BCC TAMIL

BCC TAMIL BCC TAMIL NEWS �உடனுக்கு உடன் உறிதிப்படுத்தப?

17/10/2022

BCC NEWS

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை குறைவடைந்துள்ளது...
2022,October 17

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாக குறைவடைந்துள்ளது. அதன் சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாக காணப்படுகிறது.சிறப்பு அங்காடிகளில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 200 முதல் 210 ரூபா வரை விற்கப்படுகிறது.

உள்நாட்டின் வெள்ளை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. புறக்கோட்டையில் மாத்திரமன்றி, குருநாகல், மாத்தறை, பொலனறுவை, தென் மாகாணத்தின் பல நகரங்களிலும் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது.

*BCC NEWS* *கொழும்பில் 12 மணித்தியால நீர் வெட்டு....*2022,October 13➡️கொழும்பின் சில பகுதிகளில் *12 மணிநேர நீர் வெட்டு அ...
13/10/2022

*BCC NEWS*

*கொழும்பில் 12 மணித்தியால நீர் வெட்டு....*
2022,October 13

➡️கொழும்பின் சில பகுதிகளில் *12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.அதன்படி, சனிக்கிழமை (15) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (16) காலை 10.00 மணி வரை நீர்வெட்டு* அமுல்படுத்தப்படவுள்ளது.

*➡️கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும்* என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
*
GROUP 1👇* *https://chat.whatsapp.com/K3hqVURccjdCwWvxAaRSo8*

*GROUP 2👇* *https://chat.whatsapp.com/H47QAq7hyo452cdwYirs68*

*BCC NEWS* *வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்..*2022,October 13➡️தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் *அனைத்து வா...
13/10/2022

*BCC NEWS*

*வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்..*
2022,October 13

➡️தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் *அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக* தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் இதனை தெரிவித்துள்ளது.

➡️இந்நிலையில், *மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகரிக்காமலும், 60 கிலோமீற்றர் வேகத்திற்கு குறையாத வகையிலும் பயணிக்குமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும் 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது உத்தரவாக பிறப்பிக்கப்படவில்லை என்பதோடு, அவதானத்துடன் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீ்ற்றருக்கும் அதிகரிக்காத வேகனத்தில் பயணிக்க முடியும்* எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➡️அத்துடன் *முகில் கூட்டங்கள் காணப்படுவதனால் சாரதிகள் மின் விளக்கினை ஒளிரச்செய்தப்படி பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் வேறு தகவல்கள் அவசியமாயின் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்றடுத்துமாறும்* தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் கேட்டுக்கொண்டுள்ளது
*GROUP 1👇* *https://chat.whatsapp.com/K3hqVURccjdCwWvxAaRSo8*

*GROUP 2👇* *https://chat.whatsapp.com/H47QAq7hyo452cdwYirs68*

02/08/2022
*BCC NEWS* ➡️*BCC NEWS2022, June 01*➡️பிரபல பின்னணி பாடகர் இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடும்போது மாரடைப்பால் மரணம். பிரத...
31/05/2022

*BCC NEWS*

➡️*BCC NEWS
2022, June 01

*➡️பிரபல பின்னணி பாடகர் இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடும்போது மாரடைப்பால் மரணம். பிரதமர் இரங்கல்.

➡️பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர் கிருஷ்ணகாந்த் என்கிற கே.கே ( 53).

➡️இவர் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழந்தார்.

➡️இவர் தமிழில் "காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்.. உயிரின் உயிரே உயிரின் உயிரே... நினைத்து நினைத்து பார்த்தேன்... போன்ற பிரபலமான பாடல்களை பாடினார்.

➡️இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார் கே.கே.

➡️இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர் ,, அதேவேளையில் பிரதமர் மோடியும் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

| | .

➡️
*GROUP. 01*👇 *https://chat.whatsapp.com/K3hqVURccjdCwWvxAaRSo8

*GROUP. 02👇* *https://chat.whatsapp.com/H47QAq7hyo452cdwYirs68*

O/L சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!!!கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை தொ...
02/03/2022

O/L சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!!!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
2020ம் ஆண்டு நடைபெற்ற கல்லி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி, சித்தி பெறாத சுமார் 98,000 மாணவர்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு சித்தி பெறாத மாணவர்களின் தகவல்களை, பரீட்சைகள் திணைக்களம், தமக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜங்க அமைச்சு மற்றும் மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான மாணவர்களுக்கு ஜப்பான் போன்ற நாடுகளில் பெருமளவிலான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாட்டிலும் இவ்வாறான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள www.dome.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்குமாறு மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல கேட்டுக்கொண்டுள்ளார்.

90,000 மெற்றிக் தொன் சீன உரம் இறக்குமதி!!!எதிர்காலத்தில் சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய எத...
12/01/2022

90,000 மெற்றிக் தொன் சீன உரம் இறக்குமதி!!!
எதிர்காலத்தில் சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

எதிர்வரும் பருவத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் சீன உர கையிருப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னர் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பலில் இருந்து உரம் எடுக்கப்பட மாட்டாது என்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் பல பகுதிகளில் கன மழை!!!வட கீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்ட...
04/01/2022

இன்றும் பல பகுதிகளில் கன மழை!!!
வட கீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, மேல், வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மேல், சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அதிக மழை காரணமாக பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளன.

Address

Kaluwanchikudy
Batticaloa
30200

Alerts

Be the first to know and let us send you an email when BCC TAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCC TAMIL:

Share