Voice Of Nasriyans

Voice Of Nasriyans Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Of Nasriyans, Media/News Company, Chilaw, Chilaw Town.

இன்று (06 ஜூன்) நஸ்ரியா மத்திய கல்லூரி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்! 🌟நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின...
06/06/2026

இன்று (06 ஜூன்) நஸ்ரியா மத்திய கல்லூரி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்! 🌟

நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு, புதிய அதிபர் அவர்களின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது வெறும் சந்திப்பு அல்ல; நஸ்ரியாவின் ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் எதிர்காலப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று தருணம்.

பழையமாணவர்களின் ஒத்துழைப்பு பாடசாலையின் வளர்ச்சிக்கும், அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த கல்வி மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதற்குமான உறுதியான அடித்தளத்தை அமைப்பதற்காகவும் ஆகும்.

ஒவ்வொரு நஸ்ரியனின் வருகையும் பெறுமதியானது. ஒவ்வொருவரின் பங்களிப்பும் அர்த்தமுள்ளதுதான். வலுவான பழைய மாணவர் வலையமைப்பே ஒரு பாடசாலையின் எதிர்கால வெற்றிக்கான மிகப்பெரிய பலமாகும்.

இன்று
அனைத்து NASRIYANS ஒன்றாக எடுக்கும் இந்த முதல் அடி, நாளைய நஸ்ரியாவின் உயர்விற்கான வலுவான பாதையாக அமையட்டும்.

15/05/2026
கடமை… கண்ணியம்… அப்புறம் பார்ப்போம்…
09/04/2026

கடமை… கண்ணியம்… அப்புறம் பார்ப்போம்…

நஸ்ரியா யாருடைய சொத்தும் அல்ல.அது ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளின் தளம்! 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ...
03/04/2026

நஸ்ரியா யாருடைய சொத்தும் அல்ல.
அது ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளின் தளம்!

2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உண்மையான கல்வி நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து வந்த மாணவர்களின் பெறுபேறுகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட போலியான பெருமை இம்முறை முழுமையாக சிதறி விழுந்துள்ளது.

🔺முறைகேடான நிர்வாகத்தின் செயற்பாடுளுக்கான உதாரணங்கள்
———————————————-
🔺அன்மையில் உள்ள ஒரு பாடசாலையில் பணியாற்றும் திறமை மிக்க ஆசிரியர் அவர்களின் அர்ப்பணிப்பினால், அங்கு எட்டு மாணவர்களுக்கு மேல் முகாமைத்துவ பீடத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இவ்வளவு திறமை வாய்ந்த ஆசிரியரை நமது பாடசாலைக்கு கொண்டு வர பழைய மாணவர் சங்கம் நேரடியாக முயற்சி செய்து, அவர் ஒப்புதல் கடிதம் தரவும் முன்வந்தார்.
ஆனால் என்ன நடந்தது?
அந்த முயற்சி அன்றைய அதிபரின் அலட்சியத்தால் தூக்கி எறியப்பட்டது!
இன்றைய நிர்வாகமும் அதே பாதையில் செல்கிறது!

“🔺இரண்டு வருடங்களுக்கு முன்பு commerce stream இற்கு பொறுப்பாக இருந்த ஆசிரியை. அந்த காலத்தில் நடைபெற்ற இரண்டாவது தேர்வுப் பரீட்சையில், மாணவர்களில் சுமார் 35% பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இது மிகவும் கவலைக்கிடமான ஒரு நிலை.

இந்த விடயத்தை OBA மற்றும் SDEC கூட்டங்களில் முன்வைத்து, ‘இந்த 35% பங்கேற்பை கூட ஏற்படுத்த நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது?’

இந்த தகவலை வெளியில் கொண்டு வந்த ஆசிரியரையே அழைத்து, ‘ஏன் இந்த விஷயத்தை பழைய மாணவர்களுக்கும் SDEC-க்கும் தெரிவித்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

🔺பழைய மாணவர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் 50% கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை

🔺மேலும், OBA முகநூல் பக்கத்தில் மாணவர்களின் திறமைகள் பகிரப்படாமல் தடுப்பது?

🔺மற்றுமொரு ஆசிரியரை நமது பாடசாலைக்கு கொண்டுவர OBA முயற்சித்த போது முன்னால் அதிபர் நஸ்மி தலைமையிலான் நிர்வாகம் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது

🔺அன்மையில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஆசிரியரை நமது பாடசாலைக்கு கொண்டுவர OBA முயற்சி செய்த போது தற்போதைய நிர்வாகம் அந்த முற்ச்சியை தடுத்து நிறுத்தியது

இந்த நிலை தொடர்ந்தால், நஸ்ரியா ஒரு கல்வி நிலையமாக அல்ல – ஒரு நிர்வாகத் தோல்வியின் எடுத்துக்காட்டாக மட்டுமே மாறிவிடும் அபாயம் உள்ளது.

ஆகவே, இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது:

நாம் இன்னும் மௌனமாக இருக்க வேண்டுமா?

இந்த பலவீனமான நிர்வாகத்திற்கு எதிராகவும், நஸ்ரியாவின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் – பெற்றோர்களும் பழைய மாணவர்களும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இது ஒரு விருப்பம் அல்ல – ஒரு பொறுப்பு!

⚠️ இனி மௌனம் இல்லை
⚠️ உண்மையை மறைக்கும் நிர்வாகத்திற்கு இடமில்லை
⚠️ ஒன்றிணைந்த குரல் மட்டுமே மாற்றத்தை உருவாக்கும்

நஸ்ரியாவை காப்போம் – இப்போதே ஒன்றிணைவோம்

01/04/2026

Nasriya Results ?
…..

Address

Chilaw
Chilaw Town
61000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Nasriyans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share