𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • 𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥

𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது WhatsApp group இல் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf

தொடர்புகளுக்கு:- 077 263 5032
(7)

*காணாமல் போன பொருள் பற்றிய அறிவித்தல்*மேலே படத்தில் காணப்படும் இந்த கைப்பட்டி இன்று பாலமுனை வீதியிலிருந்து காத்தான்குடி ...
29/08/2025

*காணாமல் போன பொருள் பற்றிய அறிவித்தல்*

மேலே படத்தில் காணப்படும் இந்த கைப்பட்டி இன்று பாலமுனை வீதியிலிருந்து காத்தான்குடி ஹொஸ்டல் வீதி வரை காணாமல் போய் விட்டது.

கண்டெடுத்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

077 263 5032
077 848 7124

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

29/08/2025

📌 வாழிப நபிமார்கள் ஸஹாபாக்களின் தியாகமும் இன்றைய வாழிபர்களின் நிலைமையும்

29/08/2025

💥 அல்லாஹ் படைப்பினங்களிடம் சவால் விடுகின்றான்

இலங்கை அரசியலில் தொடரும் அலைஎம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.இலங்கை அரசியலை கடலலைகளோடு ஒப்பிடுவது மிகத்தகுந்த உவ...
29/08/2025

இலங்கை அரசியலில் தொடரும் அலை

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.

இலங்கை அரசியலை கடலலைகளோடு ஒப்பிடுவது மிகத்தகுந்த உவமை. ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய அலை போல எழுந்து, அரசியல் கரையை மாற்றியமைக்கிறது. சில அலைகள் உயர்ந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, சில அலைகள் கரையை மட்டும் வருடி மறைந்து விடுகின்றன.

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன சிறிய, சிறுபான்மைக்கட்சிகளோடு கூட்டிணைந்து ஆட்சியமைத்து வந்திருக்கிறது. இனவாத அலைகளை தோற்றுவித்து ஆட்சியைப்பிடித்ததன் விளைவுகள் தான் இலங்கையில் இன முரண்பாட்டைத்தோற்றுவித்து யுத்த சூழ்நிலைக்கு சென்று பேரழிவுகளைச்சந்திக்க நேர்ந்தது என்பதை யாரும் மறப்பதற்கில்லை.

இவ்வாறான தொடரில் அரசியலில் ஏற்பட்ட அலைகளை நாம் பார்க்கும் போது முன்னாள் பிரதமர் பண்டார நாயக்க குடும்ப அரசியல் முடிவுக்கு வந்து ராஜபக்ஷ குடும்ப அரசியல் ஆரம்பமான காலத்திலிருந்து இதுவரை ஏற்பட்ட அரசியல் அலைகளைப் பார்க்கலாம்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்து அலை (2005 – 2015)

மஹிந்த ராஜபக்ஷவின் எழுச்சி 2005 தேர்தலில் தொடங்கி 2009 இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் அது போருக்குப்பிந்தைய "வெற்றி அலை"யாக இருந்தது. போரை வெற்றி கொண்டு, நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கியதால், அந்த அலை வலிமையுடன் எழுந்த போதும், காலப்போக்கில் அதே அலை ஊழல், குடும்ப ஆட்சி, அதிகாரக்குவிப்பு போன்ற பல்வேறு விடயங்களால் மக்கள் மனதில் சோபை இழந்தது.

அதன் விளைவாக கூட்டு எதிரணியினர் ஒன்று சேர்ந்து மஹிந்த அணியிலிருந்த மைத்திரியை பிரதான எதிர்கக்ட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உள்வாங்கி ஏனைய எதிர்க்கட்சிகளையும் சிவில் சமூக அமைப்புகளையும் ஒன்று சேர்த்து சர்வதிகார குடும்ப ஆட்சிக்கெதிரான மைத்திரி அலையைத் தோற்றுவித்தார்கள்.

மைத்திரி அலை (2015)

2015 ஜனாதிபதித்தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, ஒரு "மாற்றத்தின் அலை"யாக மக்களால் பார்க்கப்பட்டது. சிறிய படகில் புயலை எதிர்கொண்டு வந்தவர் போல, எதிர்பாராதவிதமாக மஹிந்தவின் வலிமையான அலைக்குப்பின்பு வெற்றியடைந்தார்.

நல்லாட்சிக்கான எதிர்பார்ப்பு, ஜனநாயக சீர்திருத்தம் போன்ற கனவுகள் அந்த அலையில் மிதந்தன. ஆனால் செயற்பாட்டில் பலவீனமும், அரசியல் உடன்படிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்குமிடையில் ஏற்பட்ட அதிகார மோதல், 52 நாள் அரசியல் குழப்பம் என்பன தளர்வை ஏற்படுத்தின.

இவ்வாறு நல்லாட்சி பலவீனப்படுத்தப்பட்டதால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அரசியலில் ஓரங்கட்டப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் நல்லதொரு வாய்ப்புக்கிடைத்தது.

கோட்டாபாயே அலை (2019)

ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுவெடிப்பு பிந்தைய அச்சமும் பாதுகாப்புத்தேவையை முன்னிலைப்படுத்தி "கோட்டா அலையை" உருவாக்கினார்கள். 2019 இல் கோட்டாபய ராஜபக்ச இனவாதத்தைத்தூண்டி வெற்றி பெற்றார்.

மக்கள் பாதுகாப்புக்காகத் தேடிய வலிமையான அலை என நம்பினார்கள். ஆனால், ஆட்சி நடத்தும் திறமையின்மை, COVID-19 நிர்வகிப்பதில் தோல்வி, பொருளாதாரச்சரிவு ஆகியவை அந்த அலையை மிக வேகமாக பின்வாங்கச்செய்தன. அது கோட்டா அலைக்கெதிரான மக்கள் எதிர்ப்பு அலையாக சுனாமி அலை போல வந்து ஜனாதிபதி கோட்டாபாயவை நாட்டைவிட்டே விரட்டியடித்தது.

ஆட்சியின் மீதி காலத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அன்று ஏற்பட்டிருந்த பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளைக்கண்டு வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தாலும், அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் நாட்டை மீட்ட தலைவர் என ஒரு அலையை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என முயற்சித்தாலும் அந்த தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்பட்டதாலும், கடந்த ஆட்சியின் போக்கில் மக்கள் அதிர்ப்தியில் இருந்ததாலும், நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் எழுச்சி போராட்டங்களில் அனுர குமாரதிசாநாயக்கவின் பங்கு என்பவற்றோடு, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்திய விதம் என்பவற்றால் மக்களிடத்தில் பெரிதும் அனுர குமாரதிசாநாயக்க கவரப்பட்டதால் அனுர அலை தோற்றம் பெற்றது.

இருப்பினும், ஜனாதிபதித்தேர்தலில் அனுரவுக்கு அலை உண்டானதான ஒரு பிரம்மை ஏற்படுத்தப்பட்டாலும் ரணிலுக்கு 22 இலட்சம், சஜீத் 45 இலட்சம், நாமல் 3 இலட்சம் எனை வாக்குப்பிரிப்பு அனுரவுக்கு அலை உருவானதான பிரம்மை உருவாக தோற்றப்பாட்டை உருவாக்கியது எனலாம். மொத்தத்தில் பார்க்கும் போது எதிரணி கணிசமான வாக்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாராளுமன்ற வெற்றியைத்தொடர்ந்து ஏற்பட்ட தொடர் வெற்றி என்பது அனுரவுக்கான அலை எனக்கொள்ள முடியாவிட்டாலும் மக்கள் மனோநிலையில் எதிரணியினர் மீதான அவநம்பிக்கை, ஒற்றுமையின்மை என்பன அனுரவுக்கான வெற்றியை இலகுபடுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.

அனுர அலை (2024)

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) நீண்ட நாள் போராட்டத்தோடு, தேசிய மக்கள் சக்தியாக மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து இடைவிடாத முயற்சியின் பலனாக அனுர அலை எழும்பியது.

அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) நீண்ட காலமாக "மாற்றத்தின் புது அலை" என மக்கள் மத்தியில் தோன்றிக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள், நடுத்தர மக்கள், ஊழல் எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் இவரது அலையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கை தரும் வாக்குறுதிகளை அளித்ததன் விளைவாக பாராளுமன்றத்திலும் 2/3 பெரும்பான்மைக்கு அதிகமான பிரதிநிதிகளை மக்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த அலை இன்னும் முழுமையாகக் கரையை அடையவில்லை; அது கரையோரத்தில் சேமித்து வைக்கப்பட்ட சக்தி போலத்தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.

ஆனாலும், ஆட்சியைப்பிடிப்பதற்கு முதல் கடந்த அரசாங்கங்களால் முன்னெடுத்து ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்பவற்றை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து விட்டு, ஆட்சியை பிடித்த பின்னர் அதனைத்தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வது என்பதும், அதனை மேலும் ஆதரிப்பதென்பதும் ஆட்சியைப்பிடிக்க மக்களை ஏமாற்றிய செயலா? என கேள்விகளும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளை அனுர அரசாங்கம் இழந்திருப்பதும் இது ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்திருப்பதும் அரசாங்கத்தின் போக்கில் மக்களின் அதிருப்தி வெளிப்படுவதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இலங்கை அரசியலில் சூடுபிடித்திருக்கும் செய்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விவகாரமாகும்.

இவ்விவகாரம் ரணில் மீதான அனுதாப அலையை தோற்றுவித்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவை சாத்தியப்படுத்தும் நிலை உருவாக்கியுள்ளது. அத்துடன், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி ரணில் என்ற ஆளுமையிடமே உள்ளதெனலாம்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியும் ரணிலைக் கண்டு பயங்கொள்வதைத்தான் குறித்த கைது பின்னணி வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. ரணிலை வெளியில் விட்டிருப்பதால் தேசிய மக்கள் சக்திக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற ஒரு காரணமும் ரணிலை கைது ஜெயில் வைத்தியசாலை என முடக்க காரணமாக அமைகின்றது.

அத்தோடு, பட்டலந்தைக்கு பழிவாங்க சுமார் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில் இன்று அரச நிதி துஸ்பிரயோகம் என்ற வலைக்குள் சிக்க வைக்கப்ப்ட்டுள்ளார்.

அடுத்து மத்திய வங்கி பிணைமுறி என தொடர் குற்றச்சாட்டுக்களால் ரணிலின் அரசியல் வாழ்வு முடித்து வைக்கப்படும்.

தேசிய மக்கள் சக்திக்குள்ள ஒரே சவால் ரணிலே தவிர வேறு யாருமில்லை. ரணிலைக்கண்டு அச்சங்கொள்வதால் தான் அவரை முடக்கத்திற்கு கொண்டு வர அரசு எத்தனிக்கிறது.

2022ல் பொருளாதார சுனாமி இலங்கையைச் சிதறடித்த போது, அதிர்ச்சி மற்றும் குழப்பத்தின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அரசைப்பொறுப்பேற்றார். பலரால் நிராகரிக்கப்பட்டாலும் நாட்டை நிலைநிறுத்தும் முயற்சியில் வெளிநாட்டுத்தொடர்புகள், கடன் மறுசீரமைப்புகள், தற்காலிக பொருளாதார நிலைத்தன்மை போன்றவையில் குறிப்பிட்டளவு வெற்றி கண்டார். அதன் காரணமாக மக்கள் மத்தியில் தற்போது அவருடைய கைது விடயத்தில் அனுதாப அலை உருவாக்கியுள்ளது.

ஆனால், இது உண்மையான மக்கள் எழுச்சியால் வந்த அலையல்ல. மாறாக, சிதைந்த கடலில் மூழ்காமல் காப்பாற்றும் தற்காலிக அலை போன்றது. இதனை எதிர்க்கட்சிகள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றது என்பதில் தான் இதன் வலிமை தங்கியிருக்கிறது.

எதிர்வரும் தேர்தலில் இந்த அலையின் வலிமை சோதிக்கப்படும். அது மக்களின் மனதில் நம்பிக்கை அலையைபாயச் செய்யுமா? அல்லது மக்கள் மீண்டும் மாற்றத்திற்காக அனுர அலையை அல்லது மாற்றத்திற்கான வேறு அலையை தேடுவார்களா? என்ற கேள்வி திறந்த நிலையிலுள்ளது.

இந்த அலை எதிர்கால அரசியலுக்கான அலை என ஒரு சில தரப்பு காட்டிக்கொள்ள முனைந்தாலும் வழக்கு, நீதிமன்றம் என தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான கூடாரமாக இதனைப்பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். என்பது வெளிப்படை.

ரணிலே வழக்கு, நீதிமன்றம் என அலைய விடும் அரசு ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டு கோவைகளை தூசு தட்டி சங்கிலிக்கோர்வையாக எடுக்கும் போது ஓரணியில் திரள்வதை தடுக்கும் என்பது நிச்சயம்.

இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொள்ளும் போது எதிர்காலத்தில் இலங்கை அரசியல் மூன்று சாத்தியமான அலைகளை எதிர்கொள்கிறது:

1. ரணிலின் அனுதாப அலை –
நிலைத்தன்மை, சர்வதேச ஆதரவு என்ற அடிப்படையில் ஒரு குறுகிய கால அலையை நீண்ட அலையாக எதிர்கட்சிகள் மாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

2. அனுர அலை –
ஊழல் எதிர்ப்பு, இளைஞர் சக்தி, மாற்றம் என்ற அடிப்படையில் வலுவான அலையாக மாற முயற்சிக்கலாம்.

3. பழைய குடும்ப அலைகள் (மஹிந்த – கோட்டா வகை) – சில பகுதிகளில் இன்னும் நிலைத்து நிற்கலாம், ஆனால், அதன் வலிமை குறைந்துள்ளது. ஆனாலும், நாமலூடாக வலுப்படுத்த முயற்சிக்கலாம்.

எனவே, இலங்கை அரசியலில் ஒவ்வொரு தேர்தலும் ஏதொவொரு அலை ஏற்படுத்துகின்றது. மஹிந்த அலை மக்களை வெற்றிக்குப்பின் கொண்டு சென்றாலும் ஊழலில் கரைந்தது; மைத்திரி அலை நம்பிக்கையைத் தூண்டியும் நீண்டு நிற்கவில்லை; கோட்டா அலை பாதுகாப்பின் பெயரில் நாட்டைச் சிதைத்தது; அனுர அலை இன்னும் கரையைக்காண விழைகிறது. தற்போது ரணில் அனுதாப அலை அரசியலில் தற்காலிக அமைதியை வழங்குகிறது.

ஆனால், இறுதிக்கேள்வி ஒன்றே. எந்த அலை மக்கள் நம்பிக்கையை நிரந்தரமாகத் தாங்கிச்செல்லும்?
அதற்கான விடை வரவிருக்கும் தேர்தலில் மட்டுமே வெளிப்படும்.

மக்கள் மத்தியில் ஏற்படும் கொந்தளிப்பான நிலை தான் அலையாக மாற்றம் பெற்று அரசியல் மாற்றமாக வலுப்பெறுகின்றது. மக்கள் சுயபரிசோதனை என்பதைத் தாண்டி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் அரசியல் மாற்றத்துக்கான எண்ணப்பாடுகள் தோற்றம் பெறுவதுடன், மக்கள் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இன, மதவாத அரசியலுக்கும் முக்கியத்துவம் பெற்று இனவாத, மதவாத ஆட்சியாக மாற்றம் பெறுகின்றன.

மக்கள் சுய சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமையினால் கடந்த கால அரசியல் மாற்றங்க்களுக்கு இன, மதவாத சிந்தனை துணை போனது என்பது வரலாறாகும்.

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

Urban Council -CITY BUS SERVICE 🚌 -ஊர் சுற்றிப்பார்க்க விரைவில்- Riyaj Mahmood  🤝📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️உடனுக்குடன்...
29/08/2025

Urban Council -
CITY BUS SERVICE 🚌

-ஊர் சுற்றிப்பார்க்க விரைவில்-

Riyaj Mahmood 🤝

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

நமத நாட்டில் புதிய 2000/= ரூபாய் நாணயத் தாள் இன்று வெளியானது.Arafath jp 29,08,2025
29/08/2025

நமத நாட்டில் புதிய 2000/= ரூபாய் நாணயத் தாள் இன்று வெளியானது.
Arafath jp 29,08,2025

📸 மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி...
29/08/2025

📸 மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் நட்பு மற்றும் அரசியல் விடயங்களைப் பகிர்ந்து கொண்ட தருணம்.

📍 Parliament of Srilanka

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

🎖️ காத்தான்குடியை சேர்ந்த  முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் எனும் மாணவன் சர்வதேச போட்டியில் சாதனைபுதிய காத்தான்குடி 03 ஐச் சேர்ந்த த...
29/08/2025

🎖️ காத்தான்குடியை சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் எனும் மாணவன் சர்வதேச போட்டியில் சாதனை

புதிய காத்தான்குடி 03 ஐச் சேர்ந்த தரம் 8 இல் கல்விகற்கும் முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் எனும் மாணவன் 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளார்.

இம் மாணவனுக்கு எனது வாழ்த்துக்கள் 💥

🔴ARRESTED முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  #அதுரலிய ரத்ன தேரோ கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளார்.29.08.2025📌𝐓𝐡𝐞𝐥𝐢...
29/08/2025

🔴ARRESTED

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் #அதுரலிய ரத்ன தேரோ கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளார்.
29.08.2025

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

29/08/2025

🟢 MUHAIDEEN JUMMAH MASJITH PONOCHIMUNAI

📌நபி (ஸல்) அவர்களின் கடைசி நிலைமையும் மறுமை வாழ்வும்

🎙️AL HAFIZ ABDURRAHMAN HASHIMI LECTURE OF KULLIYATHU SA'AD ARABIC COLLEGE MAVADIPPALLI

🗓️29.08.2025

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

29/08/2025

மண்முனை வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

28/08/2025

💫 15.08.2025 ஜூம்ஆ பிரசங்கம்

https://www.facebook.com/share/16qryLDZG3/

🎙️அஷ்-ஷேய்க் M.A. AKRAM (NALEEMI)
CEO, RISE SRILANKA DIRECTOR OF OPERATIONS,ABRAR FOUNDATION

📌𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥⚠️
உடனுக்குடன் செய்திகளை அறிய:-
https://chat.whatsapp.com/IDfoLXlYAwuL4PgQ52DjFf.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐓𝐡𝐞𝐥𝐢𝐯𝐮 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐓𝐯 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share