Malwana Plus

Malwana Plus மக்களுக்கான நடுநிலையான ஒரு ஊடகம்

எனது மின்சார வாகனத்தில் மேற்கொண்ட மிக நீண்ட பயணம்..💙 வீட்டிலிருந்து 100% சார்ஜ் செய்து புறப்பட்டேன்..1வது நாள் - நாரம்மல...
03/07/2025

எனது மின்சார வாகனத்தில் மேற்கொண்ட மிக நீண்ட பயணம்..💙

வீட்டிலிருந்து 100% சார்ஜ் செய்து புறப்பட்டேன்..

1வது நாள் - நாரம்மல, குருணைகல, மஹனுவர, கம்பொல, நுவரஎளிய, ஹோட்டன்தன்ன, போரலந்த, ஹபுதலே, பண்டாரவேல, எல்ல..💪

பண்டாரவேலுக்கு சென்று fast charge ஒன்றை 80% வரை செய்தேன். அதைச் செய்து இரவில் தங்கிய இடத்தில் plug செய்து 100% சார்ஜ் செய்து இரண்டாம் நாள் புறப்பட்டேன்..💪

💗2வது நாள் - எல்ல, பண்டாரவேல, ஹபுதலே, பேரகல, பம்பஹின்ன, சமனலவேவ, குரகல, கல்தொட, வேலிஒய, தணமல்வில, குடாஒய, வெல்லவாய, பெல்வத்த, புத்தல, நக்கல, மெதகம, பகினிகஹவேல, பிபிலே, ரிதிமாலியத்த, ஆண்டாஉல்பத், லொக்கல்ஒய, ராஜமாவத், ரந்தேனிகல வழியாக மஹனுவர, குருணைகல, நாரம்மல..💪

இன்னும் 15% பேட்டரி சார்ஜ் மிச்சம் உள்ளது..மொத்த பயணம் 605 கிமீ. மலைகள், பள்ளத்தாக்குகள், வளைவுகள் அனைத்தையும் கடந்து பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கண்டு சென்ற அழகான பயணம்..

சற்று இலங்கை வரைபடத்தைப் பார்த்து பயணத்தைப் பற்றி நினைத்துக் கொள்ளலாம் 💪❤️👊

EV களின் acceleration, handling, comfort பற்றி புதிதாகச் சொல்ல ஏதும் இல்லை, பயன்படுத்தியவர்கள் தெரிந்திருப்பீர்கள்..

நான் இதை எழுதுவது 1965ல் தயாரான Volkswagon Beetle இல் இருந்து பல பெட்ரோல் டீசல் வாகனங்களை ஓட்டிய அனுபவத்துடன் மற்றும் ஒரு காலத்தில் nissan leaf ஐயும் ஓட்டிய அனுபவத்துடன்..🏆

இப்போதுள்ள பேட்டரி திறனுடன் பயணம் திட்டமிட்டால் EV ஒன்றில் இப்போதே இலங்கையில் எந்த இடத்திற்கும் செல்ல முடியும். எனக்கு செலவானது fast charge செய்ததற்கு 5100 போன்ற தொகை.

வீட்டில் சார்ஜ் செய்ய செலவு இல்லை solar காரணமாக..

EV வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எழுதினேன்.

உங்கள் கருத்துகளை comment செய்யுங்கள், அவை மதிப்புமிக்கவை👊🫶






23/06/2025

AIR India விமான விபத்தை தத்ரூபாமாக சித்தரிக்கும்
ஒரு AI வீடியோ



23/06/2025

அவர்கள் அதிர்ஷ்டவசமாக அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் திறந்திருந்தன,

இதனால் பெரும்பாலான வாயு Gas வெளியே வெளியேற முடிந்தது, வெடிப்பின் தாக்கத்தை கணிசமாக குறைத்தது.

சவுதி அரேபியா 2025 ஹஜ் யாத்திரைக்காக மொத்தம் 1,673,230 யாத்திரீகர்களை பதிவு செய்துள்ளது, இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச...
05/06/2025

சவுதி அரேபியா 2025 ஹஜ் யாத்திரைக்காக மொத்தம் 1,673,230 யாத்திரீகர்களை பதிவு செய்துள்ளது, இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்திரீகர்கள் இருவரும் அடங்குவர்.

: Arabia recorded a total of 1,673,230 pilgrims for 2025, including both domestic and international pilgrims.


UAE தனது முழு மக்கள்தொகைக்கும்ChatGPT Plus-ஐ இலவசமாக வழங்குகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது முழு மக்கள்தொகைக்கும் ChatGP...
27/05/2025

UAE தனது முழு மக்கள்தொகைக்கும்
ChatGPT Plus-ஐ இலவசமாக வழங்குகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது முழு மக்கள்தொகைக்கும் ChatGPT Plus ($20) சந்தாக்களை வாங்கி வழங்கி, எந்த கூடுதல் செலவும் இல்லாமல் பிரீமியம் AI சேவையை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும் முதல் நாடாக மாறியுள்ளது.
விபரங்கள்:

UAE மற்றும் OpenAI இடையேயான கூட்டுத்துறையின் விளைவாக, இலவச அணுகல் UAE-யில் உள்ள உள்ளூர் மக்களை முன்னணி AI தொழில்நுட்பத்திற்கு நெருக்கமாக கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது, ChatGPT Plus சந்தா மாதத்திற்கு $20 செலவாகும், இது பிரீமியம் திட்டத்திற்கான நுழைவுத் தடையாக இருக்கலாம்.

OpenAI மற்றும் Anthropic உட்பட பிற AI முன்னணி நிறுவனங்கள் கல்வியில் AI அணुகலை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளை வழிநடத்தியிருந்தாலும், இந்த அளவுக்கு எதுவும் எட்டவில்லை.

UAE-OpenAI கூட்டுத்துறையின் மற்றொரு அங்கம் Stargate UAE ஆகும், இது 1GW அபுதாபி தரவு மையமாகும், இது 2026-ல் ஆரம்ப 200MW திறனுடன் செயல்படத் தொடங்க உள்ளது.

ஏன் இது முக்கியம்: உலகளாவிய ChatGPT Plus அணுகலை வழங்குவதன் மூலம், UAE பொது AI அணுகலில் முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது மற்றும் பெருகிய முறையில் AI-இயக்கப்படும் உலகில் அதன் குடிமக்கள் AI-அறிவு பெற்றவர்களாக மாறுவதை உறுதி செய்கிறது. இந்த முன்முயற்சி மற்ற நாடுகளை தங்கள் மக்கள் போட்டித்தன்மையுடன் இருக்க AI வழங்குநர்களுடன் இதேபோன்ற கூட்டுத்துறைகளை ஆராய தூண்டலாம்.

கடந்த வாரம், 6ம்திகதி, ஜப்பானிய நகரங்களில் உள்ள Toll Gate அமைப்புக்கள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 38 மணி நேரம் செயலிழந்...
16/04/2025

கடந்த வாரம், 6ம்திகதி, ஜப்பானிய நகரங்களில் உள்ள Toll Gate அமைப்புக்கள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 38 மணி நேரம் செயலிழந்தன. இதன் காரணமாக, 116 எக்ஸ்பிரஸ்வே டோல் கேட்களில் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலை, குழப்பத்தை தவிர்ப்பதற்காக ஹைவேஅதிகாரிகள் மெனுவலாக கேட்டை திறந்து வைத்தனர். வாகனங்களை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்ல அனுமதித்தனர். டோல் பேய்மன்ட சிஸ்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் உரிய கட்டணத்தை செலுத்துமாறு ட்ரைவர்களை கேட்டுக் கொண்டனர்.

சிஸ்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், நேற்று வரை 24,000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், தானாக முன்வந்து தங்களது போக்குவரத்து கட்டணத்தை உரிய முறையில் செலுத்தி இருப்பதாக ஜப்பானிய பெருநகர போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது‌ ஜப்பானிய மக்களின் சுய ஒழுக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்‌ ஒரு சான்று
என்று நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அது சரி இப்படி ஒரு நிலமை நமது ஹைவேயில் நடந்திருந்தால் நாம்‌ என்ன செய்திருப்போம். ?



22/03/2025

பலஸ்தீனின் இரத்த கண்ணீர் கதையை சொல்லும் அதான்.

மன்னாரில் எங்கள் வீடு இருப்பது சோனகர் தெருவில். வீட்டைச் சுற்ற வரவும் முஸ்லிம் அக்கம்பக்கத்தார்.

வீட்டிலிருந்து நூறு சொச்ச மீட்டரில் மூர்வீதி பெரிய பள்ளி இருக்கிறது.

பாங்கு சொல்லும் சத்தம் எப்போதும் அங்கிருந்து கணீரென்று எங்கள் வீட்டுக்கு கேட்கும்.

ஆனால் புறச் சத்தங்கள் , இரைச்சல்கள் ஏதேனும் ஒன்றோடு கலந்தே பாங்கினை கேட்டிருக்கிறேன்.

ஊர் விழித்து இரைய ஆரம்பித்த பின்புதான் பாங்கினை எப்போதும் கேட்க வாய்த்திருந்தது.

கபொத சாதாரண தர பரீட்சைக்காக படிக்கின்ற போது அதிகாலையில் எழுவேன். அதுவரையில் அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கம் கிடையாது.

அம்மா தந்த பிளேன் டீயை அரைக் கண் மூடியபடியே உறிஞ்சிகொண்டு , ஜன்னலின் இடுக்கில் வரும் மார்கழியின் குளிரை போர்வையால் போர்த்தி காத்துக்கொண்டு ஏகாந்தித்து இருக்கையில் பாங்கு கேட்கும். முதல் முதலில் இரைச்சல் ஏதுமில்லாமல் , எந்தப் புறச் சத்தங்களும் அற்று கணீரென்று பாங்கு கேட்டது அப்போது தான். அந்த கம்பீர அதானுக்கு சொந்தக்காரர் ஜவாத் நானா.

அவர் எங்கள் பக்கத்து வீடு. அரசாங்க உத்தியோகத்தரான ஜவாத் நானாவுக்கு சேனகத் தெருவில் நல்ல மரியாதை. அவர் அண்ணாவோடு சேர்ந்து வீட்டோடு ஒரு பலசரக்கு கடையும் வைத்திருந்தார்.

சாந்த சொரூபி. பள்ளியின் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். ஜவாத் நானாவின் உம்மாவுக்கு எங்கள் அம்மாவோடு நல்ல வாரப்பாடு.

எங்கள் அம்மம்மாவின் வயது தான் இருக்கும் அவவுக்கும். மனிசி வீட்டில் என்ன விசேசம் என்றாலும் அம்மாவை அழைத்துவிடும். நான் பல்கலைக்கழகம் முடித்த கையோடவே " ஏ குட்டி ஏட்டி இவன் மூத்தவனுக்கு இன்னும் முடிச்சு குடுக்காம கெடக்கா?" என்று எங்கள் அம்மாவை துழைக்க ஆரம்பித்தது முதலில் ஜவாத் நானாவின் உம்மா தான்.

வட்டிலப்பமும், பிரியாணியும், நோன்புக் கஞ்சியும், இறாலும், கணவாயும், மீனும் என்று மதில்களால் பரிமாறிக்கொள்ளும் பழக்கம். ஜவாத் நானாவின் சுபாவத்துக்கும் அவர் பாங்கு சொல்லும் குரலுக்கும் சம்மந்தம் இருப்பதாய் எனக்கு முதலில் படவே இல்லை.

இயல்பில் அதிர்ந்து கதைக்காத ஜவாத் நானா அதான் சொல்லும் போது குரலில் அவளவு கம்பீரமும் அழகும் ஏறிக்கொள்ளும். முதன் முதலில் நான் ஏகாந்தித்து கேட்ட பாங்கு ஜவாத் நானாவுடையது. அதிகாலை பாங்கு ஒலிக்கும் போது கண்களை மூடி, ஜவாத் நானா பள்ளியில் நின்று பாங்கு சொல்வதை கற்பனை செய்து பார்ப்பேன்.

அதிகாலை எழுந்து படித்துவிட்டு , சில நேரங்களில் சூரிய உதயம் பார்ப்பதற்காக அருகில் இருக்கும் குருசுக்கடல் கடற்கரைக்கு நடப்பேன். கடற்கரையில் நின்று கடல் பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னால் ஜாவாத் நானாவின் அதான் கேட்கும்.

இப்படியான அதிகாலைப் பழக்கத்தால் எனக்கு பின்னாட்களில் பாங்கு புத்துணர்ச்சியான ஒரு நாளின் அடையாளமாகவும் , நல்ல நாள் ஒன்றின் அடையாளமாகவும் sentiment ஆக மாறிப்போனது. கடவுளோடோ, மத நம்பிக்கையோடோ தொடர்புபடுத்தியதெல்லாம் கிடையாது.

அந்த அதிகாலையும், ஜவாத் நானாவின் கம்பீர அதானும் ஒரு நல்லனுபவம் என்று சொல்லலாம்.

அதிகாலை அதான் எப்போதும் எனக்கு ஒரு உற்சாகத்தின், நம்பிக்கையின் அடையாளமாகவே இருந்திருக்கிறது.

கொழும்பு, அவுஸ்ரேலியா என அலையவேண்டி வந்த போதும் , எப்போதெல்லாம் அதான் கேட்கிறதோ, அப்போதெல்லாம் எனக்கு ஜன்னலால் குளிர் வரும் மன்னாரின் அதிகாலை நேர அதான் ஞாபகம் வரும். மூர்வீதி பெரிய பள்ளியின் மிஹ்ராபின் முன்னே நின்று , அத்தர் வாசனை பளியெங்கும் நிறைந்திருக்க ஜவாத் நானா பாங்கு சொல்லிக்கொண்டிருப்பார்.

இப்போது,
முதன் முதலில் ஒரு அதான் என்னை உடைத்துப் போட்டிருக்கிறது.

இது அதான் அல்ல.

நான் வஞ்சிக்கப்பட்டேன், மறக்கப்பட்டேன், அனாதையாக்கப்பட்டிருக்கிறேன், இதோ என் கடைசி மூச்சும் கரைந்துகொண்டிருக்கிறது என கதறும் மீட்க எவருமற்று கைவிடப்பட்டவர்களின் குரல்.

பலஸ்தீனத்தின் துயரத்தை தாங்கிவந்த வேறெந்த புகைப்படத்தை விடவும், காணொளியை விடவும், செய்திகளை விடவும் இந்த அதான் குரல் தான் என்னை நொருக்கியிருக்கிறது.

கண்களை மூடிக்கொள்கிறேன். நான் அதிகாலை படிக்க அமர்ந்திருக்கும் மேசையின் பக்கவாட்டில் தலை கவிழ்ந்து மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார் ஜவாத் நானா. உதவி கேட்டு மன்றாடி அவர் பெருஞ் சத்தமாய் அழுகிறார்.

உற்று கவனிக்கிறேன். அவர் அழவில்லை. அது பாங்கு.... ஜவாத் நானா அதிகாலை பாங்கு சொல்கிறார். மார்கழி குளிர் கசியும் மன்னாரின் சன்னல் இடுக்குகளின் வழியே கசிகிறது ரத்தம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத்...
19/03/2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார். அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இலங்கை நேரப்படி (19.03.2025) சுமார் அதிகாலை 3.27 மணி அளவில் ஃபுளோரிடா அருகே கடலில் இறங்கியது.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரோஸ்கோஸ்மோஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.

ஒரு முறை ஒரு இறைச்சிக் கடைக்காரன் தன் கத்தியால் மாட்டின் தொடை எலும்பை வெட்டிக் கொண்டிருந்தான்.திடீரென ஒரு சிறிய முள் துண...
16/03/2025

ஒரு முறை ஒரு இறைச்சிக் கடைக்காரன் தன் கத்தியால் மாட்டின் தொடை எலும்பை வெட்டிக் கொண்டிருந்தான்.திடீரென ஒரு சிறிய முள் துண்டு தெறித்து வந்து அவனது கண்களுக்குள் புகுந்தது.

அவன் ஊரிலுள்ள மருத்துவரிடம் (அவர் ஊருக்கு ஒரே மருத்துவர்) சென்று விவரத்தை கூறினான். அவனது
கண்ணை சோதித்துப் பார்த்த மருத்துவர்,
பிரச்சனை மிக சின்னது என்பதை உடனே அறிந்து கொண்டார். இருந்தாலும் அவனது கண்ணுக்கு உபயோகிக்க ஏதோ டொரொப்பை கொடுத்து, இரண்டு நாளைக்குப் பிறகு மறுபரிசீலனைக்காக வரும்படியும் சொல்லி அனுப்பினான்.

இப்படியே இறைச்சிக் கடைக்காரனும் ஒவ்வொரு இரண்டு நாளைக்குப் பிறகும் இரண்டு கிலோ இறைச்சியுடன் மருத்துவரை சந்திக்க வந்து கொண்டே இருந்தார். மருத்துவரும் புதிய புதிய மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இப்படித்தான் ஒரு நாள் இறைச்சிக் கடைக்காரன் மருத்துவரை சந்திக்க வந்த போது, அவர் வீட்டில் இருக்க வில்லை. அவரது மகன் தான் இருந்தார். அவரும் மருத்துவம் படித்தவராக இருந்தார்.

மருத்துவரான மகன், அவரது கண்ணை பரிசோதித்து விட்டு, "உங்களுக்கு எதுவும் இல்லை" என்று சொல்லி விட்டு கண்ணில் இருந்த முள்ளை எடுத்து வீசி விட்டு அனுப்பிவிட்டார்.

தந்தை வந்ததும், மகன் நடந்ததை கூறினார். உடனே தந்தை; "முட்டாள்! இனி நாங்கள் எப்படி இறைச்சி சாப்பிடுவது! சொல்லு பார்ப்போம்" என்று மகனை திட்டினார்.

படிப்பினை:
இப்படித்தான் உங்கள் பிரச்சினைகளை தீரக்காமல் அதனை வைத்து இறைச்சி சாப்பிடக்கூடியவர்கள் பலர் இருப்பார்கள்.

உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் பொருத்தமானவர்களை நாடுங்கள். முதலில் நீங்கள் நாடிச் செல்பவர்கள், உங்கள் பிரச்சினைகளை வைத்து பிழைப்பு நடத்தக்கூடியவர்களாக இருக்கக் கூடாது.

✍ தமிழாக்கம் / imran farook

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), அதன் எட்டாவது ஸ்டார்ஷிப் சோதனை விமானத்தை வ...
12/03/2025

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX),

அதன் எட்டாவது ஸ்டார்ஷிப் சோதனை விமானத்தை விண்மணிக்கு அனுப்பிய போதிலும் அதன் பயணம் தோல்வியில் முடிந்தது.

இது தொடர்ச்சியான இரண்டாவது ஸ்டார்ஷிப் சோதனை விமான தோல்வியாகும்

இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ராக்கெட்டான பிரமாண்டமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப், ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்தது.

காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் கரீபியன் கடல் தீவு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் வானத்திலிருந்து தீப்பிழம்புகள் மழையாக பொழிவதைக் காட்டுகின்றன.




40+  அனுபவ ஞானம் மாசம் கட்ட வேண்டிய EMI bounce ஆகறப்ப தன்னோடு லிஸ்ட் ல இருக்கிற எல்லா நம்பரையும் எடுத்து கால் பண்ணி பத்த...
09/03/2025

40+ அனுபவ ஞானம்

மாசம் கட்ட வேண்டிய EMI bounce ஆகறப்ப தன்னோடு லிஸ்ட் ல இருக்கிற எல்லா நம்பரையும் எடுத்து கால் பண்ணி பத்தாயிரம் இருக்குமா அஞ்சாயிரம் இருக்குமானு மனசு வலிச்சு கேட்டு இருக்கீங்களா சார்?

ஸ்கூல்ல எல்லோரும் ஃபீஸ் கட்டியாச்சு. நான் மட்டும் தான் கட்டலைனு கவலையோட சொல்ற மகனை மனசு வலிச்சு பார்த்து இருக்கீங்களா சார்?

ஆஸ்பத்திரியில நெருக்கமானவங்களை அட்மிட் பண்ணிட்டு, சீக்கிரம் ஆப்பரேஷன் பண்ணனும் ரெண்டு நாள்ல பணம் ஏற்பாடு பண்ணுங்க னு டாக்டர் சொன்னப்பதுக்கு அப்புறம் எப்படி புரட்ட போறோம்னு அழுதுட்டே மனசு வலிச்சு வெளிய வந்துருக்கீங்களா சார்?

காலையிலிருந்து சாப்பிட காசில்லாம வெறும் ரெண்டு டீ குடிச்சிட்டு வயித்தை பெசஞ்சிட்டு பீச் பக்கம் அந்த மணல்ல உட்கார்ந்து கடலை வெறிச்சு பார்த்துட்டு இருந்துருக்கீங்களா சார்?

கிட்ட தட்ட பனிரெண்டு மணி நேரம் ஓடி ஓடி உழைச்சிட்டு முகமெல்லாம் வெளிறி வியர்வை படிஞ்சு முதுகுல அழுக்கு பிஞ்சு போன பேக் மாட்டிக்கிட்டு பஸ்லையோ டிரெயின்லையோ கம்பியை பிடிச்சு நின்னுகிட்டு வந்திருக்கீங்களா சார்?

மாசம் பொறந்து பத்து நாள்ல சம்பளம் காலியாகி இன்னும் இருபது நாள் என்ன செய்ய போறோம் னு கையை பிசைஞ்சு ராத்திரி தூக்கமில்லாம ஹால்ல பூனை மாதிரி குறுக்கே மறுக்கா நடந்து இருக்கீங்களா சார் ?

இதை எதுவும் பார்க்காதவன் தான் சார் பணம் மட்டும் எந்த நிம்மதியும் தராது, அதுக்கு மேலே எவ்வளவோ இருக்குனு சொல்லிட்டு திரிவான் சார்...
பணம் தர்ற அந்த நிம்மதியை அந்த தைரியத்தை எதுவும் தராது னு மேலே சொல்லியிருக்கிற கஷ்டபட்டவன் வலிச்சு உணர்ந்திருப்பான் சார்....

இலங்கை இந்தியா புது சகாப்தம் இண்டிகோ புராதன விமான இணைப்பை திருச்சி மற்றும் யாழ்ப்பாணம் இடையே அரை நூற்றாண்டுக்குப் பிறகு ...
05/03/2025

இலங்கை இந்தியா புது சகாப்தம்

இண்டிகோ புராதன விமான இணைப்பை திருச்சி மற்றும் யாழ்ப்பாணம் இடையே அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீட்டமைக்கிறது.

இண்டிகோ ஏர்லைன்ஸ், திருச்சி மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே 2025 மார்ச் 30 முதல் தினசரி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் சிலோன் நிறுவனத்தால் இயக்கப்பட்ட ஒரு புராதன விமான பாதையை மீண்டும் உயிர்ப்பிக்கும் நிகழ்வாகும்.

இந்த புதிய சேவை, பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதோடு, தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையின் ஆழமான கலாச்சார மற்றும் இன உறவுகளை புதுப்பிக்கும்.

திருச்சி-யாழ்ப்பாணம் பாதை இப்போது தென்னிந்தியாவின் மிகக் குறுகிய சர்வதேச விமான இணைப்பாகவும், இந்தியாவின் இரண்டாவது குறுகிய சர்வதேச இணைப்பாகவும் உள்ளது.

இண்டிகோ, இலங்கையில் இருந்து இயங்கும் மிகப்பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது, தற்போது இந்தியா மற்றும் இலங்கை இடையே வாரத்திற்கு 54 விமான சேவைகளை வழங்குகிறது.

அகோர்ன் ஏவியேஷன், இலங்கையில் இண்டிகோவின் பொது விற்பனை முகவராக (GSA) செயல்பட்டு, இப்பகுதியில் விமான நிறுவனத்தின் இருப்பை விரிவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Address

Biyagama

Alerts

Be the first to know and let us send you an email when Malwana Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malwana Plus:

Share

Category