10/06/2026
தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான, “இயக்குநர் இமயம்” எனப் போற்றப்பட்ட பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (10 ஜூன் 2026) தனது 84வது வயதில் காலமானார். அவர் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கும், கலை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கிராமிய வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் இயல்பாக திரையில் கொண்டு வந்து தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை உருவாக்கியவர் பாரதிராஜா. 16 வயதினிலே, மண் வாசனை, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.
#இயல்fm Iyal Fm - இயல் Fm