
06/08/2025
දේශබන්ධු තෙන්නකෝන් මහතා පොලිස්පති ධුරයෙන් ඉවත් කිරීම සඳහා වන යෝජනා සම්මතය පාර්ලිමේන්තුවේදී බහුතර ඡන්දයෙන් සම්මතයි.
2002 අංක 5 දරන නිලධරයන් ඉවත් කිරීමේ (කාර්ය පටිපාටිය) පනතේ 17 වන වගන්තිය ප්රකාරව පොලිස්පති ටී.එම්.ඩබ්ලිව්. දේශබන්ධු තෙන්නකෝන් මහතා පොලිස්පති ධුරයෙන් ඉවත් කිරීම පිණිස ඉදිරිපත් කර තිබූ යෝජනා සම්මතය (05-08-2025) පාර්ලිමේන්තුවේදී බහුතර ඡන්දයෙන් සම්මත විය.
දේශබන්ධු තෙන්නකෝන් මහතා පොලිස්පති ධුරයෙන් ඉවත් කිරීම පිණිස වූ යෝජනා සම්මතය අද පෙ.ව 11.30 සිට ප.ව 4.00 දක්වා විවාදයට ගැනීම සිදුවිය. අනතුරුව ප.ව 4.10 ට පැවති ඡන්ද විමසීමේදී පාර්ලිමේන්තුවේ (නොපැමිණි මන්ත්රීවරයන්ද ඇතුළුව) මුළුමන්ත්රී සංඛ්යාවෙන් බහුතරයක් එනම් මන්ත්රීවරයන් 177ක් පක්ෂව ඡන්දය භාවිතා කළ අතර ඒ අනුව අදාළ යෝජනාව බහුතර ඡන්දයෙන් සම්මත විය. මෙහිදී යෝජනාවට විපක්ෂව ඡන්දය ප්රකාශ කිරීම සිදු නොවූ අතර එක් මන්ත්රීවරයෙක් ඡන්දය භාවිතයෙන් වැළකී සිටියේය.
පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන් මහතාව එම ධුරයෙන් ඉවත් කිරීම සඳහා වූ පරීක්ෂණ කමිටුවක් පත්කිරීම සඳහා වූ යෝජනාවක් ඇතුළත් ඉල්ලීමක් පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් 115 දෙනෙකුගේ අත්සනින් යුතුව ගරු කථානායක (වෛද්ය) ජගත් වික්රමරත්න මහතා වෙත පසුගිය මාර්තු මස භාරදෙන ලද අතර අනතුරුව එම පරීක්ෂණ කමිටුව පත් කිරීම සඳහා වූ යෝජනාව 2025 අප්රේල් 08 දින පාර්ලිමේන්තුවේදී සම්මත කෙරුණි.
පසුව පොලිස්පති ටී.එම්.ඩබ්ලිව්. දේශබන්දු තෙන්නකෝන් මහතා විසින් කර ඇතැයි කියන විෂමාචාර සහ සිය ධුරයේ බලතල බරපතල අන්දමින් අනිසි ලෙස යොදාගැනීම සම්බන්ධයෙන් විමර්ශනය කර වාර්තා කිරීමට අදාළ පරීක්ෂණ කමිටුව පත් කිරීම සිදු විය. එම පරීක්ෂණ කමිටුව එවකට ශ්රේෂ්ඨාධිකරණ විනිසුරු පී.පී. සූරසේන මහතාගේ සභාපතිත්වයෙන් සහ විනිසුරු ඩබ්ලිව්.එම්.එන්.පී. ඉද්දවල සහ ජාතික පොලිස් කොමිෂන් සභාවේ සභාපති ඊ.ඩබ්ලිව්.එම්. ලලිත් ඒකනායක යන මහත්වරුන්ගේ සාමාජිකත්වයෙන් සමන්විත විය.
පසුව පරීක්ෂණ කමිටුව පාර්ලිමේන්තුවේදී රැස්වී උක්ත පනතේ විධිවිධාන ප්රකාරව විමර්ශන සිදු කිරීමෙන් අනතුරුව මෙසේ එම පරීක්ෂණ කමිටුවේ අවසන් වාර්තාව පසුගිය ජූලි 21 දින කථානායකවරයාට භාරදීම සිදු විය. අනතුරුව එම වාර්තාව ගරු කථානායකවරයා විසින් ජූලි 22 දින පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලැබීය.
පරීක්ෂණ කමිටුවේ වාර්තාවට අනුව පොලිස්පතිවරයාට එරෙහිව නගන ලද මුළු චෝදනා 23 අතරින් චෝදනා අංක 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22 සහ 23 සම්බන්ධයෙන් පොලිස්පතිවරයා වරදකරු බව තීරණය කර තිබුණි.
தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் (05-08-2025) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.ப 4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தில் (வருகைதராத உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. ஒரு உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்டிருந்தார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் 2025 ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடி, சட்டத்திற்கு அமைய விசாரணைகளை நடத்தியிருந்தது. விசாரணைகளின் முடிவில் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 21ஆம் திகதி கௌரவ சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சபாநாயகர் கடந்த ஜூலை 22 பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மொத்தம் 23 குற்றச்சாட்டுகளில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, மற்றும் 23 ஆம் இலக்கக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியெனக் கண்டறியப்பட்டுள்ளது.
The resolution to remove Mr. Deshabandu Tennakoon from the post of Inspector-General of Police passed by a majority vote in Parliament.
In accordance with Section 17 of the Removal of Officers (Procedure) Act, No. 5 of 2002, the Resolution presented for the removal of Mr. T.M.W. Deshabandu Tennakoon from the post of Inspector-General of Police was passed by a majority vote in Parliament (05-08-2025).
The Resolution was taken up for debate today from 11.30 a.m. to 4.00 p.m. Subsequently, during the vote held at 4.10 p.m., a majority of the total number of Members of Parliament (including those who were absent) voted in favor, with 177 MPs supporting the Resolution. Accordingly, the Resolution was passed by a majority vote and no votes were cast against the Resolution whilst one member abstained from voting.
A motion signed by 115 Members of Parliament requesting the appointment of a Committee of Inquiry for the removal of Inspector-General of Police Mr. Deshabandu Tennakoon was handed over to the Hon. Speaker Dr. Jagath Wickramaratne in March, and subsequently, the motion for the appointment of the said Committee of Inquiry was approved by Parliament on April 08, 2025.
Thereafter, a Committee of Inquiry was appointed to inquire into and report on allegations of gross abuse of power and serious misuse of authority by Mr. T.M.W. Deshabandu Tennakoon in the discharge of his duties as Inspector-General of Police. The Committee of Inquiry, chaired by then Supreme Court Judge P.P. Surasena and comprising Justice W.M.N.P. Iddawala and E.W.M. Lalith Ekanayake, Chairman of the National Police Commission, was appointed.
Subsequently, the Committee of Inquiry, having conducted investigations in accordance with the provisions of the aforesaid Act, handed over its final report to the Hon. Speaker on July 21. Thereafter, the Hon. Speaker tabled the said report in Parliament on July 22.
According to the report of the Committee of Inquiry, out of the total 23 charges levelled against the Inspector-General of Police, he was found guilty of Charges No. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, and 23.
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
WPC Media Private Limited
🌍 Official Website :
https://www.wpcmedialk.com
📌 Approved and Licenced by:
The Ministry of Mass Media of Sri Lanka
https://media.gov.lk/email-us/registered-webs
Media Accreditation by :
The Department of Government Information of Sri Lanka
News Website Monitor by :
The Ministry of Defence of Sri Lanka
📌 WPC Media Official page:
https://www.facebook.com/profile.php?id=100037274232781&mibextid=ZbWKwL
📌 WPC Media Private Limited Official YouTube :
https://youtube.com/-li7jg3jt4w?si=gwiBHnKEr-JOi6Vs
(1) Mass communication activities Including future Press , Electronic , Radio TV Media
activities.
(2) E - News and Web Casting activities
(3) Supporting in Sustainable Development Goals Nationally and Internationally.
📱Mobile:
+94722221331 / +94766922216
☎️ Telephone:
+94112388359
📠 Fax :
+94112388359
📧 E-mail :
[email protected] [email protected]
👉 Follow us:
📌 Whatapp Official Channel
Follow the WPC MEDIA Official channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaJh1hgLdQekTIp8AI42
📌 WhatsApp Official Group
Follow the WPC MEDIA Official WhatsApp Group :
https://chat.whatsapp.com/KgvazYMvJZT7hwTqWbK3Mr
🌍 UN Global Compact Participant & "We Support"
https://unglobalcompact.org/what-is-gc/participants/156481-WPC-MEDIA-PRIVATE-LIMITED
🇺🇳 UN - NGO / Civil Society DESA / ECOSOC Participant
https://esango.un.org/civilsociety/showProfileDetail.do?method=showProfileDetails&tab=1&profileCode=677248