VisAct Media

VisAct Media Constructive Journalism Platform

30/07/2026

கரையோர வேடுவர்களுக்கான அடையாள போராட்டம் ஏன் இன்னும் தொடர்கின்றது? அவர்களை இன்னும் ஆதிவாசிகள் என அடையாளப்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

மட்டக்களப்பை சேர்ந்த திரைப்பட முயற்சியாளர்கள் அல்லது படைப்பாளிகளா நீங்கள்?உங்களது படைப்புகளுக்கான திரையிடல் மற்றும் கலந்...
30/07/2026

மட்டக்களப்பை சேர்ந்த திரைப்பட முயற்சியாளர்கள் அல்லது படைப்பாளிகளா நீங்கள்?

உங்களது படைப்புகளுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் தளத்தை வழங்க நாங்கள் முன்வருகின்றோம்.

மேலும் தொடர்ச்சியான திரையிடல்கள், பயிற்சிப்பட்டறைகள், தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்களுடனான வலையமைப்புகளை உங்களுக்கு உருவாக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

உங்கள் சிந்தனைகள், கதைகள் மற்றும் படைப்புகளுடன் இந்தப் பயணத்தில் இணைந்திடுங்கள்.

மட்டக்களப்பு வாவியின் மீன் பல்வகைமை அழியும் அபாயத்தில் உள்ளதா? ஓர் சூழலியல் பார்வை !இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள மட்டக்...
29/07/2026

மட்டக்களப்பு வாவியின் மீன் பல்வகைமை அழியும் அபாயத்தில் உள்ளதா? ஓர் சூழலியல் பார்வை !

இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள மட்டக்களப்பு வாவி (Batticaloa Lagoon), நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய உவர்நீர் வாவியாகும். 56 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட இந்த வாவி, வரலாற்றுச் சிறப்புமிக்க சூழலியல் அமைப்பைக் கொண்டிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக அதன் மீன் பல்வகைமை (Fish Biodiversity) கணிசமான மாற்றங்களுக்கும் வீழ்ச்சிக்கும் உள்ளாகி வருகிறது.

இவ்வாவியானது பாலமீன்மடு மற்றும் கோட்டைக்கல்லாறு ஆகிய இரு பிரதான முகத்துவாரங்கள் மூலம் வங்காள விரிகுடாக் கடலுடன் இணைகிறது. மழைக் காலங்களில் கடல் நீர் மற்றும் ஆற்று நீர் பரிமாற்றம் நிகழ்ந்து, உவர்நீர்ச் சமநிலையைப் பேணுவதில் இம்முகத்துவாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாரம்பரியமாக ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், கண்டல் தாவர அமைப்புகளின் புகலிடமாகவும் இது விளங்கி வருகின்றது.

இருப்பினும், பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வேடுகளின் படி, கடந்த சில தசாப்தங்களாக மட்டக்களப்பு வாவியின் மீன் பல்வகைமை கணிசமான மாற்றங்களுக்கும் வீழ்ச்சிக்கும் உள்ளாகி வருகின்றது. வாவியில் சுமார் 40 முதல் 45 குடும்பங்களைச் சேர்ந்த 85-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பதிவாகியிருந்த போதிலும், தற்போதைய சூழல் மாசடைவு, விவசாயச் இரசாயனக் கழிவுகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் ஆற்றுவாழை போன்ற ஆக்கிரமிப்பு நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சி என்பன மீன்களின் வாழிடங்களைப் பெரிதும் பாதித்துள்ளன.

வாவியின் வடக்குப் பகுதியில் (கடல் நீர் ஊடுருவல் மற்றும் அதிக உவர்த்தன்மை கொண்ட பகுதி) மீன் பல்வகைமை அதிகமாகவும், மனித நடவடிக்கைகளும் சுற்றாடல் மாசடைதலும் அதிகமாக உள்ள தெற்குப் பகுதியில் மீன் வளமும் பல்வகைமையும் குறைவாகவும் காணப்படுகின்றன.

இவற்றுடன், வாவியின் பூர்வீக மீன் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அன்னிய மீன்களின் அறிமுகமும் ஒரு முக்கிய காரணமாகும். மட்டக்களப்பு வாவி உட்பட இலங்கையின் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி உற்பத்தியைப் பெருக்குவதற்காக, 1952 ஆம் ஆண்டில் மொசாம்பிக் திலாப்பியா முதன்முதலாக ஆப்பிரிக்காவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1970–1990 காலகட்டத்தில் நைல் திலாப்பியா மற்றும் பல்வேறு கார்ப் இன மீன்களும் சேர்க்கப்பட்டன. இத்தகைய அன்னிய மீன்கள் அதிக இனப்பெருக்கத் திறனையும் எத்தகைய சூழலையும் தாங்கும் ஆற்றலையும் கொண்டிருப்பதால், வாவியின் பூர்வீக மீன் இனங்களான செப்பலி மற்றும் ஊடான் போன்றவற்றுக்கு உணவிலும் வாழிடத்திலும் பெரும் போட்டியை ஏற்படுத்தி, இயற்கை மீன் வளச் சமநிலையை மாற்றி அமைத்து வந்தன.

சமீபத்திய ஆராய்ச்சித் தரவுகளின்படி, நைல் திலாப்பியா (Oreochromis niloticus) மட்டக்களப்பு வாவியின் மொத்த மீன் எண்ணிக்கையில் சுமார் 4.6% வரை பிடிபடும் நிலையை எட்டியுள்ளது.

வாவியில் கலக்கும் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியமான ஒன்றாகும். வாவியின் மேற்பரப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றுவாழைத் தாவரங்களைத் தொடர்ச்சியாக அகற்றுவதுடன், சுற்றியுள்ள வயல்கள் மற்றும் நகரப் பகுதிகளிலிருந்து பூச்சிக்கொல்லிகள், இரசாயன உரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் வாவியில் கலப்பதைத் தடுக்கக் கழிவுநீர் சுத்திகரிப்பு நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இவற்றுடன், வாவியின் கரையோரங்களில் உள்ள கண்டல் காடுகள் மற்றும் கடற்புல் வெளிகளைப் பாதுகாத்து மறுசீரமைப்பது, சிறிய மீன் குஞ்சுகளுக்குப் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதோடு இயற்கையான வடிகட்டியாகவும் செயல்படும். இறுதியாக, கடற்றொழில் திணைக்களம், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உள்ளூர் மீனவ அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு நிர்வாக அமைப்பை உருவாக்கி, நிலைபேறான மீன்பிடி முறைகள் குறித்து மீனவச் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே மட்டக்களப்பு வாவியின் மீன் பல்வகைமையை நீண்டகால அடிப்படையில் பாதுகாக்க முடியும்.

References - Harris, J. M., Vinobaba, P., Kularatne, R. K. A., & Khan, S. A. (2023). Fish diversity and assemblage in the Batticaloa lagoon, Sri Lanka. Journal of Fish Biology, 102(4).

22/07/2026

மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையான நீர்வழிப் பயணங்கள் 20ம் நூற்றாண்டின் முன்னர் வியாபாரிகளின் முக்கிய பாதையாக இருந்தது.

இயற்கை வளம் அதிகம் இருந்தும் ஏன் மட்டக்களப்பு இலங்கையின்  முன்னணி மீன்பிடி மாவட்டமாக இல்லை?கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்...
22/07/2026

இயற்கை வளம் அதிகம் இருந்தும் ஏன் மட்டக்களப்பு இலங்கையின் முன்னணி மீன்பிடி மாவட்டமாக இல்லை?

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம், இலங்கையின் மிகப்பெரிய கடல்சார் வளங்களைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நீண்ட கடற்கரை, உலகப் புகழ்பெற்ற மட்டக்களப்பு வாவி, முகத்துவாரங்கள், மாங்குரோவ் காடுகள் மற்றும் வளமான கடல் உயிரியல் அமைப்புகள் என நீலப் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான பெரும்பாலான இயற்கை வளங்களையும் இந்த மாவட்டம் கொண்டுள்ளது.

இவ்வளவு வளங்கள் இருந்தும் ஏன் மட்டக்களப்பு இலங்கையின் முன்னணி மீன்பிடி மாவட்டமாக இல்லை?

இந்தக் கேள்விக்கான பதில் இயற்கை வளங்களின் பற்றாக்குறையில் இல்லை. மாறாக, மீன்பிடி முறை, கடல்சார் உட்கட்டமைப்பு, முதலீடு மற்றும் வரலாற்றுப் பின்னணி போன்ற பல காரணிகளுடன் தொடர்புடையதாகும்.

இலங்கை கடற்றொழில் அமைச்சின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மீன்வள புள்ளிவிபர அறிக்கையின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த மீன் உற்பத்தி 23,875 மெட்ரிக் தொன் ஆகும். இலங்கையின் மாவட்டங்களின் மீன்பிடி அடிப்படையில் 8வது இடத்தில் காணப்படுகின்றது.
அதே ஆண்டில் முன்னணியில் இருந்த சில மாவட்டங்களாக காலி மாவட்டம் 48,465 மெட்ரிக் தொன்னாகவும், திருகோணமலை மாவட்டம் 38,260 மெட்ரிக் தொன்னாகவும், ஹம்பாந்தோட்டை 36,705 மெட்ரிக் தொன்னாகவும் காணப்படுவதோடு முதல் மூன்று இடங்களையும் பெறுகின்றன.

இதனால் மட்டக்களப்பு முக்கிய மீன்பிடி மாவட்டமாக இருந்தாலும், முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெறவில்லை.
மட்டக்களப்பின் பெரும்பாலான மீனவர்கள் இன்னும் ஒரு நாள் கடல் பயணங்கள்,சிறிய ஃபைபர்கிளாஸ் படகுகள்,பாரம்பரிய மீன்பிடி கருவிகள், வாவி மற்றும் கரையோர மீன்பிடி ஆகியவற்றை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.இந்த முறை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தாலும், அதிகளவிலான மீன் உற்பத்தியை உருவாக்க முடியாது.
காலி, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான பலநாள் மீன்பிடி கப்பல்கள் இயங்குகின்றன.
இந்தக் கப்பல்கள் பல நூறு கிலோமீட்டர் தூரம் ஆழ்கடலுக்குச் செல்கின்றன, பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கின்றன Yellowfin Tuna, Bigeye Tuna, Skipjack Tuna, Swordfish போன்ற உயர்ந்த சந்தை மதிப்புள்ள மீன்களைப் பிடிக்கின்றன.

மட்டக்களப்பில் இத்தகைய பலநாள் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மொத்த உற்பத்தியும் குறைவாக உள்ளது.
ஒரு மாவட்டத்தின் மீன்பிடி வளர்ச்சிக்கு கடல் வளம் மட்டுமல்ல, அதற்கான உட்கட்டமைப்பும் அவசியம். மீன்பிடியில் முன்னணியில் உள்ள மாவட்டங்களில் நவீன மீன்பிடி துறைமுகங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள்,குளிர்சாதன சேமிப்பு மையங்கள்,படகு பழுதுபார்க்கும் நிலையங்கள், எரிபொருள் விநியோக மையங்கள், மீன் ஏல மையங்கள், ஏற்றுமதி செயலாக்க மையங்கள் ஆகியன தேவையான அளவுகளில் காணப்படுகின்றன.

மட்டக்களப்பிலும் இவ்வசதிகள் இருந்தாலும், அவற்றின் அளவும் தொழில்நுட்ப வசதிகளும் தென் மாகாணத்தின் முக்கிய மீன்பிடி மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது இன்னும் விரிவடைய வேண்டியுள்ளது.
மீன் பிடிப்பு அளவை மட்டும் வைத்து ஒரு மாவட்டத்தின் கடல்சார் பொருளாதாரத்தை மதிப்பிட முடியாது. அந்த வகையில் மட்டக்களப்பின் மிகப்பெரிய பலம் அதன் உலகப் புகழ்பெற்ற மட்டக்களப்பு வாவி, மாங்குரோவ் காடுகள், கழிமுகங்கள், இறால் மற்றும் நண்டு வளங்கள், கடற்பாசி வளர்ப்புக்கான ஏற்ற கடற்கரை ஆகியவற்றில்தான் உள்ளது.

இவை அனைத்தும் எதிர்காலத்தில் அதிக பொருளாதார மதிப்பை உருவாக்கக்கூடிய நீலப் பொருளாதார துறைகளாகும்.
மட்டக்களப்பு அதிக மீன் பிடிப்பை மட்டும் நோக்காமல், மீனிலிருந்து அதிக பொருளாதார மதிப்பை உருவாக்கும் தொழில்துறைகளில் கவனம் செலுத்தினால், நாட்டின் முன்னணி நீலப் பொருளாதார மையமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இத்தகைய தொழில்கள் வேலைவாய்ப்பையும், ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிப்பதோடு, மீன் கழிவுகளையும் உயர்மதிப்புள்ள வளங்களாக மாற்றும்.
மட்டக்களப்பு இன்று இலங்கையின் முதல் மீன்பிடி மாவட்டமாக இல்லாததற்கு காரணம் கடல் வளம் குறைவாக இருப்பதல்ல. மாறாக, சிறிய அளவிலான மீன்பிடி முறை, குறைந்த பலநாள் ஆழ்கடல் கப்பல்கள், முழுமையாக வளராத உட்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு போரின் நீண்டகால தாக்கங்கள் போன்ற காரணிகளே இதற்குப் பின்னால் உள்ளன.

ஆனால் இயற்கை வளங்களைப் பொருத்தவரை, மட்டக்களப்பு இலங்கையின் மிகப்பெரிய கடல்சார் திறன் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாகவே உள்ளது. ஆழ்கடல் மீன்பிடி, நவீன துறைமுக வசதிகள், மதிப்பூட்டப்பட்ட கடலுணவு தொழில்கள் மற்றும் நீலப் பொருளாதார முதலீடுகள் அதிகரித்தால், எதிர்காலத்தில் மட்டக்களப்பு இலங்கையின் முன்னணி நீலப் பொருளாதார மையமாக மாறும் திறன் கொண்டுள்ளது.

Reference -
Annual Fisheries Statistical Bulletin 2024
National Fisheries and Aquaculture Policy
Sri Lanka Socio-Economic Data 2025

🎥 Join the VisAct Media Team!We're looking for passionate storytellers to join our growing team.If you love creating mea...
21/07/2026

🎥 Join the VisAct Media Team!

We're looking for passionate storytellers to join our growing team.
If you love creating meaningful content, telling impactful stories, and making a difference through media, we'd love to hear from you.

📩 Send your CV, portfolio, and a short introduction to - [email protected]

Be part of a media platform that amplifies untold stories and inspires positive change.

20/07/2026

📍 கிழக்கு மாகாணத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் பல மீட்டர் நிலப்பரப்பு கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது. தென்னைத் தோட்டங்கள் அழிகின்றன, வீடுகள் ஆபத்தில் உள்ளன, மீனவக் கிராமங்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சத்தில் வாழ்கின்றன.

09/07/2026

ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு விமானம், இலங்கையின் மலைகளில் சிதறி விழுந்து 191 உயிர்களை பறித்த சம்பவம் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

01/07/2026

கடற்கரையிலிருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே ஆழ்கடல் மீன்பிடி வாய்ப்புகளையும், சர்வதேச தரம் வாய்ந்த சூரை (Tuna) மீன் வளத்தையும் கொண்ட இலங்கையின் தனித்துவமிக்க கிழக்குக் கடற்பரப்பு.

29/06/2026

சிங்களவர்களாக வாழும் தமிழர்களின் குரல்..!

Address

175 New Kalmunai Road, Kallady 30000
Batticaloa

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30

Alerts

Be the first to know and let us send you an email when VisAct Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category