
13/07/2025
தேசிய கால்பந்து அணிக்கு எமது ஊரிலிருந்து இருவர் தெரிவு
±+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்வு கடந்த மூன்று நாட்களாக கொழும்பு பெத்தகன Football Complex இல் நடைபெற்றது.
சுமார் 500 இற்கும் மேற்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட இத்தேர்வில் இறுதி 30 வீரர்களுள் எமது ஊர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களான ஹாலிக் மற்றும் ரகான் உள்ளடக்கப்பட்டதன் மூலம் 17 வயதின் கீழான தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
நாச்சியாதீவு Warriors Foot club இன் அங்கத்தவர்களாக நீண்ட நாட்களாக விளையாடி வரும் இவர்களுக்கு கழகத்தின் பயிற்றுவிப்பாளர் Saheel Ahmd தொடர்ச்சியான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் இவ்வீரர்கள் எதிர்காலத்தில் சாதிப்பதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், பயிற்றுவிப்பாளர் சஹீல் அஹமட் அவர்களது முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் Warriors கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ ஆர் எம் தாரிக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாச்சியாதீவு செய்திகள் சார்பாகவும் அவ்விரு வீரர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.