PadaKu TV

PadaKu TV Media

ஆழ்ந்த இரங்கல்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை ப...
19/07/2026

ஆழ்ந்த இரங்கல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களின் அன்புத் தாயார் அமரர் பூபாலபிள்ளை பரஞ்சோதி அவர்கள் இன்று (19.07.2026) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் ஆரையம்பதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் நாளை (20.07.2026) நடைபெற்று, பிற்பகல் 4.00 மணிக்கு ஆரையம்பதி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

30/06/2026

இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான வழக்கு ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து…

25/06/2026

மண்ணையும் மக்களையும் நேசித்த மக்கள் சேவகன் நீதி வென்று மக்கள் பணியாற்றுவார்

🏆⚽ படுவான் சமர் – பருவம் 16 ⚽🏆மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்று ...
24/06/2026

🏆⚽ படுவான் சமர் – பருவம் 16 ⚽🏆

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்று வரும் மிகப்பிரமாண்டமான உதைபந்தாட்ட தொடரான "படுவான் சமர் – பருவம் 16" இன் இறுதிநாள் நிகழ்வு, கழகத்தின் தலைவர் திரு. கபில்ராஜ் அவர்களின் தலைமையில் குமரகுரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் பிரதிநிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்வி, கலை மற்றும் கலாச்சார செயலாளர் திரு. சந்திரசேகரன் மணிசேகரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 36 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று போட்டியிட்ட இத்தொடரில், தமது சொந்த மண்ணில் உற்சாகமாக விளையாடிய ஈஸ்வரா விளையாட்டு கழகம் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி முதலாம் இடத்தைப் பெற்று சாம்பியன் மகுடத்தை தனதாக்கியது. 🏆✨

🥇 முதலாம் இடம் – ஈஸ்வரா விளையாட்டு கழகம், கொக்கட்டிச்சோலை🥈 இரண்டாம் இடம் – வைரவர் விளையாட்டுக்கழகம், பட்டிப்பளை🥉 மூன்றாம் இடம் – விநாயகர் விளையாட்டுக்கழகம், முதலைக்குடா

கொக்கட்டிச்சோலை என்ற வளர்ந்து வரும் தனித்தமிழனின் நகரத்தை மேலும் வளமானதாக்கும் நோக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் பல முக்கிய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்தார். அந்த பங்களிப்புகளுக்கான நன்றியுணர்வின் அடையாளமாக, ஈஸ்வரா விளையாட்டு கழகம் தனது முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு அவரை தொடர்ந்து அதிதியாக அழைத்து கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

படுவான் சமர் – பருவம் 16, கொக்கட்டிச்சோலை மண்ணின் விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத இன்னொரு பொன்னான அத்தியாயமாக பதிவாகியுள்ளது. ❤️⚽🏆

04/06/2026

நாவலபிட்டியில் பறிபோன மூன்று உயிர்கள் - சந்திரகாந்தனின் தீர்க்கமான தீர்மானத்தால் மட்டக்களப்பில் தடுக்கப்பட்ட பேராபத்து..!

01/06/2026

மலையூர் ஆட்டம் 2026

28/05/2026

அரசியல் பாகுபாடு காரணமாக ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இருந்த சந்திரகாந்தனின் புகைப்படத்தை நீக்கியமைக்கு எதிர்ப்பு.

27/05/2026

தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் போரதீவுப்பற்று பிரதேச சபை – மக்கள் சேவைகள் கடும் பாதிப்பு : தீர்வு கோரி உறுப்பினர்கள் வேண்டுகோள்..!

Address

91 Lake Road
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when PadaKu TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PadaKu TV:

Shortcuts

Share