Akilan

Akilan கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் குணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

01/03/2026

#கனிய #எண்ணை #கூட்டுத்தாபனத்தின் #அவசர #அறிவிப்பு!!

நாட்டில் 37 நாட்களுக்கு தேவையான பெற்றோலும்,டீசலும் கையிருப்பு உள்ளது.

நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை. கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால் நாம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்தே இவற்றை இறக்குமதி செய்கிறோம்.

எனவே மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நிலவும் போர்ச் சூழலால் நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதைக் காணமுடிகிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அச்சமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை. கையிருப்பிலுள்ள முழுமையான அளவுகளை நாங்கள் கணித்துள்ளோம். எம்மால் ஒரு மாத காலத்திற்குத் தடையின்றி இயங்க முடியும். எங்களிடம் உள்ள மற்றும் தற்போது நாட்டை வந்தடைந்து கொண்டிருக்கிறது.

எனவே 37 நாட்களுக்கு தேவையான பெற்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளது.

அத்துடன் 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலதிகமாக எந்தவொரு கப்பலும் வராவிட்டாலும் கூட, எம்மால் இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும்.

அடுத்ததாக, நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை. கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால் நாம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்தே இவற்றை இறக்குமதி செய்கிறோம். மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் எங்களிடம் உள்ள கையிருப்பு ஒரு மாதத்திற்குப் போதுமானதாகும்.

எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

28/02/2026

மட்டக்களப்பு - ஆரையம்பதி CO - OP Fuel Station இன்றைய நிலை

வானிலை அறிவிப்பு!!
28/11/2025

வானிலை அறிவிப்பு!!

27/11/2025
அரசையூர் ஆட்டம்- 2025 மகுடம் சூடியது முதலைக்குடா விநாயகர் அணி!!மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலூர் என அழைக்கப்படும் முதலைக...
19/10/2025

அரசையூர் ஆட்டம்- 2025 மகுடம் சூடியது முதலைக்குடா விநாயகர் அணி!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலூர் என அழைக்கப்படும் முதலைக்குடா விநாயகர் அணியாது அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் தனது 53ஆவது அகவையினை சிறப்பிக்கும் முகமாகவும் உயிர்நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் இடம்பெற்ற அரசையூர் ஆட்டம் என வர்ணிக்கப்படும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரில் 32 கழகங்கள் பங்குபற்றி இன்றைய தினம் இறுதி போட்டியானது இடம்பெற்றது இதில் முதலைக்குடா விநாயகர் அணியும் கல்லடி கடல்மீன்கள் விளையாட்டு கழகமும் களமாடிய நிலையில் கடல்மீன்கள் அணிக்கு எதிராக விநாயகர் அணியினர் ஒரு கோலினை உட்செலுத்தி அரசையூர் ஆட்டத்தின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முதலைக்குடா விநாயகர் அணியினர் எதிர்கொண்டு வெற்றியீட்டிய அணிகளாக,
1. தாந்தாமலை ஸ்ரீ மருகன் - 00:01 வெற்றி
2. பனையறுப்பான் கஜமுகா - 00:02
வெற்றி
3. காஞ்சிரங்குடா ஜெகன் - தண்டனை உதை மூலம் வெற்றி
4. பட்டிப்பளை வைரவர் - தண்டனை உதை மூலம் வெற்றி
5. கல்லடி கடல்மீன்கள் - 00:01 வெற்றி
சிறப்பாக விளையாடி மகுடம் சூடிய விநாயகர் விளையாட்டு கழகத்தினருக்கு மன நிறைவான நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் சிறந்த விளையாட்டு வீர்ராக சது(02) தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன்
சிறந்த பந்துக்காப்பாளராக குமணன்(01) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வருடத்தில் முதலைக்குடா விநாயகர் அணி பெறும் 18ஆவது கிண்ணமாக இது அமைந்திருந்தமை பெருமைக்குரிய விடயமாகும்.

மட்டக்களப்பு - முதலைக்குடா அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி  அம்மன் ஆலய  வருடாந்த உற்சவத்தின் ஐந்தாவது நாள்  மாலை பூசையும் தீ ம...
27/07/2025

மட்டக்களப்பு - முதலைக்குடா அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாவது நாள் மாலை பூசையும் தீ மூட்டும் நிகழ்வும்

மட்டக்களப்பு - முதலைக்குடா ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் ஐந்தாம் நாளாகிய இன்றைய தினம் இடம்பெற்ற...
27/07/2025

மட்டக்களப்பு - முதலைக்குடா ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் ஐந்தாம் நாளாகிய இன்றைய தினம் இடம்பெற்ற ஊர்வலமும் தீக்கட்டை கொண்டுவரும் நிகழ்வும்

17/06/2025

Address

Muthalaikkudah West
Batticaloa

Telephone

+94769659628

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akilan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akilan:

Share