26/12/2022
தமிழக முதலமைச்சருக்கு நன்றிகள்
- பிரபா கணேசன் - தலைவர் - ஜனநாயக மக்கள் காங்கிரஸ், முன்னாள் பிரதி அமைச்சர்
தமிழகத்தில் பொங்களுக்காக அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபா வழங்குவதில்
முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்க முடிவு செய்தது பாராட்டுக்குரிய
விடயமாகும். இதற்காக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு
நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும்
முன்னாள் பிரதி அமைச்ருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை தமிழ் குடும்பங்கள் அகதி முகாமில் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களது நலன் தமிழ் நாட்டு அரசாங்கத்தின் கரங்களிலேயே தங்கி
உள்ளது. இந்திய குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இவர்களுக்கு கடந்த காலங்களில் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் இன்றைய தமிழக
அரசு எமது மக்களையும் இனைத்துக் கொண்டு செயல்படுவது எமக்கு மகிழ்ச்சி
அளிக்கின்றது.
முதல்வர் ஸ்டாலின் எளிமையாக பல விடயங்களை தெளிவாக கையாள்கின்றார்.
இன்றைய தேவைகளை புரிந்து செயல்படுகின்றார். தமிழகம் இலங்கைக்கு வழங்கிய
உதவிகளை நாம் மறக்க முடியாது. நாம் நன்றியுடன் கடமை பட்டவர்களாக
செயல்படுவோம்.
எமது இனப்பிரச்சினை சம்பந்தமாக தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசுவதற்கான
ஏற்பாடுகளை ஜனநாயக மக்கள் காங்கிரஸ் செய்து கொண்டுள்ளது என தெரிவித்தார்.
ஊடகப்பரிவு