Batticaloa.com

Batticaloa.com Unique Media with Ethics
ஒழுக்கத்துடனான தனித்துவ ஊட?

17/05/2025

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்தருக்கு கருங்கல் சிலை திறப்பு விழா.

-BTN News Tamil-

08/04/2025

குருநாகல் வெஹர சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பாரிய உயிர்சேதம்.

இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு. பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
05/04/2025

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

03/04/2025

தன்னுடைய பாட்டுக்கு சிவனேனு சென்று கொண்டிருந்த சிறுவனை தலையில் தட்டி தள்ளிவிடும் இளைஞர்கள்.

இச் சம்பவம் இன்று காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.

சிறுவரொருவர் வீதியால் தனது பாட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அதே வீதியால் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரு இளைஞர்களில் ஒருவர் பின்பக்கமாக சென்று தலைப்பகுதியில் சிறுவனை கையால் தாக்கி தல்லிவிட்டுச் செல்வதை குறித்த சிசிடிவி காணொளியில் நாம் பார்க்கலாம்.

இதனால் இச் சிறுவன் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

டிரம்பின் அறிவிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ளது – அருண் ஹேமச்சந்திராஅமெரிக்க ஜனாதிபதி டொனால...
03/04/2025

டிரம்பின் அறிவிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ளது – அருண் ஹேமச்சந்திரா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரி அறிவிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால பொருளாதார உறவுகளைக் கொண்ட இலங்கை உட்பட உலகளாவிய வர்த்தகத்தில் புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ளது, என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளை சிந்தனையுடனும், சீராகவும், மக்களின் நலனை மையமாகக் கொண்டு நிவர்த்தி செய்வதற்கான முழுப் பொறுப்பையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் இவ்விடயம் தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ஒரு அரசாங்கமாக, அதை நிவர்த்தி செய்வதற்கான முழுப் பொறுப்பையும், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

சிந்தனையுடன், சீராக, மக்களின் நலனை மையமாகக் கொண்டு, எங்கள் ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உலகளாவிய சந்தைகளில் தங்கள் இடத்தைப் பெற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.

மேலும் நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம், இந்த அரசாங்கம் அந்த முயற்சிகளைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்யும், கவனமான ராஜதந்திரம், நடைமுறை நடவடிக்கை மற்றும் எங்கள் சர்வதேச கூட்டாளர்களுடன் கைகோர்த்து செயல்படுவதன் மூலம், எங்கள் பொருளாதாரத்தையும் எங்கள் எதிர்காலத்தையும் பாதுகாப்போம்” என்று அவர் உறுதியளித்தார்.

இது அச்சத்திற்கான தருணம் அல்ல, கவனம் செலுத்துவதற்கான தருணம், என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

03/04/2025

மட்டக்களப்பில் மாபெரும் பட்டத் திருவிழா!!

குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!!2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் போ...
03/04/2025

குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!!

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 500-999 லீற்றர் 70 ரூபாவாகவும், 1-1,499 லீற்றர் 100 ரூபாவாகவும், 1.5-1,999 லீற்றர் 130 ரூபாவாகவும், 2-2,499 லீற்றர் 160 ரூபாவாகவும், 5-6,999 லீற்றர் 350 ரூபாவாகவும் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது!!சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்...
03/04/2025

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது!!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (02) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் புத்தளம் - ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 140 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வ...
01/04/2025

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது!!புதிய ஜனநாயக முன்னணி (NDF) கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்...
27/03/2025

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது!!

புதிய ஜனநாயக முன்னணி (NDF) கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (27) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

03 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சாமர சம்பத் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

✨ உங்கள் ஈத் கொண்டாட்டத்தை அலீம் புரியாணி சென்டருடன் இணைந்து மறக்க முடியாததாக மாற்றுங்கள்! ✨
27/03/2025

✨ உங்கள் ஈத் கொண்டாட்டத்தை அலீம் புரியாணி சென்டருடன் இணைந்து மறக்க முடியாததாக மாற்றுங்கள்! ✨


கடற்றொழில்  நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பிற்கு விஜயம்!!கடற்றொழில் நீரியல் வள...
27/03/2025

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பிற்கு விஜயம்!!

கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (27) திகதி விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சராக பதவி ஏற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முதல் தடவையாக விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் மீனவர்களின் குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக அமைச்சரிடம் முன் வைத்தனைத் தொடர்ந்து குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும், சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் போரிலேயே அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடனான குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஆற்றினை ஆளப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கூடிய அளவிலான மீன் பிடி வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுக்கும் முகமாகவும் பல கோரிக்கைகளும், ஆள் கடல் மீன் பிடி தொடர்பாகவும் இதன் போது மீனவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீர்யல்வள உதவி பணிப்பாளர் றுக்சான் குரூஸ், மற்றும் கடற் தொழிலாளர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் என பலர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.

Address

Batticaloa
SRILANKA

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batticaloa.com:

Share

Category