Beruwala News

Beruwala News "மக்களால் மக்களிடமிருந்து மக்களுக்காக"

மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில்இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழி...
17/09/2025

மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழில்துறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க இது தொடர்பில் கூறுகையில்,வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதிசந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு...
17/09/2025

கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி

சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், கீரி சம்பா பற்றாக்குறை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

விவசாயிகள் அறுவடைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்துள்ளனர். இருப்பினும், கீரி சம்பாவின் பயிரிடுதல் 7 வீதம் மட்டுமே உள்ளது, இதனால் அதன் உற்பத்தி அளவு குறைந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை.

பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பாவை கையிருப்பில் வைத்திருக்கிறார்களா என்பது குறித்து தற்போது தெளிவான தகவல்கள் இல்லை. மேலும், 40,000 மெட்ரிக் தொன் கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அந்தத் தொகையை இறக்குமதி செய்யலாம். இருப்பினும், இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. என தெரிவித்துள்ளார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்புமேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மா...
17/09/2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.



நாட்டின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.



இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

✨ Denova Minds – The Mentors Hub ✨Whether you are following the Edexcel, Cambridge or Local syllabus, take your academic...
16/09/2025

✨ Denova Minds – The Mentors Hub ✨
Whether you are following the Edexcel, Cambridge or Local syllabus, take your academics to the next level with engaging online classes, individual group, tailored just for you.✌️

📘 We offer online classes from Year 6 to A/Ls.

🌟 *
Why choose us?

✅ Personalized sessions
✅ Reasonable fees
✅ Discounts when enrolling in more than one subject
✅ Qualified mentors with the best guidance network

📲 Register now via WhatsApp/IMO: +94 72 080 1278

🚀 Elevate your learning journey with Denova Minds!

https://www.instagram.com/p/DOGrij5iIfR/?igsh=YnczMWU2Y25sbDVl

📌Paid ads

மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் கைதுகம்பஹா, திவுலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் ப...
16/09/2025

மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் கைது

கம்பஹா, திவுலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் நேற்று (15) திவுலப்பிட்டி பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றின் அருகிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா,வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர் 5500 முதல் 7000 ரூபாய் வரையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் மூலம் இந்த சிகரெட்டுகளை குறித்த பெண் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் மின்சார சபை தொழிற்சங்கங்கள்இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எ...
16/09/2025

நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் மின்சார சபை தொழிற்சங்கங்கள்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை நேரங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் நாளை (17) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களுக்கு செல்ல விரும்பாத ஊழியர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையிலிருந்து விலகலாம் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

முதல் ஆறு மாதங்களில் 30 சதவீத வாகனங்கள் சுங்கத்தில் தேக்கம்நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டுக்கு கொண...
16/09/2025

முதல் ஆறு மாதங்களில் 30 சதவீத வாகனங்கள் சுங்கத்தில் தேக்கம்

நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களில் 30 சதவீதமானவை சுங்கத்தால் விடுவிக்கப்படவில்லையென அரசாங்க நிதி பற்றிய குழுவின் இந்த வருடத்தின் முதலாவது அரையாண்டை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட குழு மதிப்பாய்வுகளில் தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்தின் அறிவித்தலுக்கமைய இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் சுங்கத்துக்கு 996 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இது கடந்த வருடத்தின் முதல் 06 மாத வருமானங்களுடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு 47 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த வளர்ச்சியில் வாகன இறக்குமதியினூடாக 429 பில்லியன் ரூபா பங்களிப்பு கிடைத்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் நாட்டுக்கு 220,026 வரையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 154,537 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செயற்பாட்டுத் திட்ட மதிப்பாய்வின்போது அரச நிதி தொடர்பில் பாராளுமன்ற குழு சுங்க விடுவிப்புக்கான தாமதம் தொடர்பில் வினவப்பட்டுள்ளதுடன், அதன்போது மூன்று தினங்களில் வாகனங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகைசெப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எ...
16/09/2025

அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,358 ஆக இருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 21,389 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது 28.4 % ஆகும்.

பிரித்தானியாவிலிருந்து 5,714 பேர், ஜெர்மனியிலிருந்து 4,817 பேர், சீனாவிலிருந்து 4,056 பேர் மற்றும் பிரான்ஸிலிருந்து 3,834 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,641,881 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 346,984 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 156,855 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 120,314 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இவ் வருடம் ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 198,235 வெளிநாட்டினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இது 2024 ஒகஸ்ட் தரவுகளுடன் ஒப்பிடும்போது 20.4% அதிகமாகும்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

மாகாண சபைத் தேர்தல் தாமதமாக விகிதாசார முறைமைதான் காரணம் - யாழில் தேர்தல் ஆணையாளர் நாயகம்"விருப்பு முறைமை வாக்களிப்பாக இர...
16/09/2025

மாகாண சபைத் தேர்தல் தாமதமாக விகிதாசார முறைமைதான் காரணம் - யாழில் தேர்தல் ஆணையாளர் நாயகம்

"விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்." -இவ்வாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் யாழ். ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தச் சட்ட வரைமுறையால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது. இது தீர்க்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடைபெறும். அதற்குத் திணைக்களம் தயாராக இருக்கின்றது. அல்லது குறித்த தீர்மானத்தைத் தற்போது பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையூடாக நிறை வேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடி யும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது." - என்றார்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைதுயாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...
16/09/2025

யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் சுமார் 15 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

18,19,21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்.

குறித்த சந்தேக நபர்களை இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து - ஒருவர் உயிரிழப்புதெற்கு அதிவேக வீதியில் களனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விப...
16/09/2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியில் களனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால் பயணித்த வேன் இன்று (16) அதிகாலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மூன்று குழந்தைகள் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்புமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்...
16/09/2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

For Advertising>> +94775720521

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

🪀 Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaYtdow8fewjuUZgmD0i

Address

Maradana
Beruwala
12070

Alerts

Be the first to know and let us send you an email when Beruwala News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beruwala News:

Share