22/06/2024
வெட்கப்பட வேண்டிய சமூகம்
ஒரு ஆண், தான் பார்க்கும் வருங்கால மனைவி பேரழகியாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டால் 'அது சரிதானே" என நம் சமூகம் உடனே ஆமோதிக்கும்.
ஒரு பெண், தான் பார்க்கும் வருங்கால கணவன் பேரழகனாக இருக்க வேண்டும் என கன்டிஷன் போட்டால் 'இது என்ன, ஆண்கள் எல்லோரும் அழகுதானே என உடனே நகைப்புடன் பார்க்கும்.
ஒரு ஆண், தொழில் பார்க்கும் ஒரு பெண்ணை தேடும் போது உடனே நம் சமூகம் "ஆம் சரிதானே, இக்காலத்தில் ஒருவர் சம்பாதித்து சமாளிக்க முடியாதே" என ஆதரிக்க வந்துவிடும்.
ஒரு பெண், தனக்கு வர இருக்கும் கணவன் நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டும் என கன்டிஷன் போட்டால் "இவள் பணத்தாசை பிடித்தவள்" என சமூகம் கதை கட்டிவிடும்.
படித்த ஒரு மாப்பிள்ளை, படித்த பெண்ணை தேடும் போது "சரிதானே, மணப்போருத்தம் இருக்க வேண்டும் தானே" என சமூகம் சரி காணும்.
படித்த ஒரு மணமகள், படித்த ஒரு ஆண் துணயை தேடும் போது, நம் சமூகம் "ஏனிந்த பிடிவாதம், படித்தவனை விட புரிந்து நடப்பவன் தான் சிறந்தவன்" என்று பாடம் நடத்த வந்துவிடும்.
ஒரு ஆண் தன்னை விட மிகவும் வயது குறைந்த பெண்ணை தேடும் போது " நல்ல விசயம், அவனை அவள் கையில் வைத்து பார்த்துக் கொள்வான்" என்று நம் சமூகம் கூறும்.
ஒரு பெண் தன்னை விட ஒரு சில மாதங்களால் வயது வித்தியாசமான ஆணை மணக்க முற்படும் போது "ச்சீ இது முறையல்ல" என நம் சமூகம் பேசத் தொடங்கும்.
படித்த ஒரு ஆண், படிக்காத ஒரு பெண்ணை மணக்க முற்படும் போது "விவரமில்லாத அப்பாவி" என்று சமூகம் கதை கூறும்.
படித்த ஒரு பெண், படிக்காத ஒரு ஆணை மணந்தால் "நல்ல காரியம். அவளுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்" என சமூகம் வரவேற்கும்.
வசதியற்ற ஒரு ஆண் பணக்கார பெண்ணை முடித்தால் "அவன் அதிர்ஷ்டசாலி, இப்படித்தான் இருக்க வேண்டும்" என சமூகம் கொண்டாடும்.
வசதியற்ற ஒரு பெண் பணக்கார ஆணை
முடித்தால் "நல்ல வேளை, அவளுக்கு வாழ்க்கை கிடைத்து விட்டது" என்று சமூகம் பேசும்.
ஒரு சாதாரண ஆண், ஒரு பேரழகியை முடித்திருந்தால் , "அவன் கொடுத்த வைத்தவன்" என சமூகம் பேசும்.
ஒரு சாதாரண பெண், ஒரு பேரழகனை முடித்திருந்தால் " அவன என்ன பாவம் செய்தானோ! இங்கே வந்து விழுந்துள்ளான்" என கிசுகிசுக்கும்.
நம் சமூகத்தின் நடுநிலையை பார்த்தீர்களா...!
✍