Vaibz Sports

Vaibz Sports The Srilanka’s No 1 rising sports hub. www.vaibzsports.com

🏏 T20 உலகக் கிண்ணம்: இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு – பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கைT20 உலகக் கிண்ண கிரி...
04/02/2026

🏏 T20 உலகக் கிண்ணம்: இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு – பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு (PCB) ஐ.சி.சி. மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால், ஒளிபரப்பு நிறுவனங்களிடமிருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான ஆண்டு வருமானப் பகிர்வான ரூ.316 கோடியை (இந்திய மதிப்பில்) ஐ.சி.சி. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒளிபரப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தால், பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ஐ.சி.சி. ஆதரவு வழங்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ஐ.சி.சி.யின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

🔥🇮🇳 U19 இந்திய அணியின் அசத்தல் சாதனை!🚨 ICC ஆண்கள் U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா 10-வது முறையாக தகுதி பெற்ற...
04/02/2026

🔥🇮🇳 U19 இந்திய அணியின் அசத்தல் சாதனை!

🚨 ICC ஆண்கள் U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா 10-வது முறையாக தகுதி பெற்றுள்ளது!

🏏 இறுதி மோதலில் இங்கிலாந்து U19 அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது 🏆⚔️

எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வரலாறு படைக்குமா? 💙🔥

ஆஷஸ் தொடரை 4-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. சிட்னியில் இன்று நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்...
08/01/2026

ஆஷஸ் தொடரை 4-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

சிட்னியில் இன்று நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது.

ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார்.

அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், 183 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. 119 ரன்கள் முன்னிலை பெற்றது.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த பெத்தேல் 154 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. வெற்றி இலக்கை விரைவில் எட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அணி 31.2 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Address

Hamden
Colombo
103

Telephone

+94761529533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaibz Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaibz Sports:

Shortcuts

Share