CTV CTV is an open community. We encourage you to share your thoughts about any of our shows and program

11/08/2025

இந்த 26 வார்த்தைகள்..!
எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்...

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் - அவர்களுக்காக1.முதல் தக்பீருக்குப் பின்,...
30/06/2025

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் - அவர்களுக்காக
1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________

இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39

3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக🤲

அணுகுண்டு தயாரிப்பதைத்தடுக்க ஈரான் மீது போர் - தோல்வி யாருக்கு? மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளமில்லாத நாடு மட்டுமல்லா...
26/06/2025

அணுகுண்டு தயாரிப்பதைத்தடுக்க ஈரான் மீது போர் - தோல்வி யாருக்கு?

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளமில்லாத நாடு மட்டுமல்லாது, அங்குள்ள இயற்கை வளங்களைச்சுரண்ட முடியாத முதுகெலும்புள்ளவர்கள் ஆட்சி செய்யும் நாடு ஈரானாகும்.

இயற்கை வளம் கொழிக்கும் பலம் பொருந்திய ஈரானின் இராணுவக்கட்டமைப்பினைப் பலயீனப்படுத்தி ஏனைய அரபு நாடுகளைப்போன்று தமக்கு வாசியான பொம்மை ஆட்சியை நிறுவுவதென்றால் அங்கு ஆட்சிக்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், ரஷ்யா –உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு தேவையான ட்ரோன்கள், ஏவுகணைகள் வழங்கி வருவதனைத்தடுத்து நிறுத்துவதன் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதற்கும் ஈரானின் வீழ்ச்சி உதவும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும்.

மேலும், ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், ஏமன் ஹௌதிக்கள் மற்றும் ஈராக்கிலுள்ள ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்ரேலின் இருப்புக்கு பாரிய சவாலாகவுள்ளது. இவ்வாறான இயக்கங்களை முற்றாக அழிப்பதென்றால் இவர்களுக்கு உதவி புரிகின்ற ஈரானை வீழ்த்த வேண்டுமென்பது இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டமாகும்.

அதற்காக ஈரானுக்குள் மொசாட் ஊடுருவி ஈரானின் இராணுவக்கட்டமைப்புக்களைத் துல்லியமாக சிதைக்கும் திட்டங்களில் ஈடுபட்டதுடன், இஸ்லாமிய ஆட்சிக் கட்டமைப்பினை மாற்றுவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மிக இரகசியமாகச் செய்திருந்தது. அந்த நம்பிக்கையில் தான் ஈரானுக்குள் இஸ்ரேல் துணிந்து போரை ஆரம்பித்தது.

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத்திட்டமிடலை உலகிற்கு நியாயப்படுத்தும் நோக்கில் ஈராக்கில் சதாம் ஹுசைனிடம் பேரழிவு தரக்கூடிய ஆயுதங்கள் உள்ளதென்று உலகை நம்ப வைத்து இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது போன்று ஈரான் அணுவாயுதம் தயாரிக்கப்போகின்றது என்ற பிரசாரம் முடுக்கி விடப்பட்டது.

“இன்னும் இரண்டு வாரங்களில் ஈரான் அணுகுண்டினை தயாரித்து விடும்” என்று கடந்த இருபது வருடங்களுக்கு முன்பிருந்தே இஸ்ரேல் பிரசாரம் செய்து வருகின்றது. அதனைத்தான் இன்று வரைக்கும் கூறுகின்றனர். ஆனால், ஈரான் இன்னமும் அணுகுண்டினைத் தயாரித்ததாக இல்லை.

ஈரான் அணுவாயுதம் உருவாக்குவதனைத் தடுத்து நிறுத்துவதென்றால் ஈரானின் அணு உலைகள் மீது மாத்திரம் தாக்குதல் நடாத்தியிருக்க வேண்டும். ஆனால், கடந்த 13.06.2025 அன்று அணு உலைகளுக்கு அப்பால் ஏராளமான இலக்குகளையும் இராணுவத் தலைவர்களையும் குறி வைத்து ஈரான் முழுவதும் தாக்கியதன் மூலம் இஸ்ரேலின் உண்மையான நோக்கம் என்னவென்பது தெரிந்தது.

ஈரானின் பதில் தாக்குதலினால் இஸ்ரேலில் பாரிய அழிவுகள் ஏற்படுமென்றும், யூதர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடுகின்ற நிலை உருவாகுமென்றும், ஈரானுக்குள் ஏற்படுத்தப்பட்ட மொசாட்டின் வலைப்பின்னல்கள் தோல்வியடையுமென்றும் இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.

தங்களது சதித்திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே டொனால்ட் ட்றம்பும் பெஞ்சமின் நெதன்யாகுவும் போட்டிபோட்டுக்கொண்டு அறிக்கைவிட்டதுடன், தெஹ்ரானிலிருந்து மக்களை வெளியேறுமாறு கோரினர்.

போர் நடைபெற்றால் ஈரானில் சேதங்கள் ஏற்படுமென்று எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால், காசா போன்று இஸ்ரேலில் இந்தளவுக்கு அழிவுகள் ஏற்படுமென்றும் வான்பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் அழிக்கப்படுமென்றும் எவரும் எதிர்பார்க்கவில்லை.

அத்துடன், 12 நாட்கள் நடைபெற்ற இப்போரில் ஈரானின் அணு மையங்கள் அழிக்கப்படவுமில்லை. ஆட்சி மாற்றம் ஏற்படவுமில்லை. இராணுவக்கட்டமைப்புக்கள் சிதைக்கப்படவுமில்லை. மாறாக, ஈரானிய மக்கள் ஒறுமைப்பட்டனர்.

மொத்தத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும் என்ன நோக்கத்திற்காக போரை ஆரம்பித்தார்களோ அவர்களது எந்த நோக்கமும் நிறைவேறவில்லை.

எனவே, இப்போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதனை விட இஸ்ரேலும் அமெரிக்காவும் படுதோல்வியடைந்தது என்பது கள யதார்த்தமாகும்.

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

*குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லத்தேவையில்லை.*கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை வழங்குவதற...
27/05/2023

*குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லத்தேவையில்லை.*

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை வழங்குவதற்காக இனி கொழும்பு மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லத்தேவையில்லை!

எதிர்வரும் மாதங்களில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள ஆட்களை பதிவு செய்யும் திணைக்கள பிரிவில் கடவுச் சீட்டிற்கான கைவிரல் அடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் சமர்பிக்க முடியும்.

கிழக்கு மாகாணத்தில் 6 இடங்களில் கைவிரல் அடையாளங்களை கடவுச்சீட்டிற்காக வழங்க முடியும்

அம்பாரை மாவட்டத்தில்
⚫சம்மாந்துறை பிரதேச செயலகம்
⚫பொத்துவில் பிரதேச செயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்
⚫காத்தான்குடி பிரதேச செயலகம்
⚫ஓட்டமாவடி பிரதேச செயலகம்
⚫மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களம்

திருகோணமலையில்
⚫கிண்ணியா பிரதேச செயலகம்

சுமார் 3.5  கிலோ கிராம் தங்கம், 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியுடன் கைதான அலி சப்ரி ரஹீம் எம்பி : மொத்த பெறுமதி சுமார் 8...
23/05/2023

சுமார் 3.5 கிலோ கிராம் தங்கம், 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியுடன் கைதான அலி சப்ரி ரஹீம் எம்பி : மொத்த பெறுமதி சுமார் 8 கோடி ரூபா

இன்று (23) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து Fly Dubai விமானம் FZ547 இலிருந்து இலங்கைக்கு வந்த, விசேட நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், அவரது பயணத் பொதிகளை சோதனையிட்டபோது, ​​அதில் பதுக்கி வைத்திருந்த தங்க பிஸ்கட்கள், நகைகள் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

குறித்த தங்கத்தின் மொத்த நிறை 3 கிலோ 397 கிராம் எனவும் அதன் சந்தைப் பெறுமதி ரூ. 74 மில்லியன் (ரூ. 7.4 கோடி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளில் 91 ஸ்மார்ட் போன்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் சந்தைப் பெறுமதி ரூ. 4.2 மில்லியன் (ரூ. 42 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி ரூ. 78.2 மில்லியன் (சுமார் ரூ. 8 கோடி) ஆகும்.

தற்போது இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிவில் சுங்க சோதனையும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுதத்த சில்வா மேலும் தெரிவித்தார்.

60 வயதான அலி சப்ரி ரஹீம் புத்தளம் மாவட்டத்திலிருந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதோடு, அவர் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியில் போட்டியிட்டு இவ்வாய்ப்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

றிஸ்வான் சேகு முஹைதீன்

05/04/2022

*💞 இஸ்லாத்தில் ஸஹர் செய்வது பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞*

• ஸஹர் உணவு என்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும்! இதனை ஸஹர் என்பார்கள்!

• நாம் ஸஹர் செய்வதால் நோன்பை நோற்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும்!

• பொதுவாக அனைத்து வகையான நோன்பிற்கும் ஸஹர் உணவு உண்பது ‘ வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ’ ஆகும்!

• ஸஹர் செய்வதற்கு மற்றொரு காரணம் : வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (யூதர்கள்) இவர்கள் நோன்பு வைத்தால் சஹரும் செய்ய மாட்டார்கள் - இஃப்தர் (நோன்பு திறப்பது) செய்ய மாட்டார்கள் தொடர்ச்சியாக நோன்பு வைப்பார்கள்!

• யூதர்களுக்கு மாறு செய்யவே நபி (ஸல்) அவர்கள் நமக்கு ஸஹர் செய்வதை வலியுறுத்தி உள்ளார்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பது தான்!*

(நூல் : முஸ்லிம் : 2001)

*💟 ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல் :*

• நாம் ஸஹர் செய்வதற்கு உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும்! இதனால் நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்வதற்கு மக்களை எழுப்ப ஒரு வழியை ஏற்படுத்தினார்கள்!

• பிலால் (ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் (பாங்கு கூற கூடியவர்) நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஏற்படுத்தினார்கள்!

*• ரமளான் மாதத்தில் ஸஹர் செய்வதற்கு மக்களை எழுப்பி விட ஒரு பாங்கும் - சுபுஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்!*

• பாங்கு சப்ததால் மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பிலால் (ரலி) அவர்கள் ஸஹருக்கு எழுப்பி விடுவதற்கான பாங்கு சொல்வார் எனவும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது' அல்லது 'அவர் அழைப்பது' உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான்!*

(நூல் : புகாரி : 7247)

*💟 ஸஹர் செய்வதின் சிறப்பு :*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*சஹர் செய்யுங்கள். ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது!*

(நூல் : முஸ்லிம் : 2000)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்!*

(நூல் : அஹ்மத் : 11086)

*💟 ஸஹர் செய்யும் நேரம் :*

• பஜ்ர் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும்!

*வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!*

(அல் குர்ஆன் : 2 : 187)

• இந்த வசனத்தில் அல்லாஹ் ஃபஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று கூறி உள்ளான்! இதில் இருந்து நாம் ஃபஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்!

• இன்றும் பெரும்பாலான இடங்களில் இரவு 2 அல்லது 3 மணிக்கே எழுந்து ஸஹர் செய்து விட்டு நோன்பிற்கு நிய்யத் வைத்து விடுகிறார்கள்!

• நிய்யத் வைத்த பின்பு ஃபஜ்ரு நேரம் வருவதற்கு 2 மணி நேரம் அளவுக்கு இடைவெளி இருக்கும் ஆனால் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை பஜ்ர் உடைய நெருக்கத்தில் ஸஹர் செய்வது ஆகும்!

• இன்னும் சில ஊர்களில் ஒரு முறை நிய்யத் செய்து விட்டால் அதன் பின்பு உண்ண கூடாது பருக கூடாது என்று பலர் கூறுகிறார்கள் ஆனால் இஸ்லாம் நமக்கு இவ்வாறு செய்ய கூடாது என்று எந்த நிபந்தனையும் விதிக்க வில்லை!

*உதாரணமாக :* பாங்கு 5 : 30 க்கு கூறுகிறார்கள் என்றால் நாம் 5 : 29 வரை உண்ணலாம் பருகலாம்! இதன் பின்பு நிய்யத் நாம் செய்து கொள்ளலாம்!

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

*கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் வெள்ளைக்கயிறு ஒன்றையும் கறுப்புக்கயிறு ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவையிரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை (சஹர் உணவு) சாப்பிட்டுக் கொண்டிருப்பார்!*

(நூல் : முஸ்லிம் : 1989)

*💟 ஸஹர் உணவு :*

• சிரமமின்றி நோன்பை நோற்பதற்கும் உண்ணும் உணவு ஸஹர் உணவு ஆகும்!

• ஸஹருக்கு உண்ண இஸ்லாம் குறிப்பிட்ட உணவு எதையும் குறிப்பிட வில்லை! நமது ஏற்றால் போல் உணவுகளை நாம் தயார் செய்து சாப்பிடலாம்!

• அதே போன்று நீண்ட நேரம் தண்ணீர் உணவும் எதுவும் வயிற்றிக்கு செல்லாத காரணத்தினால் நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் காரம் அல்லது மசாலா பொருட்களை தவிர்த்து கொள்ளுங்கள்!

• நீண்ட நேரம் சாப்பிட முடியாது என்று மூச்சி விடுவதற்கு சிரமம் ஏற்படும் அளவுக்கும் மிகவும் அதிகமாவும் ஸஹரில் உண்ண கூடாது! இதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

*💟 தொழுகைக்கு தயார் ஆகுதல் :*

அனஸ் (ரலி) அறிவித்தார்கள் :

*ஸஹர் முடிப்பதற்கும் தொழுகையைத் துவக்குவதற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும்? என்று நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டோம். ‘ ஒரு மனிதர் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம்' என்று கூறினார்கள்!*

(நூல் : புகாரி : 576)

• ஸஹர் செய்து முடித்தவுடன் சுபுஹ் தொழுகைக்கு தயார் ஆக வேண்டும் சில ஊர்களில் பார்க்கலாம் அல்லாஹ் பாதுகாக்கனும் உண்ண பிறகு பஜ்ர் தொழுகைக்கு நேரம் உள்ளது என்று சிறிது உறங்குவார்கள்! விழித்து பார்த்தால் விடிந்து விடும்!

• ரமலான் மாதத்தில் ஒவ்வொரு அமலும் சிறப்பிற்குரியது ஆகும் இதை நாம் தவற விட்டால் பின்பு அதை அடைந்து கொள்ள முடியாது அதனால் ஸஹர் செய்து விட்டால் பின்பு இருக்கும் நேரத்தில் நாம் அல் குர்ஆன் ஓதுவது அல்லது திக்ர் செய்வது இப்படி ஏதேனும் அமல்களில் ஈடுப்படலாம்!

*💟 தவ்பா (பாவமன்னிப்பு) செய்தல் :*

• ஸஹர் நேரத்தில் நாம் வீணான பேச்சு tv இஸ்லாமிய பாடல் என்று இல்லாமல் இந்த நேரத்தில் நாம் அதிகம் பாவமன்னிப்பு தேட வேண்டும்!

*அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்!*

(அல் குர்ஆன் : 51 : 18)

• நாம் ஸஹர் நேரத்தில் விரைவாக எழுந்து தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் நமது அனைத்து ஹலால் ஆன தேவைகளையும் கேட்டு கொள்ளலாம்!

• இது போன்ற நேரங்களை அதிகம் பயன் படுத்தி அதிகம் துஆ நாம் செய்ய வேண்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்!*

(நூல் : புகாரி : 1145)

*💟 விடி ஸஹர் :*

• இன்று பல ஊர்களில் அறியாமையின் காரணமாக விடி ஸஹர் என்று ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள்!

*• நீண்ட நேரம் தூங்கி விடுவதால் ஸஹர் செய்ய முடியாமல் சென்று விடும் அதனால் இவர்கள் விடிந்த பின்பும் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு நோன்பு வைக்கிறார்கள்! இதற்க்கு விடி ஸஹர் என்று கூறுவார்கள்!*

• ஆனால் இதற்க்கு அல் குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ எந்த ஆதாரம் கிடையாது!

• இவ்வாறு விடி ஸஹர் செய்து நோன்பு வைத்தால் அந்த நோன்பு கூடாது!

*• ஸஹர் செய்ய முடியாமல் தவறி விடும் என்று அஞ்சினால் நாம் உறங்கும் போதே நிய்யத் உடன் உறங்க வேண்டும்! இதனால் ஸஹர் தவறினாலும் நாம் அப்படியே நோன்பை தொடரலாம்!*

*நன்மைகளை வழங்க அல்லாஹ் போதுமானவன் 💞*

04/04/2022
08/02/2022

இந்தியாவின் சங்கிகளுக்கும் மற்றும் இலங்கையின் சன்முகாவின் சங்கிகளுக்கும் சரியான பதிலடி.

அந்த மாணவி குரல் எழுப்பிய அல்லாஹூ அக்பருக்கு என்ன அர்த்தம்..?அவர்கள் கும்பலாக சேர்ந்து என்னை பயமுறுத்தும்போதும்  நான் பய...
08/02/2022

அந்த மாணவி குரல் எழுப்பிய
அல்லாஹூ அக்பருக்கு என்ன அர்த்தம்..?

அவர்கள் கும்பலாக சேர்ந்து என்னை பயமுறுத்தும்போதும்
நான் பயப்பட மாட்டேன் என்று அர்த்தம்.

அவர்கள் பள்ளிக்கு வெளியே நிறுத்தப் பார்த்தாலும்..
நான் பள்ளிக்குள் செல்வேன் என்று அர்த்தம்.

அவர்கள் கடவுளின் பெயரால் அநியாயம் செய்யும் போது
நான் கடவுளின் பெயரால் நியாயம் கேட்பேன் என்று அர்த்தம்.

அவர்களே பயங்கரவாதிகள், தீவீரவாதிகள்
நான் அல்ல என்று அர்த்தம்.

அவர்கள் வெறுப்பை உமிழும்போது,
நான் அன்பை வேண்டுகிறேன் என அர்த்தம்.

அவர்கள் நிராதரவாக என்னை நிறுத்தும்போது,
நான் என்னை ஆதரிக்கும் மனிதர்களை அழைக்கிறேன் என்று அர்த்தம்.

அவர்கள் என்னை வீழ்த்திட மூர்க்கத்தனம் கொண்டபோது,
வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி, யுத்தம் செய்வேன் என அர்த்தம்.

அவள் தனியே இல்லை..
நாமெல்லாம் அவளோடு இருக்கிறோம் என்பதற்கான அர்த்தம்.

அல்லாஹூ அக்பர்..

Address

Market Road, Oddamavadi
Batticaloa
30420

Telephone

+94758788588

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category