
14/08/2025
ஒருத்தர் வெளிநாட்டுல இருந்து வந்து தாற டொபியும் சாக்லேட்டும் க்ளோனும்தான் பலருக்கு தெரியும் ஆனா அத எப்புடி கொண்டு வந்து சேக்காங்க எண்டு தெரியுமா... விளக்கமா சொல்லுறன் கேட்டுக்கோங்க...
ஒப்பீஸ்ல வெக்கேஷனுக்கு டேட் சொன்னதுல இருந்து சாமானுகள் வாங்குற படலம் கூடும். வீட்டுல, சொந்தத்துல, கூட்டாளிமார்ட இருந்து வந்த லிஸ்டோட வீட்டுல இரிக்கிர ஆக்களுக்கு அது நல்லம் இது நல்லம் எண்டு ஒவ்வொரு சாமானா வாங்கிட்டு வந்து பாத்தா 50 கிலோவத் தாண்டும். அங்க கார்க்கோ பர்ளாக்கப்படும்.
இனி அஞ்சி பத்துக் கிலோவ வெச்சிட்டு மிச்சத்த கார்கோல போடோணும். எயா கார்கோனா போறதுக்கு ரெண்டு கிழமைக்கு முன்னயாவது போடோணும். சீ கார்க்கோ எண்டா ரெண்டு மாசம் வெச்சித்தான் போடோணும்.
வீட்ட போறதுக்கு முன்னுக்கு போய் சேந்திடாமலும் போய் கனகாலத்துக்கு பிறகு வந்திடாமலும் பாத்து அந்த கார்க்கோவ போடோணும் அப்பதான் வீட்டுக்கு போய் கார்கோல போட்டது கைல கொண்டு போனது எண்டு எல்லா சாமானுகளையும் ஒழுங்கா பிரிச்சி பங்கு வைக்கலாம். இல்லாட்டி அது பெரிய பலாயா போயிரும்.
வெக்கேஷன் நெருங்கிட்டு எண்டா பெரும்பாலும் எத்தின கிலோ எண்டாலும் கிலோக்கு பத்து றியால் குடுத்து எயார் கார்கோலதான் போடோணும்.
கைல கொண்டு போக எண்டு முப்பது கிலோவ வெச்சிட்டு மத்ததான் கார்கோல போடுற எண்டு யாரும் நினச்சிட வேண்டாம். அஞ்சி பத்து கிலோவ மட்டும்தான் வெச்சிட்டு மத்தது கார்கோல அனுப்புற. அது ஏனெண்டு கீழே வாசிச்சிட்டு போககுள்ள உங்களுக்கே விளங்கும்.
வெக்கேஷன் கிட்டவாககுள்ள கோள்கள் வரும். நாட்டுக்கு வாறயாம் எண்டு கேள்விப்பட்டன் ஏலுமெண்டா ......
இதுல ஒண்டு வாங்கிட்டு வாங்களன். அவனுக்கு இது நல்ல விருப்பம் அங்க இரிக்கிரது நல்லமாம் வரக்குள்ள அதுல ரெண்ட புடிச்சிக்கி வாங்க. இப்புடி அடுத்த லிஸ்ட் தயாராகும்.
அது இல்லாம பொண்டாட்டி புள்ளைகள் கேட்டது. கார்கோல போடேலாத பழுதாகுற சாமானுகள் எண்டு கொஞ்சம் வாங்க இருக்கும்... அது போக தெரிஞ்சவங்க தந்த பார்சல்கள் வேறயா இருக்கும்.
இடையால ஒருத்தன் பார்சல் தாறன் தாறன் எண்டுட்டு கடைசி வர தர மாட்டான் நம்மளும் அவன் தாறல்லயாக்கும் எண்டுட்டு விட்டிடுவம் நாளைக்கி பயணம் எண்டா நைட்டுக்கு கொண்டு வந்து பார்சல நீட்டுவான். அதுவும் மூணு கிலோனு சொல்லிட்டு அஞ்சி கிலோ இருக்கும்.
இனி ஒண்டும் செய்யேலாம அதயும் வாங்கி எடுக்திட்டுப் பார்த்தா திரும்ப 50 கிலோ வந்து சேந்திருக்கும். இது எல்லாத்தையும் கொண்டுபோய் சேர்க்கோணும் அதுலதான் க்ளைமெக்சே இருக்கு.
கட்டார் எயர்வேஸ்ல 37 கிலோதான் தருவாங்க. 30 பெல்ட்ல 7 ஹேண்ட் லக்கேஜ்ல. இப்ப முதலாவதா பெல்ட்டுக்கு போடுற பொட்டிய கட்டோணும்.
ரூம்ல நல்ல ட்ரவளிங் பேக் எல்லாம் இருக்கும் அனா அது மூணு நாலு கிலோ வெயிட் எங்குறதால வெயிட் கொறஞ்ச கார்போர்ட் பொட்டியா தேடி எடுக்கோணும். அதுல 31 கிலோவுக்கு கூடாம 30.5 கிலோக்கு குறையாம அந்த பொட்டிய கட்டோணும். இப்ப மிச்சம் 20 கிலோவுக்கு மேல இருக்கும்.
அடுத்தது லெப் இல்லாத லெப்டொப் பேக் ஒண்ட எடுத்துக்கோணும். அதுக்குள்ள சைல சிறியதாகவும் கிலோவுல கூடயாவும் இரிக்கிர சாமானுகளாப் பாத்து வெச்சி லெப்டொப் இரிக்கிரமாதிரி அத செட்பண்ணி எடுக்கோணும். அந்த பேக் வீங்கினமாதிரி தள்ளிக்கி நிண்டா டவுட் வந்திரும் அதாலதான் இந்த வேல செய்ர.
இனி அதுக்குள்ள ஒரு அஞ்சி ஆறு கிலோ அமத்துப்படும். அடுத்தது ஹேண்ட் லக்கேஜ் அதுக்கும் பெரிசா இல்லாம மிச்சம் சிறிசாவும் இல்லாம ஒரு சைசான பேக்க பாத்து எடுத்துக்கோணும். அதுலயும் லெப் பேக்ல சாமான் அடிக்கின போர்மியுலால அடிக்கி பத்து பதின் மூணு கிலோவ அமத்திரோணும்.
அடுத்தது பாஸ்போர்ட், போர்டிங்க் பாஸ் ஃபோன் வைக்கிர சின்ன கை பேக். அதுக்குள்ளயும் வைக்க எலுமானத வெச்சிரோணும். ட்ரவுசல் பொக்கேட் ரெண்டுலயும் வாங்கின ஃபோன், பவர் பேன்க் இப்புடியான சாமான சொருவோணும்.
நாட்டுக்கு போய் போடுறதுக்கு உடுப்பு கொண்டு போகோணுமே அதுவும் மூணு நாலு கிலோக்கு வரும் இனி அதுக்கு சிலவங்க என்ன செய்ரெண்டா போட்டிக்கிர உடுப்புக்கு மேலால இன்னம் ரெண்டு ட்ரவுசர் சேட்ட போடுறது.
அதுக்கு அடுத்தது நல்ல அழகான பேப்பர் பேக் ஒண்ட எடுத்து அதுக்குள்ள ஈச்சம் பழம், இன்னம் சில ப்ரூட்ச போட்டு அதுலயும் ஒரு மூணு கிலோவ போட்டு எடுத்துக்கோணும்.
மிஞ்சின எல்லாத்தையும் ஒரு பேக்ல போட்டு எடுத்துக்கு எயார்போர்ட் போய் வெளியில ஒருத்தர ஸ்டேன்ட் பை நிப்பாட்டிட்டு அவர்ட கைல அந்த பேக்க கொடுத்திட்டுதான் உள்ள போறது.
இப்புடி எல்லாத்தையும் எடுத்துக்கு கவுண்டருக்கு போற நேர பயம் இல்லாம மூஞ்ச நல்ல பசுந்தா வெச்சிக்கோணும். பெல்ட்ல போடுற பொட்டிய தவிர மத்த எல்லாத்தையும் கவுண்டர்ல இரிக்கிரவனுக்கு விளங்காதமாதிரி அவண்ட டேபிளுக்கு மறச்சி வெச்சிடோணும்.
லக்கேஜ போட்டுட்டு சில நேரம் ஹேண்ட் லக்கேஜ் எங்க எண்டு கேப்பான் அப்புடி கேக்காட்டி போர்டிங்க் பாஸ வாங்கிட்டு மெதுவா வந்திடோணும். அப்புடி ஹேண்ட் லக்கேஜ டெக் அடிக்க கேட்டா பொட்டிட கிலோ விளங்காதமாதிரி பெல்ட்ல படாம பேக்க தூக்கி பிடிச்சிக்கோணும் அவன் டெக் அடிக்குமட்டும்.
தப்பி தவறி கிலோவ பாத்து குறச்சிட்டு வரச் சொன்னா அண்ணியனா இருந்த மூஞ்ச அம்பியா மாத்திக்கிட்டு கொஞ்சம் பேசிப் பாக்கோணும். அப்பவும் ஒத்துக்கலனா ப்ளான் B க்கு போகோணும்.
அந்த ப்ளான் என்னெண்டா... அவன் டெக் அடிக்காம போர்டிங்க் பாஸ தந்திட்டு குறச்சிட்டு வரச்சொன்னா ஹல்லி வல்லிண்டு போய் வெளிய வெச்சிருக்க கொடுத்த சாமானயும் ஹேண்ட் லக்கேஜ்ல போட்டுக்கு கவுண்டருக்கு போகாம உள்ள போகோணும். ஹேண்ட் லக்கேஜுக்கு டெக் அவசியமில்ல.
அதே போர்டிங்க் பாஸ தரலனா வேற வழி இல்ல வெளிய போய் கொஞ்சம் கிலோவ கொறச்சிட்டு வந்து போர்டிங்க பாஸ வாங்கிட்டு திரும்ப போய் அத போட்டுக்கு வரவேண்டியதுதான். என்ன ரெண்டு தரம் உள்ள போய் வர வேண்டி இருக்கும் அம்புட்டுத்தான்.
எல்லாத்தையும் முடிச்சிட்டு 7 kg ஹேண்ட் லக்கேஜ்ல 27 கிலோவ தூக்கிட்டு பாரமே இல்லாதமாதிரி மூஞ்ச வெச்சிட்டு. பொட்டியையும் இழுத்துக்கு மல்லுக்கட்டாம கெத்தா ஒரு எடுவையோட நடந்துக்கு உள்ள போயிரோணும். அப்புடி உள்ள போயிட்டம் எண்டா போதும் வெக்கேஷன் சக்செஸ். இதெல்லாம் கட்டார் எயர்வேய்ஸ் எண்டா மட்டும்தான்.
இதுவே சிறீ லங்கன் எயர்வேய்ஸ் எண்டா கடைசியா ஒரு தடைதாண்டல் பரீட்சை இருக்கு அதயும் தாண்டோணும். அதுதான் ப்ளைட் வாசல்ல லாளாஹாமி மாத்தையா ரெண்டு பேரு தராசோட நிப்பாக அவடத்த மாட்டினா முடிஞ்சி. ஒண்டு காசி கட்டோணும் இல்லையா பொருட்கள இழக்கோணும்.
இது எல்லாத்தையும் முடிச்சிட்டு சீட்ல குந்தி ஒரு பெரும் மூச்சோட இனிமே இந்த கசகரணம் வேணா வாப்போவ் எண்டு ஒரு முடிவுக்கு வருவம். ஆனால் பலருக்கு இப்புடி கஷ்டபட்டதான் அது வெக்கேஷன் எங்குற பீலிங்கே வாறதாம் அதால திரும்பவும் அத பல்லவியும் சரணமும்தான்.
நான் எல்லாம் இந்த அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்குறத விட்டுட்டன் 😍😍😍
சரி இப்புடி கஷ்டப்பட்டு கொண்டு வந்த எண்டுட்டு கூப்புட்டு வெச்சி பொன்னாடையா போத்தப் போறாக அது தரல இது கொண்டு வரல எங்குற குறைதான் வரப் போகுது. இனி என்னத்துக்குத்தான் இவ்வளவு அவதிப்படவோ எண்டும் யோசின வரும்.
சரி இதுக்கு முடிவே இல்லையா எண்டு கேட்டா... இருக்கு அதுதான் லக்கேஜுக்கு ஏத்தமாதிரி தேவையான சாமானுகள வாங்கிட்டு சொல்லாம கொள்ளாம நாட்டுக்கு போய் இறங்கி சர்ப்ரைஸ் எண்டா சரி... இல்லையா போற போறவனுகள் எல்லார்டயும் பார்சல் கொடுக்காம இருந்தாலும் ஓரளவு தப்பிக்கலாம். 😁😁😁