Batti.com

Batti.com உடனுக்குடன் நாட்டு நடப்புகளை விரைவான செய்திகளினூடாக தெரிந்து கொள்ள Batti.com ஐ follow பண்ணுங்க

01/05/2025

சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் கொண்டாட வேண்டிய ஒரு தொழில் முயற்சியாளர் இவர்தான்

30/03/2025

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்பட்டுள்ளது நாளை நோன்புப்பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது Eid mubarak Batti.com

30/03/2025

நோன்புப் பெருநாள் வசந்தம் Bilaal உடன் கொண்டாடுங்கள் # Batticaloa # latest ஆன தெரிவுகள் ******

🔵 மியான்மரில் நிலநடுக்கம்: 163 பேர் பலிமியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளது...
28/03/2025

🔵 மியான்மரில் நிலநடுக்கம்: 163 பேர் பலி

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன.

தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

இந்தநிலையில், மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 163 பேர் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் 81 பேர் இடுபாடுகளில் சிக்கி உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

26/03/2025

Bilaal ஆடையகம் latest ஆன selection ladies tops ,frock, jeens 1500/- இருந்து 5000/- வரைக்கும் # srilanka # dress collection

21/03/2025

நோன்புப்பெருநாள் கொண்டாட்டம்கள் ஆரம்பம் special OFF 10% To 20% வரை # dress selection # srilankan # Bilaal # Emporium # disscount # offers # latest # collection

நாட்டில் வாய்ப் புற்றுநோயால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பு!வாய்ப் புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாக ...
20/03/2025

நாட்டில் வாய்ப் புற்றுநோயால் நாளாந்தம் மூவர் உயிரிழப்பு!

வாய்ப் புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 புதிய வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முகம் மற்றும் வாய் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கும் புற்றுநோயை உண்டாக்கும் காரணி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தற்போது, ​​இலங்கையில் ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய், வாய்ப் புற்றுநோயாகும்."

இலங்கையில் சராசரியாக, வருடத்திற்கு 3,000 புதிய வாய்ப் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

சோகமான உண்மை என்னவென்றால், நம் நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பேர் வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர்.

நமக்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், வாய்ப் புற்றுநோய் எனப்படும் இந்த நிலையை நாம் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

புகையிலை மற்றும் புகையிலையை அண்டிய உற்பத்திகளை மெல்லுவதால் இந்நோய் ஏற்படுகிறது. அத்துடன் பாக்கும் புற்றுநோயிக்கான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது." என்றார்.

உள்ளூரதிகார சபைகளுக்கான  தேர்தல் மே 06ந் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு
20/03/2025

உள்ளூரதிகார சபைகளுக்கான தேர்தல் மே 06ந் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் விபத்து
19/03/2025

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் விபத்து

30 நாள் போர்நிறுத்தத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டதுரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க அதிப...
19/03/2025

30 நாள் போர்நிறுத்தத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டது

ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் நடத்திய பேச்சில், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மூன்றாண்டுகளை கடந்தும் நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபராக பொறுப்பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில், அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
அது தொடர்பாக சில முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், இரண்டாம் கட்டமாக இரு நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான தொலைபேசி பேச்சுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன், டிரம்ப் நேற்று பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் நடந்த இருவரின் பேச்சு குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர்.

'இதன்முடிவில், அந்நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு அதிபர் புடின் ஒப்புக்கொண்டார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக, உக்ரைனும் ரஷ்யாவும் இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் அமலாகும் என்று கூறப்படுகிறது.

மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்த தேச பந்து தென்னகோன்.
19/03/2025

மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்த தேச பந்து தென்னகோன்.

19/03/2025

சுனிதா வில்லியம்ஸ் நாடு திரும்பியுள்ள காட்சிகள்

Address

Doha

Telephone

+94777836723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batti.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share