SPN News.lk

SPN News.lk social public news {சமூக பொது செய்தி }

10/01/2025

"Clean Srilanka" மட்டக்களப்பில் தெளிவூட்டல் செயலமர்வு!!

"Clean Srilanka" கருத்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சுற்றாடல், சமூக மற்றும் ஒழுக்க நெறிமுறை அணுகல் ஊடாக விரிவான மாற்றப்பட்ட செயன்முறை ஒன்றின் மூலம் மேம்பட்ட சமூகம் ஒன்றினை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் "Clean Srilanka" கருத்திட்டம் கடந்த 01.01.2025 திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி கருத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமே ஜனாதிபதி செயலகத்தின் பண்ணிப்பாளர் ஏ.கவிதா தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இலங்கையின் தேசிய கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தேசிய திட்டமாகிய இத்திட்டத்தின் அரச உயர் அதிகாரிகளை தொளிவுபடுத்தும் குறித்த விசேட செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சனி ஶ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஏனைய அனைத்து திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

03/01/2025

வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(03) வெள்ளிமலை பண்பாட்டு மண்டப தலைவர் ஆ.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) மா.நடராசா, மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள், பிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளாள் கிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், இம்மண்டபம் அமைக்கப்பட்டு 7 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடப்படாத நிலையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையிலேயேதான் இன்றயத்தினம் இம்மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்குறித்த மண்டபம் அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை இதன்போது அக்கிராம மக்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

31/12/2024

மட்டக்களப்பில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்..!

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம்இன்று(31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைப்பு,...
31/12/2024

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம்

இன்று(31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைப்பு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை - இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

ஏனைய எரிபொருட்கள்

இதன்படி, புதிய விலை 183 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை, வேறு எந்த வகை எரிபொருளின் விலையும் திருத்தப்படாது என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

31/12/2024

வீட்டில் தங்கி வேலை செய்பவருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்..!

"எமது உழைப்பின் பெறுமதியை நாமே நிர்ணயிப்போம்" எனும் தொனிப்பொருளில் வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் தமக்கு இளைக்கப்படும் செயற்பாடுகளை நிவர்த்திக்கும் பொருட்டு மட்டக்களப்பில் இன்று (31) செவ்வாய் கிழமை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கவுள்ளதுடன் ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்..

30/12/2024

மட்டக்களப்பு அபிவிருத்தி பணிகளின் போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை; அருண் ஹேமச்சந்திரா உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25 மில்லியன் ரூபாக்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்றைய தினம் (30) வரலாற்றில் முதன்முறையாக முழுநாள் கூட்டமாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் கூட்டமாகவும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஸ்ரீPகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரன் தலைமையில் இன்று (30) திகதி மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலோயே மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மேற்கண்டவாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இதன் போது மாவட்டத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் காணி மோசடிகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வனவிலங்கு பிரச்சனைகள், நீர்பாசனம், கனிய வள அகழ்வு, அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள், கல்வி, சுகாதாரம், மீன் பிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி விடையங்கள், ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பாக அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், சில விடையங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உப குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய முடிவுகள் எடுக்கப்பட்டும் என தீர்மானம் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

30/12/2024

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்ய கோரி மட்டு காந்தி பூங்காவில் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் ஆர்ப்பாட்டம்.

வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் சட்டத்தை அமுல்படுத்தாக பொலிசாருக்கு எதிராகவும் இன்று திங்கட்கிழமை (30) கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்பு போராட்டம் காந்த பூங்காலில் ஆரம்பித்து பழயை கச்சேரிக்கு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்

கடந்த 20 ம் திகதி கடமை நிமித்தம் வெளியில் சென்ற கிராம உத்தியோத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் இது வரை கைது செய்யாததையடுத்து மாவட்ட ஜக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் கவனயீர்பு ஆரப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு சுகயீன விடுமுறையுடன் மட்டு காந்தி பூங்காவில் கிராம உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர்.

இதனையடுத்து நீதிவேண்டும், கைது செய் கைது செய், சமாதான அலுவல்களான எமக்கு என்ன பாதுகாப்பு, மக்கள் சேவையை செய்யும் எங்களை பொலிசார் ஏன் புறக்கணிப்பு, பொலிசாரின் நடவடிக்கை தான் என்ன? தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும், அரசகாணி அரச வளங்களை பாதுகாக்கும் எங்களை பாதுகாப்பது யார்?, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் அங்கிருந்து ஊர்வலமாக நீதிமன்ற வீதி ஊடாக பழைய கச்சேரியை சென்றடைந்து அங்கு இடம்பெற்றுவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தினையடுத்து அவர்களை வெளியில் பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் கூட்டத்தில் சென்று மகஜரை கையளிக்க 5 பேரை அனுமதித்த தையடுத்து கூட்டத்திற்கு சென்று மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் மகஜர் ஒன்றை கையளித்ததனர்

இது தொடர்பாக அவர் பொலிஸ் அத்தியட்சகரிடம் வினாவியதையடுத்து இன்று இருவரை கைது செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய பொலிசார் வலைவீசி தேடிவருவதாக தெரிவித்தார்

இதனையடுத்து ஏனையவர்களை உடனடியா கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்

இதேவேளை கடந்த 23 ம் திகதி கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பித்தக்கது.

29/12/2024

3 இலட்சம் ரூபா பெறுமதியான மாட்டை பிடித்த இராட்சத முதலை - !!

29/12/2024

மட்டக்களப்பில் 16 அடி நீளமான இராட்சத முதலை பிடித்த மக்கள்!!

29/12/2024

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (29) ஞாயிற்று கிழமை இலங்கைக்கான சீனத் தூதுவர் 720 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதுவர் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 720 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் மற்றும் தூதரின் மனைவி சீன அரசியல் பிரிவு தலைவர் கின் லிகோங் ஆகியோரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் ஜஸ்டினா முரளீதரன்,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

28/12/2024

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!!

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market நேற்று (28) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையா காணப்பட்ட இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கரி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற மேலும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்நாசகார செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளாந்தம் காலை 7 மணி முதல் பி.ப 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த பகுதியில் மரக்கறி, பழவகை போன்ற பொருட்களை வெளியிடத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு குறித்த நாசகார செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், மனநலம் பாதிக்கப்பட்டவராக சொல்லப்படும் நபரொருவரை மட்டக்களப்பு தலைமைய பொலிசார் விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக குறித்த சந்தைக்கு அருகாமையில் இருந்த பொலிஸ் காவலரணில் இருந்த பொலிசாரின் கடமை நிறுத்தப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியில் குற்றச் செயல்களும், போதைப்பொருள் பாவணையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்திருந்ததாக அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் வெல்லாவெளி வரையான பகுதிகளில் இருந்து தமது வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காக நாளாந்தம் போக்குவரத்திற்காக அதிக செலவினை மேற்கொண்டு மட்டக்களப்பு நகரிலுள்ள மக்களுக்கு நஞ்சற்ற உணவு பொருட்களை சேவை மனப்பான்மையுடன் குறைந்த விலையில் விற்பனை செய்து வரும் இவர்கள் தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த வியாபாரிகளின் நன்மை கருதி பல இலட்சம் பொறுமதியான உதவிகளை மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் பிரபல வர்த்தகருமான தேசபந்து மா.செல்வராசா அவர்கள் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

25/12/2024

மட்டக்களப்பு சீயோன் தேவாலய கிறிஸ்மஸ் தின ஆராதனை

25/12/2024

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

24/12/2024

மட்டக்களப்பில் சாதனையை நிலைநாட்டவுள்ள நத்தார் மரம்..!

மட்டக்களப்பு மாவட்டம் நத்தார் பண்டிகையினை கொண்டாடும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் 50 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் இன்று (24) செவ்வாய் கிழமை இரவு 12 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

கழிவுப்பொருட்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஒளியூட்டப்பட்ட இந்த நத்தார் மரம் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இரவு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் பொது மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

24/12/2024

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (24) திகதி இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள்,
மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது விசேடமாக தற்பொழுது விவசாயிகள் மத்தியில் பேசு பெருளாக இருக்கின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகா அவர்களினால் விவசாயிகள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், குரங்கு மற்றும் யானை தாக்கத்தினால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

அத்தேடு தொடர்ச்சியாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டுக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான இலவச பசளைக்கான கொடுப்பனவு, மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

24/12/2024

மட்டக்களப்பில் மீண்டும் எலி காச்சல்...

23/12/2024

மட்டு தலைமையக பொலிசார் நத்தாரையிட்டு 50 பேருக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு வழங்கிவைப்பு -

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிசார் நத்தார் பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டிலுள்ள 50 பேருக்கு வர்த்தகர் ஒருவரின் நிதியுதவியில் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை இன்று திங்கட்கிழமை (23) பொலிஸ் நிலையத்தில் வைத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்னா வழங்கி வைத்தார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார தலைமையில் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்;.எம்.சதாத் ஏற்பாட்டில் பொலிஸ் நிiலைய பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு உலர் உணவு பொதிவழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

இதில் அதிதிகளாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்னா, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே. பண்டார, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.

24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற...
23/12/2024

24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை, ஹெட்டிபொல, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPN News.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share