Our Story
தாய்மண் வாசகர்களுக்கு வணக்கம்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து தாயக மக்களுக்கான தேசிய செய்தி இணையத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற பலரது வேண்டுகோளுக்கு அமைய கிழக்கின் முதலாவது தேசிய இணையத்தளமாக தாய்மண் இணையத்தளம் பிறப்பெடுத்துள்ளது.
இதுவரை காலமும் மாவட்டம்இ மாகாணம் என குறுகியவட்டத்துக்குள் நின்று செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தின் ஊடக அடையாளத்தை முதல்தடவையாக இந்த தாய்மண் இணையத்தளம் ஊடாக உலகம் முழுவதும் உள்ள தாயக மக்களின் செய்திகளை பிரசுரிக்கும் வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக புலத்தில் இருந்து பல இணையத்தளங்கள் செயற்பட்டாலும் களத்தில் இருந்து உருவாக்கம் பெறுகின்ற இதுபோன்ற இணையத்தளங்களின் செயற்பாடுகள் பெறுமதிமிக்கவையாகவும் உண்மையை உறுதிப்படுத்த கூடியதாகவும் உள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மண்ணில் இருந்து உருவாக்கம் பெற்றுள்ள எங்களது தாய்மண் இணையத்தளமானது கிழக்கு ஊடக நண்பர்களின் அடையாளமாக செயற்படவுள்ளதுடன் கிழக்கின் தேசிய அடையாளமாக தாய்மண் ஊடகம் உண்மை, நடுநிலமை, பொறுப்புக்கூறல் போன்ற ஊடக தர்மத்தின் கோட்பாடுகளை கடைப்பிடித்து செயற்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்து அனைத்து வாசகர்களும் தாய்மண் இணையத்தளத்தை வரவேற்று ஆதரவுக் கரம் நீட்டி எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அனைத்து ஊடக நண்பர்கள்இமற்றும் பொதுமக்களை தாய்மண்ணின் வளர்ச்சிக்காக பணியாற்றுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
தாய்மண் பற்றிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
தொடர்வுகளுக்கு:
மின்னஞ்சல்: [email protected]