Jaffna Speed News

Jaffna Speed News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Speed News, Media/News Company, Chavakachcheri.

08/05/2026

வடக்கின் மாணவர்களை சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "Study In யாழ்ப்பாணம்" கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா இன்று (08) யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் அமைந்துள்ள குறித்த நிறுவன வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் ம. பிரதீபன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு நாடா வெட்டி நிறுவனத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

"கற்க மறுப்பவர் வாழ மறுப்பவர்" எனும் பழந் தமிழ் வாசகத்திற்கு இணங்க, வடக்கு மக்களின் கல்வித் தேடலுக்கு வலுசேர்க்கும் நோக்குடன் குறித்த நிறுவனம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் ஆளுமை மிக்க மாணவர்கள் இருந்தும், அரச பல்கலைக் கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, சர்வதேச ரீதியில் உயர்கல்வியைத் தொடர இதுவொரு சிறந்த அடித்தளமாக அமையும் என நிறுவனத்தின் பணிப்பாளர் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த ஜெறோம் செல்வநாயகம் , யாழ் மாநகர முதலவர் மதிவதனி விவேகானந்தராஜா,கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் சந்திரமௌலி லலீசன், "Study In யாழ்ப்பாணம்" கல்வி நிறுவனத்தின் பணிப்பளார் களான ரிஷ்வான், ரிஸ்மி, செயல்பாட்டு தலைவர் ஐயாத்துரை கஜமுகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த அதிதிகள் அனைவரும் மங்கள்வாத்தியங்கள் முழங்க, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இக்கல்வி நிறுவனம் வடபகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும் என இதன்போது உரையாற்றிய விருந்தினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

23/03/2026

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா.
speed news

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 01/04/2026 புதன்கிழமை க...
23/03/2026

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 01/04/2026 புதன்கிழமை காலை 9.30மணி தொடக்கம் 11.46மணி வரையான சுபவேளையில் இடம்பெற்று தொடர்ந்து 45நாட்கள் மண்டலாபிஷேக பெருவிழாவும் இடம்பெறவுள்ளது.

கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்ட கிரியாரம்ப நிகழ்வு 28/03 சனிக்கிழமை காலை 5மணி முதல் இடம்பெற்று 31/03 செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் மாலை 5மணி வரை எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

மேற்படி கும்பாபிஷேக பெருவிழா சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்,சிவஸ்ரீ செ.பரமானந்தக்குருக்கள் ஆகியோரின் நல்லாசியுடன் சிவஸ்ரீ சி.சோதிரத்தினக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஆலய போஷகர் வை.சிவராசா அவர்களினால் திருப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு கும்பாபிஷேக பெருவிழா முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் இன்று (மார்ச் 13, 2026) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலை...
13/03/2026

இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் இன்று (மார்ச் 13, 2026) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

இவர் இதற்கு முன்னர் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர். இலங்கை நீதிச் சேவையின் விசேட தர (Special Grade) அதிகாரி ஆவார்.

அரசியலமைப்பின் 111 (2) ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எஸ். சதீஸ்தரன் அவர்கள் இதற்கு முன்னர் யாழ்ப்பாண நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியாக நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

07/03/2026

யாழ் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் தாங்கியினுள் பெட்ரோலை இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

04/03/2026

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் - மாவட்ட அரசாங்க அதிபர் !

17/02/2026

இலங்கை - கனடா வர்த்தக சபையின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று(16) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த
இலங்கை - கனடா வர்த்தக சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இளங்கோ இரத்தினசபாபதி கருத்துத் தெரிவித்தார்.

Address

Chavakachcheri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Speed News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share