
25/08/2025
மனிதர்களை பற்றி சில உளவியல் உண்மைகள்
👇
உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களின் குறுஞ்செய்திகளை வாசிக்கும்பொழுது உங்கள் மனம் அந்தக் குறுஞ்செய்திகளை அவர்களின் குரலில் வாசிப்பதை உணரலாம்.
உங்கள் தலையை வலதுபக்கமாக சற்று மேல் நோக்கி சாய்த்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட வசீகரமானவராக தெரிவீர்கள். ஃபோட்டோக்கு போஸ் குடுக்கும் போது இத ட்ரை பண்ணிப் பாருங்க🌞...
நாம் இவ்வளவு அழகானவர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டிருப்போம் அல்லவா! உண்மையிலேயே அதைக்காட்டிலும் நாம் 20% அதிக வசீகரத்துடன் பிறர் பார்வைக்குத் தெரிவோமாம்😎
நீங்கள் கடும் கோபக்காரராகக் கூட இருக்கலாம். ஆனால் உங்கள் மனதுக்குப் பிடித்தவர் எனில் உடனே மன்னித்து விடுவீர்கள்💕
பொதுவாக மனிதர்கள் ஏதாவது ஒன்றை நினைத்து அழும்போது இதற்கு முன் நடந்த வேறு சில கசப்பான அனுபவங்களையும் நினைத்து அதிகமாக அழுகிறார்கள். அதாவது அழுகையை அதிகப்படுத்த வேறு சில சம்பவங்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்😭
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடித்து விட்டால் மற்றவர்களைக் காட்டிலும் அவரிடத்தில் மட்டும் அதிக சத்தமாகவும் உற்சாகமாகவும் பேசுவாள்🗣️
ஒருவர் உங்களிடத்தில் மற்றவர்களைப் பற்றி பேசும் விதத்தைக் கூர்ந்து கவனியுங்கள். ஏனெனில் உங்களைப் பற்றியும் மற்றவர்களிடத்தில் இதே போலத்தான் பேசுவார்கள்🧐