Thowfeek MEDIA

Thowfeek MEDIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thowfeek MEDIA, Media/News Company, Colombo.

31/12/2021
இன்று (20/09/2021) சம்மாந்துறை பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழு கூட்டம் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத...
20/09/2021

இன்று (20/09/2021) சம்மாந்துறை பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழு கூட்டம் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.M. ஹனிபா,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளரும், கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களின் சம்மாந்துறை இணைப்பாளருமான A.R.M. றபீக் (தௌபீக்), கௌரவ இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் E.R.G.D. ராஜபக்ஷ, உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அபிவிருத்தி சம்மந்தமாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் கௌரவ இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்க அவர்களின் பண்முகப்படுத்தபட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட கிருமி நாசினி தெளி கருவிகள் மற்றும் பிளாஸ்டிக் கதிரைகள் என்பன விவசாய அமைப்புகள் மற்றும் மகளிர் சங்கங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளரும் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிக...
14/10/2020

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளரும் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களின் இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்களின் அழைப்பை ஏற்று காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அவர்கள் இன்று (13/10/2020) சம்மாந்துறைக்கு விஜயம் செய்து எமது ஊரில் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட ஆய்வினை மேற்கொண்டார். இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ W.D. வீரசிங்க அவர்களும் கௌரவ இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்க அவர்களின் செயலாளர் அஞ்சனா திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ராஜபக்ஷ, சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் M.M.ஆசிக், சம்மாந்துறை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Thowfeek media unit

இன்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ  W.D. வீரசிங்க அவர்களின் ...
16/09/2020

இன்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ W.D. வீரசிங்க அவர்களின் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது.

Congratulations to Hon. Prime Minister Mahinda Rajapakasa
09/08/2020

Congratulations to Hon. Prime Minister Mahinda Rajapakasa

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் இலக்கம் 5 இல் போட்டியிடும்  வெற்றி வேட்பாளர் முன்னாள் இராஜாங்...
05/07/2020

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் இலக்கம் 5 இல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு பகுதியில் இன்று (05/07/2020) இடம்பெற்ற கருத்தரங்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளரும், தேர்தல் இணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களின் இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்கள் உரையாற்றும் போது

 # TM
26/06/2020

# TM

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்கடந்த ஒரு மாத காலமாக  கொரனா தொற்று மற்றும் ஊரடங்குச் சட்டம் போன்ற பல்வேறு அசாதாரண சூழ்...
23/05/2020

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

கடந்த ஒரு மாத காலமாக கொரனா தொற்று மற்றும் ஊரடங்குச் சட்டம் போன்ற பல்வேறு அசாதாரண சூழ் நிலைகளுக்கு மத்தியிலும் படைத்த இறைவனின் திருப் பொருத்தத்தை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இறைவனால் விதிக்கப்பட்ட நான்காம் கடமையான புனித நோன்பை நோற்று வீட்டிலிருந்தவாறே இன்று பெருநாளை கொண்டாடும் எனது ஊர் மற்றும் இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்

"ஈத் முபாறக்"

மேலும் நாம் ரமழான் மாதத்தில் நோற்ற நோன்பையும், ஏனைய எமது நல் அமல்களையும் இறைவன் ஏற்றுக் கொண்டு நிறைவான நன்மைகளைத் தரவேண்டும் என்று இறைவனைப் பிராத்திப்பதுடன் எமது நாட்டிலிருந்து கொடிய கொரனா நோய் முற்றாக நீங்க வேண்டும் எனவும் எமது அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் இந்நாடு சுபிட்சமடைந்து பொருளாதார வளம் மிக்க நாடாக மாற வேண்டும் எனவும் பிராத்திக்கின்றேன்.

A.R.M.றபீக் (தௌபீக்)
அமைப்பாளர் மற்றும்
தேர்தல் இணைப்பாளர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சம்மாந்துறை

நேற்று, சனிக்கிழமை (16/05/2020) எதிர் வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கொரோனா வைரசிலிருந்து  எவ்வாறு பாதுகாப்பான முறையி...
17/05/2020

நேற்று, சனிக்கிழமை (16/05/2020) எதிர் வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கொரோனா வைரசிலிருந்து எவ்வாறு பாதுகாப்பான முறையில் மேற்கொள்வது என்பது தொடர்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் இணைப்பாளர்களுடனான ( ECO) கலந்துரையாடல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் கௌரவ பசீல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது .

இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளரும், தேர்தல் இணைப்பாளரும், மற்றும் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களின் இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்கள் கலந்து கொண்டார்.

17/05/2020

Address

Colombo

Telephone

0775161003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thowfeek MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share