KKYxpress

KKYxpress Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KKYxpress, Social Media Agency, Kattankudy, Kattankudi.

KKYxpress Media Network

தேசிய,சர்வதேச செய்திகள், பொது தகவல்கள் மற்றும் சுய ஆக்கங்கள் என பயனுள்ள பல விடயங்களை முகநூல் ஊடாக சுமந்து வரும் ஊடகச் சேவை.
நீங்களும் உங்கள் செய்திகள், ஆக்கங்களை எமக்கு அனுப்பலாம்
WhatsApp- +94779133003
E-Mail- [email protected]

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை – மாணவர்கள் கௌரவிப்பு.....மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் 2026 ஆ...
07/09/2026

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை – மாணவர்கள் கௌரவிப்பு.....

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் சித்திப் புள்ளியினை பெற்ற மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பாடசாலையின் காலை ஆராதனைக் கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் அவர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பிற்காக வாழ்த்தி ஊக்குவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் இச்சிறந்த பெறுபேற்றுக்கு வழிகாட்டிய அதிபர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வகுப்பாசிரியர், ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்!
இம்மாணவர்களின் கல்விப் பயணம் மேலும் சிறப்புற்று, எதிர்காலத்தில் பல்வேறு வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக! ஆமீன். 🤲✨

ஊடாக பிரிவு-
மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயம்.
(07.09.2026)

காத்தான்குடி பேராளர் மாநாடு – ஒரு வரலாற்றுத் திருப்பம்காத்தான்குடி மீண்டும் ஒரு வரலாற்றை எழுதப் போகிறது!எதிர்வரும் 16ஆம்...
07/09/2026

காத்தான்குடி பேராளர் மாநாடு – ஒரு வரலாற்றுத் திருப்பம்
காத்தான்குடி மீண்டும் ஒரு வரலாற்றை எழுதப் போகிறது!

எதிர்வரும் 16ஆம் திகதி காத்தான்குடியில் நடைபெறவிருப்பது வெறுமனே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு மாத்திரமல்ல.
இது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்கவும், புதிய அரசியல் பாதைக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கவும் போகும் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

காலத்தின் மாற்றங்களுக்கும், சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணம் புதிய பரிமாணத்தை அடைய வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

அரசியல் என்பது வெறுமனே பதவிகளுக்காகவும் அதிகாரத்திற்காகவும் அல்ல. அது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கும், மக்களின் குரலை உரிய இடத்தில் வலிமையாக ஒலிக்கச் செய்வதற்குமான ஒரு பொறுப்பாகும்.

அந்த வகையில், 16ஆம் திகதி காத்தான்குடியில் கூடவிருக்கும் பேராளர் மாநாடு, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் நிகழ்வாக அமைய வேண்டும்.

இது ஒரு மாநாடு மட்டுமல்ல…

இது ஒரு அரசியல் எழுச்சிக்கான அழைப்பு.
இது ஒரு புதிய நம்பிக்கைக்கான தொடக்கம்.
இது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தருணம்.

வரலாறு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே எழுதப்படுவதில்லை;
சரியான தருணத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளால் வரலாறு உருவாக்கப்படுகிறது.

அந்த வரலாற்றுத் தருணத்தை நோக்கி காத்தான்குடி தயாராகிறது.

16ஆம் திகதி — காத்தான்குடியில் இருந்து ஒரு புதிய அரசியல் பயணம் ஆரம்பமாகட்டும்!

Younus Razick
SLMC Youth Organizer – Nawalapitiya

🕌🎓 காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57ஆவது பட்டமளிப்பு விழா..!காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி...
06/09/2026

🕌🎓 காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57ஆவது பட்டமளிப்பு விழா..!

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57ஆவது பட்டமளிப்பு விழா இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பரீட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.எம். அலியார் (பலாஹி, ரியாழி), MA அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.எஸ்.எம். பாறூக் (பலாஹி, அஸ்ஹரி), MA முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா நிறுவனத்தின் முதல்வர் அஷ்-ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களும், கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் தமது கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் இக்கல்லூரியில் கல்வி கற்று தற்போது கலாநிதி பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட பலரும், கல்வி மற்றும் மார்க்கத் துறைகளில் அவர்கள் பெற்ற சாதனைகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவதில் அரபுக் கல்லூரிகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறப்புரைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிவரும் சேவைகள் மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டி, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மக்களின் நலன், கல்வி, சமூக அபிவிருத்தி, இளைஞர்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், JP, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

57 ஆண்டுகால சிறப்புமிக்க கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் வரலாற்றில், இப்பட்டமளிப்பு விழா மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

-- ஊடகப்பிரிவு

🇱🇰 இலங்கையின் GLOCAL TEEN HERO SRI LANKA 2026 ஆக அமாஸிர் அமானத் தேர்வு.....மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த இளம் வ...
06/09/2026

🇱🇰 இலங்கையின் GLOCAL TEEN HERO SRI LANKA 2026 ஆக அமாஸிர் அமானத் தேர்வு.....

மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த இளம் வானியல் ஆர்வலரும், அறிவியல் கல்வியாளரும், ஆய்வாளருமான அமாஸிர் அமானத், GLOCAL TEEN HERO SRI LANKA 2026 ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,தெற்காசிய நாடுகளுக்குள் நடந்த இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து 298 இளைஞர்கள் விண்ணப்பித்த நிலையில் 17வயதுடைய அமாஸிர் அமானத் தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமாஸிர், Nebula Nova Academy மூலம் வானியல் மற்றும் அறிவியல் கல்வியை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், கிழக்கு மாகாணத்தில் Astronomy Society of Al Hira மாணவர் வானியல் முயற்சியையும் நிறுவியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற GLOCAL TEEN HERO SOUTH ASIA 2026 நிகழ்ச்சியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற அதிகாரப்பூர்வ விருது வழங்கும் விழாவில் தனது விருதைப் பெற்றுக்கொண்டார்.

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஆரம்பம்25-க்கும் மேற்பட்ட ப...
05/09/2026

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி ஆரம்பம்

25-க்கும் மேற்பட்ட பயிலுநர்களுக்கு முதலாம் நாள் பயிற்சி.....

(தில்சாத் பர்வீஸ்)

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ், பயிலுநர்களுக்கான நீச்சல் பயிற்சியின் முதலாம் நாள் நிகழ்வு இன்று (05) சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டட தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட பயிலுநர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.

இதன்போது, அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் ஏற்கனவே பயிற்சி பெற்ற M.T.M. றிசாட், M.T.M. இஸ்காத், S.N. தில்சாத் பர்வீஸ் மற்றும் M.T. பைசல் முஹம்மட் ஆகியோரினால் பயிலுநர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, நீச்சல் தடாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், நீச்சலின் அடிப்படைப் பயிற்சிகள், நீரில் பாதுகாப்பாக செயற்படும் முறைகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஆரம்பகட்ட வழிமுறைகள் தொடர்பில் பயிலுநர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்துடன், நீரில் ஏற்படும் அவசரநிலைகளின்போது துரிதமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படுவதற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் பயிலுநர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் பயிற்சி பெற்ற உறுப்பினர்களான A.R.M. மஜீட், M.M. சதாத் மற்றும் N.TM. ஜெமீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்படக்கூடிய நீர்சார் அனர்த்தங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின்போது துரிதமாகச் செயற்பட்டு உயிர்களைக் காப்பாற்றக்கூடிய திறமையான உயிர்காக்கும் மற்றும் மீட்புப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் இத்தகைய பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் - மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி ந...
05/09/2026

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் - மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கோரிக்கை.....

(நூருல் ஹுதா உமர்)

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைதீவு பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் யானைகள் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களை நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால், மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் அச்சநிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பங்களில் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், மனித–யானை மோதல் என்பது மக்களின் பாதுகாப்பையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் ஒரு தீவிர பிரச்சினையாகும் என தெரிவித்துள்ளார்.

யானைகளின் நடமாட்டம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல்கள் கிடைத்து வருவதாகவும், இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் பிரதேசத்திற்கு நேரடியாக வருகை தந்து நிலைமையை ஆராய வேண்டும் என்றும், யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நிரந்தர மற்றும் நடைமுறைச் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், யானைகளின் வழக்கமான நடமாட்டப் பாதைகள் மற்றும் அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை கண்காணிப்பதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், யானைகள் தொடர்பான அவசர நிலைமைகளில் பொதுமக்கள் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய வகையில் உரிய அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் அவசர நடவடிக்கை பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைதீவு பிரதேசத்தில் விவசாயிகளின் பயிர்களுக்கும் யானைகளால் சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், மனித உயிர்களைப் பாதுகாப்பதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

“மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிரிழப்பு அல்லது பாரிய சொத்து சேதம் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதை விட, அதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே மிகவும் முக்கியமானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!......இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வ...
05/09/2026

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!......

இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலை விபரம் வருமாறு:

இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.

அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(TN)

கல்முனை கல்வி மாவட்ட Task Cricket Carnival -2026 அறிமுகம் நிகழ்வு...!!!(றியாஸ் இஸ்மாயில்)கல்முனை கல்வி மாவட்ட "Task Cric...
04/09/2026

கல்முனை கல்வி மாவட்ட Task Cricket Carnival -2026 அறிமுகம் நிகழ்வு...!!!

(றியாஸ் இஸ்மாயில்)

கல்முனை கல்வி மாவட்ட "Task Cricket Carnival -2026" உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு இச்சுற்றுப் போட்டி குழுவின் செயலாளர் சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் MFM.நழீர் நெறிப்படுத்தலில் இச்சுற்றுப் போட்டிக் குழுவின் தலைவர் தலைவர்
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் PMY.அறபாத் முகைதீன் தலைமையில் இன்றைய தினம் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை சம்மாந்துறை திருக்கோயில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகங்களின் உள்ள உத்தியோகத்தர்கள் இச்சுற்றுப் போட்டியில் பங்கு கொள்ளவுள்ளனர் இது தொடர்பில் விதிமுறைகள் இங்கு முன்வைக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது

இதன் போது இதற்கான வெற்றிக் கிண்ணத்தை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் PMY.அறபாத் முகைதீன் அறிமுகம் செய்து வைத்தார்.

கல்முனை கல்வி மாவட்ட வலயங்கள் சார்பில் கலந்து கொண்ட உத்தியோகத் தர்கள் விதிமுறைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பங்களை வைத்தனர்.

இந்த மாதம் இச்சுற்றுப் போட்டி லீக் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

இதன் போது வலயங்களுக்கான சீருடையின் நிறங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது

திருக்கோயில் கல்வி வலயம் - மஞ்சள்
கல்முனை கல்வி வலயம் - பச்சை
சம்மாந்துறை கல்வி வலயம் - மெரூன்
அக்கரைப்பற்று கல்வி வலயம் - நீலம்

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பா ளர்களான திருமதி தனுசியா ராஜசேகர், B.ஜிஹானா ,AGM.ஹக்கீம், நிருவாக உத்தியோகத்தர் AM.றிம்சான் சுற்றுப் போட்டிக் குழுவின் பொருளாளர் MYM
காதபி.ISA உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.பாயிஸ் உட்பட சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வலயங்களின் பிரதிநிதிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமல் எம்.பிக்கு விளக்கமறியல்......இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இல...
04/09/2026

நாமல் எம்.பிக்கு விளக்கமறியல்......

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(TN)

நாமல் எம்.பி. கைதுபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆ...
04/09/2026

நாமல் எம்.பி. கைது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Address

Kattankudy
Kattankudi
30100

Telephone

+94779133003

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKYxpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KKYxpress:

Shortcuts

Share