝗩ᵒⁱᶜᵉ:

Share