23/09/2025
ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்வில் கந்தசாமி பிரபு எம்பி.
++++++++++++++++++++++++++++
இளைஞர் விளையாட்டு விவகார அமைச்சின் கீழ் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி நிலையத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு நேற்று (22-09-2025) உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்
இதன் பொழுது மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 8.7மில்லியன் ரூபாய்களில் மூன்று இலட்சம் ரூபாய்கள் நிதியில் பயிற்சி உபர்ணங்கள் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.
அத்தோடு, கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சி நிலையமானது கோறப்பற்று மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கும் இளைஞர் யுவதிகள் தங்களுடைய எதிர்கால உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான மொழிப்பயிற்சி மற்றும் சகலவிதமான தொழிற்பயிற்சி கற்றுக்கொள்ளும் நிலையமாக செயற்பட்டு வருகின்றது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரபு தனது கருத்திலே, தேசிய மக்கள் சக்தி அரசில் இளைஞர்களுடைய நலன்சார்ந்த விடயங்கள் , தொழில்சார்ந்த விடயங்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயங்களில் பூரண அகறையுடன் செயற்பட்டு வருவதுடன், குறித்த பயிற்சி நிலையத்தினை எல்லா வகைகளிலும் முன்னேற்றுவதற்காக அதன் வளர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்றவகையில் பொறுப்புடன் பங்காற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு தொழிற்பயிற்சி நிலையத்தின் ( Vocational Training Center) பொறுப்பதிகாரி ஏ.எம் ஹனீபா தலமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடந்த எட்டு மாதங்களாக இயங்கி வருகின்ற இந்த நிலையத்தில் குறுகிய கால கற்கை நெறியினை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு சான்றுதல்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், குறித்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் UKM.அப்துல்லாஹ், பிரதேச செயலாளர் காதர் முஹம்மட் பைரூஸ், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மட்ட செயற்குழு உறுப்பினர் MAC நியாஸ்தீன்
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச மட்ட செயற்குழு உறுப்பினர்கள்
பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள்
கோறளைப்பற்று மேற்கு,மத்தி,மற்றும் கோறளைப்பற்று பரதேச இளைஞர்கழங்களின் சம்மேளன தலைவர்கள் ,செயலாளர்கள் அதன் உறுப்பினர்கள்,பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்டவர்கள் என பலரும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
தவல்.அஹமட் இர்ஷாட் பிரதேச ஒருங்கிணைப்பாளர்
கந்தசாமி பிரபு.MP