Rifan's Guide

Rifan's Guide Illuminate your path with knowledge, learning is the key to endless possibilities. ☀️📚

12/06/2026

🚀SKIP A/L, START YOUR DEGREE?

A/L படிக்காம O/L முடிச்சிட்டு Degree அ start பண்ணலாமா???

11/06/2026

Don't Buy a Laptop Before Watching This! | Complete Laptop Buying Guide 2026

01/06/2026

முக்கியமான சில தீர்மானங்களை எப்பவும் உங்களுக்காக மாத்திரமே எடுங்கள்........
Decision Making is one of the most important skills in our life.

31/05/2026

Government vs Private Sector Jobs in Sri Lanka (2026).

Looking for jobs in Sri Lanka? Here is a quick comparison of Government vs Private Sector Jobs in Sri Lanka (2026). We break down the pros and cons of both sectors so you can decide where to build your career.

Don't step into the job market without knowing these realities!

📌 Subscribe to for daily educational and career tips.

Lanka

30/05/2026

Don't Make This Mistake After O/Ls! How to Select the Right A/L Stream & Job Market

மாணவர்களே, அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுத்து உங்கள் காலத்தை வீணாக்காதீர்கள்! தற்போதைய வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ற சிறந்த பாடநெறிகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் குறித்த முழுமையான வழிகாட்டல் இந்த வீடியோவில்.

📺 முழு வீடியோவையும் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://youtu.be/kCNHf8Rm0Jo

இப்படி யாருமே Motivation கொடுத்தது கிடையாது... படிக்க படிக்க சாதிக்க துண்டும் வார்த்தைகள் : நீங்கள் இன்று எங்கே இருக்கிற...
19/04/2025

இப்படி யாருமே Motivation கொடுத்தது கிடையாது... படிக்க படிக்க சாதிக்க துண்டும் வார்த்தைகள் :

நீங்கள் இன்று எங்கே இருக்கிறீர்கள்!!!
என்பதில் முக்கியம் இல்லை ...
எங்கே போகிறீர்கள் என்பதே முக்கியம்! 🌱

“துவக்கம் எங்கே இருந்து என்பதை விட, முடிவு எங்கே இருக்கிறது என்பதுதான் வாழ்க்கையை அமைக்கிறது.”
இது வெற்றியாளர்களின் ரகசியம்!

ஒரே நேரத்தில் இருவர் ஒரே பள்ளியில் படித்தார்கள்.
ஒருவரின் தந்தை IAS அதிகாரி, மற்றொருவரின் தந்தை ஒரு டீ கடை நடத்துகிறவர்.
இருவரும் ஒரே வகுப்பில்,
ஒரே பாடங்களை, ஒரே ஆசிரியர்களிடமிருந்து கற்றனர்.
ஆனால் 10 வருடங்களுக்கு பிறகு ஒருவன் ஒரு கார் நிறுவனத்தில் CEO ஆனார்,
மற்றொருவன் கூடவே அந்த கம்பனியில் ஒரு டிரைவர்.

நாம் நினைப்பது போல வாழ்க்கை நியாயமானது அல்ல…
ஆனால் அது சாத்தியமானது!
நீங்கள் இன்று எங்கு இருக்கிறீர்கள் என்பது எப்போதும் முக்கியம் இல்லை,
நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் என்பது தான் வாழ்க்கையை மாற்றும் முடிவு!

1. உங்கள் பின்னணியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் – உங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள்!

பின்புலம் ஒரு நிலைத்த அடையாளம் அல்ல ,,
அது ஒரு ஆரம்ப புள்ளி மட்டும்!
நீங்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே வாழ்க்கையின் முதல் படி!

2. சமயமாக ஏமாற்றங்கள் வரும் – ஆனால் அவை உங்களை உருவாக்கும்!

எதிர்ப்புகள் ஒரு கதை சொல்லும்: "அவன் எவ்வளவு உறுதியுடன் மாறினான்" என்பதே முக்கியம்.

3. உங்கள் கனவுகள் தான் உங்கள் நிஜ அடையாளம்!

“நான் இப்படி இருக்கவே கூடாது” என்ற எண்ணம் வந்தால், அதுவே மாற்றத்தின் ஆரம்பம்!

4. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய முன்னேற்றம் – பெரிய மாற்றத்திற்கு வழி!

ஒரு நாள் 1% முன்னேற்றம் மட்டும் செய்தால், ஒரு வருடத்தில் 365% முன்னேற்றம்!
Consistency is the new superpower. ⚡

5. மற்றவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை – நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள்! 🧠

உலகம் உங்களைத் தான் பார்த்துக்கொள்வது இல்லை… உங்கள் செயல்கள், உங்கள் பயணம், உங்கள் வெற்றிகள் தான் பேசும்!

6. உண்மையான வளர்ச்சி – உங்களுக்குள் தான் நடக்கிறது! 🌱

வெளியில் என்ன நடக்கிறது என்பதை விட,
உள் மனதில் என்ன வளர்கிறது என்பதே முக்கியம்.
வாழ்க்கையின் மாற்றம் உங்கள் உள்ளத்தின் மாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது.

7. நீங்கள் செய்த தவறுகளை வீண்பாடாக நினைக்காதீர்கள் – அவை உங்கள் பாடங்கள்!

Failure is not opposite of success – it’s part of success!

8. ஒரு பெரிய கனவுக்கு சிறிய துடிப்பு போதும் – நம்பிக்கையுடன்! 🔥

புதிய பாதைகள்,
புதிய சூழ்நிலைகள்,
புதிய உயரங்கள்...
இவை எல்லாம் உங்களுக்காக தான்!

9. துவக்கம் சிறியது என்றால் கவலைப்படாதீர்கள் – முடிவு மிகப்பெரியது ஆகலாம்! 🚀

அப்துல் கலாம் கடலோர கிராமத்தில் பிறந்தார்…
ஆனால் விண்வெளியை நோக்கி பறந்தார்!

10. உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்ற முடியும் – இன்று தான் சரியான நாள்!

“என்றாவது ஒரு நாள்…”
என்று நினைக்கும் போது,
அதை இன்று மாற்றுங்கள்.
ஏனெனில் இன்று செய்யும் ஒரு செயல் – நாளை உங்கள் வாழ்க்கையை மாற்றும்!”

> "Success doesn’t care where you start from, only how far you’re willing to go."
"பாதை சுருங்கியது என்றால், உங்கள் கனவை கூட சிறிதாக்க வேண்டிய அவசியமில்லை!"

இந்த நாள் தான் உங்கள் திருப்புமுனை – உங்கள் கனவுகளை நோக்கி ஒரு பாய்ச்சி எடுங்கள்!

உலகம் பாராட்டும் முன்,
நீங்கள் உங்களை நம்புங்கள்!
உங்களால் முடியும்.
இன்னும் அதிகம்,
மேலும் சிறந்ததைக் காண முடியும்!

09/02/2025
14/01/2025

நீங்களும் Solar System ஒன்றை செய்வதன் மூலம் நிலையான வருமானம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள எண்ணுபவரா? ....

☎️ Contact us for free Guidance - 075 2056661

MCM.Rifan B.Eng.Tech (Hons)
Assistant Engineer
Hayleys Solar

20/10/2024
02/06/2024

எனக்கும் Medicine கிடைக்கவில்லை. 😄

மூன்று தடவைகள் A/L பரீட்சை எழுதி மூன்றாவது தடவையும் Medicine க்கு தெரிவாகாமல் போன நான் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவர்களுக்கு இந்தப் பதிவினை இட தகுதியானவனா என்று எனக்கு தெரியவில்லை. 🤔
ஆனாலும் ஏதோ ஒன்றினை சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.

2005 ஆம் ஆண்டு O/L பரீட்சையில் 9A எடுத்தவுடன் சமூகம் என்னை ஒரு Doctor ஆக கற்பனை பண்ண வைத்து Bio stream இல் படிக்க வைத்தது.
அல்ஹம்துலில்லாஹ். அவ்வாறான ஒரு வழி காட்டலுக்கு இன்றும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவானாக இருக்கிறேன்.

A/L பரீட்சை முடிவுகள் வெளியான ஒவ்வொரு தடவையும் என் தாயின் கடின உழைப்பும் எல்லோரது எதிர் பார்ப்பும் வீணாய்ப் போனதாய் கண்களில் கண்ணீர் துளிகள் முட்டின.
சமூகமும் நான் படிக்க வில்லை அப்படி இப்படி என்று ஆயிரம் சொல்லி தூற்றியது.
அது ஒரு காலம். இன்று நினைத்தாலும் மனம் கனக்கிறது.

Bio படிப்பவர்கள் அனைவரும் டாக்டர் ஆகவோ Maths படிப்பவர்கள் அனைவரும் Engineer ஆகவும் வருவதில்லை. அவ்வாறு நடக்க சாத்தியமும் இல்லை. ஆனால் அவ்வாறு கிடைக்காதவர்கள் சீரழிந்து போவதும் இல்லை. எனக்கு தெரிந்த பலரும் இன்று ஏதோ ஒரு வகையில் எங்கோ ஒரு இடத்தில் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

இன்று போல் அன்று பல்கலைக்கழக வழி காட்டல் கருத்தரங்குகளோ இணையத்தளங்களோ பெரிதாக இருக்க வில்லை. ஏதோ விரும்பிய ஒழுங்கில் Course களை விண்ணப்பித்து கிடைப்பதை ஏற்று போய் கற்க வேண்டியது தான்.
அதிலே எனக்கு கிடைத்த Course BSc Nursing.

வைத்திய துறைக்கு தெரிவாகி இருந்திருந்தால் யாராவது ஒரு மாமனார் யூனிவர்சிட்டி செலவுகளை பொறுப்பெடுத்திருப்பாரோ என்னவோ 😄.
தாயாரின் சிறு கைத்தொழில் வருமானத்துடன், சில நல்ல உள்ளங்களின் உதவிகளையும் வைத்துக் கொண்டு இரண்டு வருட ஜெயவர்த்தன புர பல்கலைக்கழக வாழ்க்கை ஓடியது . என்னதான் சேவை சேவை என வாய் கிழிய கதைத்தாலும் தனிப்பட்ட தொழில் திருப்தி, விருப்பு வெறுப்புகள், பொருளாதாரப் பின்னணிகள், அந்த நாட்களில் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், கற்றல் நடவடிக்கைகளின் தாமதம் போன்றவற்றால் BSc Nursing degree யை கைவிடவேண்டியதாகிற்று.
ஆனாலும் யூனிவர்சிட்டி யில் மிகச் சிறந்த பெறு பேறுகளுடன் இரண்டு வருடங்களும் Batch first / second ஆக இருக்க கிடைத்தது.

நாம் என்னதான் முயற்சி செய்தாலும் இறைவன் நமக்கு வேறு ஒன்றில் நலவினை வைத்திருந்தால் சில விடயங்கள் எம்மை விட்டு தானாகவே விலகிச்செல்லும்.

Bio படித்த மாணவர்களுக்கு Professional Supplementary Medicine என்று கூறப்படுகின்ற Health Ministry ஆல் வழங்கப்படுகின்ற Higher Diploma Course கள் மாதாந்த allowance உடன் இருப்பதனை யாருமே அந்த நேரம் சொல்லித்தர வில்லை. அவ்வாறு வழி காட்டி இருந்திருந்தால் பொருளாதார வசதிகளை கருத்தில் கொண்டு நேர காலங்களை வீணாக்காமல் அந்தத்துறைக்கு தெரிவினை மாற்றி இருந்திருப்பேன்.

இருந்தாலும் அவ்வாறான ஒரு வழியும் Bio படித்த மாணவர்களுக்கு இருப்பதனை பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
Nursing Degree யினை விட்டு Occupational Therapy Higher Diploma விற்கு மாறிக் கொண்டேன்.

அதிலே கிடைத்த அடைவுதான் இன்று
UK NHS இல் Occupational Therapist ஆக வேலை செய்யும் சந்தர்ப்பம்.

நீங்கள் Bio செய்தவராயின், உங்களுக்கும் இந்த Occupational Therapist Job இல் ஆர்வம் இருந்தால் இணையத்தில் தேடி இந்த course இன் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இலங்கை மட்டும் அல்லாமல் ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் எங்கிலும் தொழில் வாய்ப்புகள் உள்ளன. உங்கள்
ஆங்கிலத்தினையும் ஆளுமையினையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

University of kelaniya - Faculty of Medicine இந்த நான்கு வருட BSc Hons in Occupational therapy Degree இனை வழங்குகின்றது.
கீழே அதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.

Medicine கிடைத்த மாணவர்களை வாழ்த்தி அதனை தவற விட்ட மாணவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன். உங்களுக்கான வாய்ப்புகள் உலகம் முழுதும் பரந்து கிடக்கின்றன.

நமது பகுதிகளில் வைத்தியத்தொழில் என்பது சேவை தாண்டி ஒரு கௌரவத் தொழில் என்று கூறலாம். ஆனாலும் Arts படித்து விட்டும் மிக உயர்ந்த பதவிகளில் ஊரும் நாடும் மதிக்கத்த நிலையில் உள்ள நண்பர்களும் நமது ஊரிலே எமது பக்கத்திலேயே முன் மாதிரியாக இருக்கிறார்கள்.

இன்று நான் வேலை செய்கின்ற UK NHS இல் இந்த Occupational Therapist க்கு UK முழுவதும் 2765 வெற்றிடங்கள் உள்ளன. அதில் ஒருவராக நீங்கள் ஒரு காலத்தில் வேலை செய்யலாம். இது போலவே வேறு பல துறைகளுக்கும் பல நாடுகளிலும் பல வாய்ப்புகள் உள்ளன. நாம் ஒவ்வொரு வரும் தனித்துவமான விருப்பு வெறுப்பு மனப்பாங்கு உள்ளவர்கள். உங்கள் எதிர் காலம் பற்றி நன்கு சிந்தித்து முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
தொழில் வாய்ப்புகளை கருத்தில் கொள்ளுங்கள். எல்லோரும் போல் நாமும் இருக்க வேண்டியதில்லை. உங்கள் வழியினை தனி வழி ஆக்கி எழுந்து நில்லுங்கள்.
குறுகிய வட்டதினுள் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் ரிஸ்க் எங்கெல்லாம் உள்ளதோ அதனை தேடிப் பெற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள்.

அதே நேரம் எதுவும் கணப்பொழுதில் மாறலாம். இன்றைய உலகின் நிலை எம் கண் முன்னே அவ்வாறுதான் இருக்கிறது . இருக்கும் அருள்கள் ஒரு நொடியில் இல்லாமலும் போகலாம்.

இறுதியாக...
நாங்கள் என்னதான் வைத்திய நிபுணராகவோ விண் வெளிஆராய்ச்சி ஆளாரவோ, Occupational therapist ஆகவோ இருந்தாலும் எங்களிடம் மார்க்கமும் மனிதமும் இல்லை எனில் எல்லாமே பூச்சியம் தான்.

https://medicine.kln.ac.lk/index.php/academic-programmes/undergraduate/ot-degree-programme.html

original Author :

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifan's Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share