SuwasaM FM

SuwasaM FM Suwasam is the most populer digitel media organization in Sri Lanka.

We cover Sri Lanka and world - News,Politics,Current Affairs,Events, Entertinment Programmes,Social Responsibility & Social Awareness.

26/08/2026

இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம்) அவர்கள் அவதரித்த உன்னதமான மீலாதுன் நபி சிறப்பு தினம்

25/08/2026

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து, சந்தேகநபரை செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.
🇱🇰

17/08/2026

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான போரில் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஈரான் வெற்றி பெற்றுள்ளதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
🇮🇷 🇺🇸

17/08/2026

மெரென்ரைவ் வீதியிலுள்ள ஐந்து ஹோட்டல்கள் போதைப் பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிற்கு சொந்தமானவை என காவல்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
🇱🇰

17/08/2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியர்களின் சீருடை தொடர்பாகத் தற்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சர்ச்சையானது, முஸ்லிம் சமூகத்தைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு விஷமத்தனமான முயற்சியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று (15) நடைபெற்ற "இளஞ்சிறகுகள்" சிறுவர் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.

மேலும்,அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சமகால விடயம் குறித்து நான் எதுவும் பேசவில்லை என முகநூலில் விமர்சிக்கிறார்கள். ஏனென்றால், இவ்விடயத்தை முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். நான் முகநூலில் போய் சண்டைக்குப் போக முடியாது. அது பேச வேண்டிய இடத்தில் பேசி, அதற்கு முடிவு காண வேண்டும் என் தெரிவித்தார்.
🇱🇰

17/08/2026

நாட்டிலிருந்து தப்பி சென்ற திட்டமிட்ட குற்ற குழுவின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானை இம்ரான்' விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலர் அபாயகரமான குற்றவாளிகளுடனும், புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருடனும் தொடர்புகளைப் பேணி வந்ததாகக குற்றம் சுமத்திய பிரதி அமைச்சர், அந்த காலப்பகுதியில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,அபாயகரமான குற்றவாளிகளை நாட்டிற்கு திரும்ப அழைத்துவருவதற்கு பாரிய பிரயத்தனம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது சட்டவாட்சியின் அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
🇱🇰

16/08/2026

ஈரானை தாம் தோற்கடித்து முடித்த பிறகு வெகு விரைவில் நான் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

15/08/2026

சென்னையில் இடம்பெற்ற இந்தியாவின் 80 ஆவது சுதந்திரதின விழாவில் முதன் முறையாக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் தேசிய கொடி ஏற்றினார்.
குறித்த விழாவில் முதலமைச்சரின் பெற்றோர், நடிகை திரிஷா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

15/08/2026

இலங்கையின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான வசந்தம் TV மற்றும் வசந்தம் FM நிறுவனங்களின் புதிய முகாமையாளராக ஹிஷாம் முஹம்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த ஹிஷாம் முஹம்மத், பின்னர் இலங்கையின் பல்வேறு தனியார் ஊடக நிறுவனங்களில் பணியாற்றி, தொலைக்காட்சி மற்றும் வானொலி துறைகளில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

பல வருடங்களாக இலங்கை ஊடகத்துறையில் பயணித்து வரும் அவர், நிகழ்ச்சித் தொகுப்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, தனது நீண்டகால ஊடக அனுபவத்துடன் வசந்தம் TV மற்றும் வசந்தம் FM நிறுவனங்களின் புதிய முகாமையாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
🇱🇰

15/08/2026

போக்குவரத்து சோதனையின் போது குடிபோதையில் இருந்த காவலர்கள் ஆயுதங்களை காட்டினார்களா?என சந்தேகம்

வாரியபொல பகுதியில் நள்ளிரவில் நடந்த போக்குவரத்து சோதனையின் போது, ​​தன்னையும் தனது மகளையும் பயணத்தில் நிறுத்திய ட்ராபிக் பொலிஸார் ஆயுதங்களைக் காட்டியது பொருத்தமானதா என்று ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளின் நடத்தை குறித்தும் அவர் கவலை தெரிவித்ததோடு, அவர்களில் சிலர் மது போதையில் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
🇱🇰

Address

Mews Street, Colombo/02
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when SuwasaM FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SuwasaM FM:

Shortcuts

Share