Lanka Tamil News 1st

Lanka Tamil News 1st 🔥உண்மையை உண்மையாய் மக்களிடம் சேர்ப்பதே எமது குறிக்கோள் 🔥

வவுனியாவில் என்ன இருக்கு என்பவர்களுக்காக!எங்களோட சொர்க்க பூமிடா இதுகுளங்களில் முடியும் வடக்கு வாயில் வன்னிப் பெருநிலப்பர...
21/02/2025

வவுனியாவில் என்ன இருக்கு என்பவர்களுக்காக!
எங்களோட சொர்க்க பூமிடா இது

குளங்களில் முடியும் வடக்கு வாயில் வன்னிப் பெருநிலப்பரப்பு!

வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லாததாலும் ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும் இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும் பள்ளங்களும், பளைகளும், புராணங்களும், புரங்களும், மடுக்களும், மலைகளும், முறிப்புகளும், மோட்டைகளும், வத்தைகளும், வனப்பு சேர்ப்பதனால் வவுனியாவின் இடப்பெயர்களில் இவற்றின் ஆதிக்கமே பரவலாகி காணப்படும்.

வவுனியா பிரதேசங்களில் பரவிக்காணப்படுகின்ற தாவரங்களான அரசு, ஆத்தி , இத்தி , இலந்தை , இலுப்பை, இறம்பை , ஈஞ்சு , கரம்பை, கறிவேம்பு, கருங்காலி, கள்ளி, கான்ச்சூரை, காயா, கூமா, கூழா, சமிழ், சாளம்பை, செங்காராயத்தி, தம்பனை, தான்றி , தேக்கு, நறுவிலி, நெளு, நொச்சி, பம்பை, பனிச்சை, பயறி, பரசு, பாலை, பாவட்டை, பிரம்பு, புளி, பூசினி, பூவரசு, பொடுங்கண், மகிழ், மண்டு, மருது, மரக்காரை, மாறலுப்பை, முள்ளி, விண்ணானை, விளா , வேம்பு என்பனவும் உயிரினங்களான ஆமை, உக்கிளான், எருமை, பன்றி, மரை, மான், கொக்கு என்பனவும், மீன் இனமான குறவையும் தானியங்களான எள், நெல் என்பனவும் இடப்பெயரியலில் முக்கிய இடம் பெறுகின்றன.

இத்தாக்கங்களால் வவுனியாவில் ஊர் பெயர்களில் ஆழ்ந்த அர்த்தங்களும் அழகியலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது வவுனியா மக்களின் தமிழ் புலமையையும் ஆழ்ந்த பாண்டித்தியத்தையும் புலப்படுத்தி நிற்கிறன. இனி சில ஊர்களின் பெயர்களினூடு கவனம் செலுத்தலாம்.
பறங்கி என்பது பூசணியை குறிக்கும் பெயராகும். பூசணி பயிர் செய்கைக்கு அருகில் ஆறு இருந்தமையால் அக்குடியிருப்பு பறங்கியாறு என அழைக்கப்படுகின்றது. பறங்கியாறு புதுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் நீர் பாய்ந்தோடும் இயற்கை கால்வாய்களை ஓடை என்று அழைப்பார்கள். மருத மரங்களின் சோலையினூடக அது பாய்ந்து ஓடுகின்றமையால் அவ்விடம் மருதோடை எனப்படுகிறது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. கண்டி என்பது குளத்தை குறிக்கும். உட்பகுதியை வெட்டி ஆழமாக்கி உருவாக்கப்பட்ட குளம் வெட்டுக்கண்டி என பெயர்பெற்றுக் கொண்டது. தற்போது இந்தக்குளம் நெளுக்குளத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இது நெளுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது.

இதைவிட மரங்களை பகுதியாக கொண்ட குளங்களில் முடியும் பெயர்களை கொண்ட கிராமங்களும் காணப்படுகின்றன. கோழிய குளம் என்பது கோலிக்குளம் என்பதன் திரிபாகும் .கோலி என்பது இலந்தை மரத்தை குறிக்கும். நீர்நிலை நெடுகில் இந்த மரம் அதிகமாக காணப்பட்டபடியால் கோலியகுளம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. சோபாலிகை என்பது பற்றைக்காட்டை குறிக்கும். பற்றைக்காடுகள் நிறைந்த புளியங்குளம் சோபாலிகை புளியங்குளம் என்றிருந்தது. நாளடைவில் சோபால புளியங்குளம் என மருவியது. வவுனியாவுக்கு வியாபாரநோக்கில் வந்த வணிகப்பெண் ஒருத்தி வாங்கியதால் புளியங்குளம் அவள் மரபான பட்டாணியை கொண்டு பட்டாணிச்சியூர் புளியங்குளம் என்று பெயர் பெற்றது. புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகவும் அவை தரித்து நின்று செல்லும் இடமாகவும் இருந்த புளியங்குளம் புலிதரித்த புளியங்குளம் ஆனது. இப்பெயர் மருவி நாளடைவில் புலிதறித்த புளியங்குளம் ஆனது.
இராசேந்திரம் என்ற ஒரு உடையாரால் திருத்தி அமைக்கப்பட்டகுளம் இராசேந்திரகுளம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது . நாகர் இலுப்பைக்குளம் என்ற இடம் ஞாபகப்பெயர் என்று கருதப்படுகின்றது சிலோனுக்கு வந்த நாகா இனத்தவர்கள் நாகநாட்டை ஆக்கிரமித்து வன்னி இராச்சியங்களை நிறுவும்வகையில் ஈழத்தின் நாக நாட்டை ஆண்டுவந்த நாகர் இனத்தவர்களின் ஞாபகார்த்தமாக நிலைத்து நிற்கும் பெயர் நாகர் இலுப்பைக்குளம் ஆகும். இது கந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. வைரவர் கோவில் இருந்த புளியங்குளம் வைரவர்புளியங்குளம் ஆனது.
தாயம் என்பது தந்தை வழி உறவை சுட்டிக்காட்டுகிறது. தந்தை வழியாக கடத்தப்பட்டு வந்த குலஉரிமையை உடைய குளம் தாயக்குளம் என்றும் அக்குளத்தைச்சுற்றி அதிகமாக எய்பன்றிகள் வாழ்ந்து வந்ததால் எய் பண்டி தாயங்குளம் எனவும் அவ்வூர் பெயர்பெற்றது.
குளக்கட்டுக்களை அலை தாக்காமல் இருப்பதற்கு உட்புற குளக்கட்டில் கற்களை அடுக்கி வைப்பர். இதன் பொருட்டு அந்த குளம் அலைக்கல்லு போட்டக்குளம் ஆனது. நாப்பண் என்பது நடு என்னும் பொருள் கொண்ட சொல்லாடல் ஆகும். சுற்றிவர பலகுளங்கள் இருக்கும் போது நடுவில் அணைக்கப்பட்டபடியால் நாப்பண் குளம் என பெயர்பெற்றது. நாளடைவில் இது நாம்பன் குளம் என மருவி காணப்படுகின்றது. குளமானது தாழி வடிவில் ஆழமான அமைப்பை கொண்டபடியால் தாழிக்குளம் என அழைக்கப்பட்டது பின்னர் தலிக்குளமாக மருவிப்போனது. யானைகளின் தந்தம் மிக விலைமதிப்பானது. யானைத்தந்தங்களை இறந்த யானைகளில் இருந்து எடுத்து ஊருக்கு கொண்டு செல்ல பயந்து ஒளித்துவைத்து சென்ற கிராமம் கொம்பு வைத்த குளம் என அழைக்கப்பட்டது.
சூரி என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும், எருமை மாடுகளில் ஆண் மாட்டை கடா என்பார்கள். பழக்கிய எருமை மாடுகளை கொண்டு சென்று, காட்டு குழுவின் மாடுகளை, நீர்நிலைகளுக்கு அருகே காலில் சுருக்கு போட்டு பிடிப்பது வழக்கமாகும். இப்படியான வழக்கம் உடைய ஊர் கடாச்சூரி என பெயர்பெற்றது நாளடைவில் கிடாசூரி ஆனது. பாளை என்பது நீர்நிலை அருகே மக்கள் தங்கி வாழும் இடங்களை குறிப்பது. அவ்விடங்களுக்கு அருகே மருக்காரை என்ற மரம் செறிந்து காணப்பட்டபடியால் அவ்விடம் மருக்காரம்பாளை ஆனது. மடு என்பது ஒரு நீர் நிலையை குறிக்கும். மாரி காலங்களில் நீர் பாய்ந்து ஓடுவதால் அதை மறித்து குளங்கள் கட்டப்பட்டுள்ளன. குளங்கள் கட்டப்பட்ட பின்பும் அந்த பூமி மடு என்றே அழைக்கப்படுகின்றது. சேமம் என்றால் புதை பொருட்களையும் அரண்களையும் குறிக்கும். இதனால் சேமம் கொண்டபிரதேசங்களில் இருக்கின்ற மடு சேமமடு எனப்படுகின்றது.
காட்டு பிரதேசங்களின் நகரமயமாக்கலின் போது பெரிய மரங்களை வெட்டி எடுத்து விடுவார்கள். அதன் பின்பு சிறிய மரங்களே எஞ்சி இருக்கும். இப்படி சிறிய மரங்களினால் எஞ்சிய காடு குருமன் காடு என பெயர் பெற்றது நாளடைவில் குருமண்காடு ஆகியது. கரம்பை மரங்களால் செழிக்கப்பட்ட இடத்தை உடைய காட்டு பிரதேசம் கரப்பன் காடு ஆனது. இவை வைரவர்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவை சார்ந்தவை.
பயிச்செய்கை நடைபெறும் இடங்களை தோட்டம் என அழைத்தார்கள், நீர்ப்பாசன விவசாயம் செய்யப்படும் இடங்களை பூ என பூரிப்புடன் அழைப்பர். அதை தாண்டி அதற்கு அருகில் தோட்டம் செய்யப்படும் இடம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகிறது. அதோடு வத்தை என்பதும் தோட்டத்தை குறிக்கும். அரச தேக்கம் தோட்டங்களில் குடியேறிய மக்கள் அவ்விடத்தை தேக்கத்தை என அழைத்தனர். மந்தை என்பது ஆடு மாடுகள் கூட்டமாக உள்ளதை குறிக்கும் பெயராகும். ஓ என்பது சென்று தங்குவதைக்குறிக்கும். மந்தைகள் சென்று தாங்குகின்ற இடமாக அமைவதால் ஓமந்தை என்ற ஊர் பெயர் பெறுகிறது.
இதில் பெயர்பெற்ற வவுனியா நிலையங்களையே சுட்டிக் காட்டியுள்ளேன். இதை விடவும் ஏனைய இடங்கள் அவற்றின் தனித்துவமான காரண ஊர் பெயர்களுடன் இன்றும் விளங்குவதை காணக்கூடியதாக அமைகின்றது. இப்படி செழுமையும் செழிப்பும் நிறைந்த ஊர்ப்பெயர்கள் குடியேற்றங்களால் அளிக்கப்படுவது மனவருத்தத்துக்குரியதொன்றாகும். மருவிப்போன பெயர்களைக்கூட ஆதாரப்படுத்தி விடலாம் ஆனால் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கி அழிக்கப்பட்ட தமிழ்க்கிராமங்களின் அடையாளங்கள் ஆதாரப்படுத்த முடியாதன. நவீனமயமாக்கலின் போது ஊர்ப்பெயர்களும் நவீனமாக்கப்படுகின்றமை வரலாறுகளை மறைப்பதாக அமைந்து விடுகின்றது. அழகிய தமிழ்ப் பெயர்களை உடைய எமது வரலாற்றுச் சிறப்பைக்கூறும் ஊர்களின் காரணப்பெயர்களின் செழுமைமிக்க காரணமறிந்து அவற்றை நிலைபெறச் செய்வது தமிழர்களின் தலையாய கடமையன்றோ!

வாழையடி வாழையாக வள்ந்து வரும் வன்னியின் வரலாறுகள் இன்னும் புரியாத புதிராகவே இருப்பினும் இன்று ஆங்காங்கே கண்டுபிடிக்கப்படும் சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை எமக்கு அறிவிக்க முற்படுகின்றது.

ஆனால் அதை ஆராய்வதற்கு எவரும் தயாராகவில்லை என்பது வேதனைக்குரிய விடையமாகும். தமிழர் தாயகத்தின் பெருநிலப்பகுதியான வன்னிமண் பல சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் அடித்தளமிட்ட மண்ணாகும். இயற்கை அன்னையால் அரவனைக்கப்பட்ட வன்னித்தாய் தன்னை நம்பி வந்த எவரையும் கைவிட்டதாக எந்த சரித்திரமும் கூறவில்லை. பண்டாரவன்னியனின் ஆட்சிக்கு முன் வன்னியில் என்ன நடந்தது?

வன்னி எவ்வளவு பழமையானது என்பன இன்று எம்முன்னே எழும் வினாக்களாகும். இந்த வினாக்களுக்க விடை தேட யாரும் தயாராய் இல்லை என்பதே உண்மையாகும். பண்டாரவன்னியனின் நு}ல் கூட ஒரு வாய் மொழிக்கதையின் உறுதிப்படுத்தப்பட்ட அச்சுப்பதிப்பே. திரு.முல்லைமணி வே.சுப்பிரமணியத்திற்கு முன்னையோர் வன்னியின் தொன்மையை அறியமுற்படவில்லை. சிலவேளை அவர்கள் முயற்சி செய்திருந்தால் வன்னியின் தொன்மை களை இலகுவாய் அறிந்திருக்க முடிந்திருக்கலாம். திரு.முல்லைமணி மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பண்;டாரவன்னியனது சிலை நிறுவப்பட்டுள்ளது.

வன்னியின் அமைவிடத்தைப் பார்ப்போமானால் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் கடலோர பிரதேசங்களாகும். வன்னியின் ஒவ்வொரு பிரதேசமும் தமக்கென ஒரு சிறப்பைக்கொண்டவையாகும். மன்னார் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் ஈழத்து ஈச்சரங்களில் ஒன்றான திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. அத்தோடு அதிலிருந்து கிட்டத்தட்ட 40மஅ து}ரத்தில் மடுமாதா கோவில் இருக்கின்றது.அது மட்டுமல்லாமல் ஈழத்தின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான கட்டுக் கரைக்குளம் அமைந்துள்ளது. அத்தோடு இது ஓர் கரையோரப்பிதேசமாகும். மன்னாரிலிருந்து தென்னிந்தியா 32மஅ மட்டுமே. மன்னாரின் மண் மற்றும் நீர் உவர்ப்புத்தன்மையுடையது அடுத்து வவுனியா மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால் வவுனியா மாவட்டதில் பிரசித்தி பெற்ற புது}ர் நாதம்பிரான் ஆலயமும் சடவன்குளம் ஐயன் கோவிலும் உண்டு அத்தோடு ஆலயங்கள் நிறைந்த பிரதேசமாக வவுனியாமாட்டம் திகழ்கிறது.அதுமட்டுமலல்லாமல் கனகராஜன் ஆறு இதனு}டே பாய்கிறது. அத்தோடு ஈழத்தின் பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் இங்கே தான் அமைந்துள்ளதுஇன்று வடக்கின் வர்த்தக தலைநகராக வவுனியா திகழ்கிறதுஅத்தோடு தமிழீழத்தின் கிழக்கு எல்லையாகவும் வவுனியா திகழ்கிறது. அடுத்து நாம் முல்லைத்தீவுக்கு செல்தோமாயின் அங்கே உப்பு நீரிலே விளக்கெரியும் புதுமை மிகு ஆலயமான வற்றாப்பளை(பத்தாப்பளை)கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.அத்தோடுஈழத்து தான்தோன்hPச்சரங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் தான்தோன்hPச்சரம் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல ஆங்கிலேயரினால்; பண்டாரவன்னியனின் நினைவுக்கல் இம்மாவட்டத்தில்த்தான் நிறுவப்பட்டது.அது இன்றும் கற்சிலை மடுவில் பனை வடலிகளின் மத்தியில் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மற்றுமோர் சிறப்பம்சம் ஈழத்தின் மிகப்பெரிய குளங்களான முத்தையன் கட்டுக்குளம் மற்றும் தண்ணீர்முறிப்புக்குளம் என்பன அமைந்துள்ளமையாகும். அத்தோடு தென்னைவளம் நிறைந்த பிரதேசமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் மிளிர்கிறது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வன்னி ஓர் விவசாயப்பிரதேசம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அத்தோடு வன்னியிலே இந்து மற்றும் கிறிஸ்த்தவர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பது புலனாகிறது. இவற்றை எல்லாம் உற்று நோக்கும் போது எம்முள் சில கேள்விகள் எழாமல் இல்லை.

>> பண்டாரவன்னியனின் வரலாறு கற்பனையா?நிஜமா?
>> இவ்வாறு சிறப்பு மிக்க பிதேசம் ஏன் பிரசித்தி பெறாத நகரமாய் இருந்தது?
>> ஏன் வன்னியின் தொன்மைகள் பேணிப்பாதுகாக்கப் படவில்லை?
>> ஏன் இப்பிரதேசம் இன்னும் தொல்பொருள் ஆராச்சிக்கு உட்படுத்தப்படவில்லை?

இதில் முதலாவது வினாவிற்கு நாம் விடையளிப்போமாயின் பண்டாரவன்னியனது வரலாறு கற்பனையா? நிஜமா? இந்தக் கேள்வி எழுந்ததன் விளைவாய்த் தான் திரு.முல்லைமணியவர்களுக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் இதைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. பண்டாரவன்னியனின் வரலாறானது கற்பனையில் உதித்ததல்ல. அது கருணதந்திர கதையாக அதாவது வாய் மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இக்கதையை உண்மை என்று எவரும் ஆரம்ப காலத்தில் உறுதிப்படுத்தவில்லை. திரு.முல்லைமணி அவர்களின் முயற்சியாலும் வன்னியில் எழுந்த பிரதேச
விழிப்புணர்வினாலுமே பண்டார வன்னியனின் கதை நிஜமென்றும் கற்சிலை மடுவில் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் உண்டென்றும் உறுதிப்படுத்தப்பட்ட பின் தான் பண்டாரவன்னியனின் வரலாறு நு}ல்வடிவம் பெற்றது எனலாம்.இதனால் நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது என்னவெனில் பண்டாரவன்னியனது வரலாறு உண்மையானதென்பதே.

இரண்டாவது வினாவிற்கு நாம் செல்வோமாயின் இலங்கையின் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களே பிரசித்தி பெற்ற பிரதேசங்களாக காணப்படுகிறது. இதற்குக் காரணம் அந்தப் பிரதேசங்களை கப்பல் தரித்து நிற்பதற்காய் ஆங்கிலேயர் பயன் படுத்தியமையே இதற்குச சான்றாக இப்பிரதேசங்களில் துறைமுகங்கள் காணப்படுவதை அவதானிக்கமுடியும்.இதனால் ஆங்கிலேயர் வன்னியை தமது பாதுகாப்பிற்கு பயன்படுத்த முற்பட்டுள்ளனர் எனலாம். வன்னியை கைப்பற்ற வேண்டுமென்பதோ பண்டாரவன்னியனை தோற்கடிக்க வேண்டுமென்ற அவசியமோ வெள்ளையனுக்கு இல்லை. அனாலும் இலங்கையில் சுகந்திரமான இராஜ்சியம் இருப்பதைஆங்கிலேயர் விரும்பவில்லை அல்லது வன்னியில் உள்ள சுகந்திர இராஜ்சியத்திலிருந்து தமக்கெதிரான கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்று அச்சப்பட்டிருக்கலாம் அதன் விளைவாய் வன்னி மீது ஆங்கிலேயர் போர் தொடுத்திருக்கலாம்.இதனால் வன்னியை ஆங்கிலேயர் பாதுகாப்பிற்காய் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. இதனால் வன்னியின் சில பகுதிகள் யாரும் அறியாத ஒன்றாக இருந்தது.

>அடுத்த வினாவிற்கு நாம் விடையளிபபோமாயின் வன்னியின் பாண்டைய கால வரலாறுகள் பேணிப்பாதுகாக்கப் படவில்லை என்பது உண்மையே. அதற்குக் காரணம் பண்டாரவன்னியனின் ஆட்சிக்குப் பின் ஆங்கிலேயரின் கொடுமைகளுக்குப் பயந்து எவரும் வன்னியின் தொன்மைகளை பாதுகாக்கப்படாமல் பேணிப்பாதுகாக்காமல் விட்டிருக்கலாம். 1796 தொடக்கம் 1948 வரையான பிரித்தானியர் ஆட்சியிலே வன்னியரின் தொன்மைகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அழிந்திருக்கலாம். ஆனால் வன்னியின் இன்றைய சான்றுகளாய் இருக்கும் ஆலயங்களும் குளங்களும் சுடுமண்கிணறுகளும் வன்னியின் தொழிநுட்ப திறனையும் வன்னியின் தொன்மையையும் எடுத்தியம்பும் என்பதில் ஐயமில்லை.

> நான்காம் வினாவிற்கு செல்வோமாயின் வன்னியின் தொன்மைகள் தொடர்பான ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கான காரணம் 1948 வரை இலங்கை அன்னியர் ஆட்சியில் இருந்தமை. அதன் பின் வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வன்னியின் தொன்மையை ஆராய்வதன் விளைவாய் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றாய் வன்னியை தாமே ஆதாரங்களுடன் நிரூபிப்பதாய் போய்விடும் என்று எண்ணியிருக்கலாம். அல்லது வன்னியின் அறிஞர்கள் வழங்கிய ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல் விட்டிருக்கலாம்.அதன் பின் இன்று வன்னி போர் நடக்கும் மையப் பகுதியாக வன்னி இருப்பதால் அதன்தொன்மைகள் இன்றும் பெரிதாய் ஆராய்விற்கு உட்படுத்தப்படவில்லை. ஆயினும் சிறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிது. ந்தவிளக்கங்களினால் உங்கள் வினாக்களுக்கு விடைகிடைத்திருக்கும் என நம்புகின்றோம்.இன்றைய வன்னியில் வறுமையும் பஞ்சமும் தலைதூக்கி ஆடுகிறது. நெல்விளைந்த வயல்கள் கண்ணிவெடிகளால் நிறைந்துள்ளது.மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது. ஆனால் வன்னியின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. வன்னி மாணவர்கள் கல்வியின் தேவையை அறிந்துள்ளனர் இதனால் மற்றைய பிரதேச மாணவர்களைவிட குறிப்பாக யாழ் மாணவர்களைவிட முன்னிலையில் நிற்க்கின்றனர்.

சப்ரகமுவ மாகாண SDIG லலித் ஜயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.யாழ்ப்பாணத...
21/02/2025

சப்ரகமுவ மாகாண SDIG லலித் ஜயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிச் செல்ல உதவியமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு பதிவாகிய சர்ச்சைக்குரிய சம்பவமான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கில் சுவிஸ் குமாரை கைது செய்யாமல் தப்ப உதவியதாக SDIG லலித் ஜெயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

19/02/2025
டுபாயில் கைதானவர்கள் இலங்கை நாட்டில் செய்த குற்றங்கள் இதோ!இலங்கை நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புட...
08/02/2025

டுபாயில் கைதானவர்கள்
இலங்கை நாட்டில் செய்த குற்றங்கள் இதோ!

இலங்கை நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர்.

குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று காலை UL-226 ரக விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்த விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

ரன்முனி மஹேஷ் ஹேமந்த சில்வா
வயது - 42
முகவரி - புவக்கஹ தோட்டம், மாகந்த, ஊரகஸ்மந்சந்தி

22.01.2024 அன்று பெலியத்த பொலிஸ் பிரிவின் பெலியத்த வலஸ்முல்ல வீதியில் உள்ள கஹவத்த பகுதியில் டிஃபென்டர் வாகனத்தில் பயணித்த ஐந்து பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான இவருக்கு தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தன என்றும் அழைக்கப்படும் கந்தகம தெனியே கெதர பிரதீப் சந்தருவான்
வயது - 40
முகவரி - ஸ்ரீ ஆனந்தாராம மாவத்தை, கொலன்னாவை

* 18.06.2023 அன்று வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்படும் சந்தேக நபருக்கு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* 2022.01.31 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை காயப்படுத்தி கொலை முயற்சி.

* 2021.06.30 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்தமை.

* 2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.

* 2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.

* 2023.02.15 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை.

ரொடும்ப உபாலி என்று அழைக்கப்படும் நாடகந்தகே உபாலி
வயது - 39
முகவரி - புவக்வத்த, தென்கந்தலிய

* 01.10.2008 அன்று அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேக நபராவார், மேலும் மாத்தறை மேல் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* 16.04.2008 அன்று மாவரல பொலிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராவார், மேலும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

* ஊருபொக்க பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவைய

வவுனியா(Vavuniya)-தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை ந...
01/02/2025

வவுனியா(Vavuniya)-தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

இரட்டை கொலை

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் நேற்று(30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு விண்ணப்பித்துள்ளார்.

அதன் வழக்கு விசாரணை வரவுள்ளதால் விளக்கமறியலை நீடித்து வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

யாழில் முன்னெடுக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்..!வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன...
30/01/2025

யாழில் முன்னெடுக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்..!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இதன்போது பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டது.

இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும் ,படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம் ,பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகத் தழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக மாவட்ட செயலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தமை தொடர்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவரை நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை பொலிஸாரால் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் நண்பகளுடன் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத...
30/01/2025

ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவர்களில் 2 பஸ்களின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (29) காலை 11:00 மணியளவில் தனியார் பஸ்ஸொன்னும் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.

கட்டுநாயக்கவிலிருந்து சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



🪀Join Whatsapp Group
https://chat.whatsapp.com/E6QjWp6rjroBYO4mEGq8QJ

For Advertising>> +94 75 812 9837‬

FOLLOW US 👇
💁‍♂️Instagram - https://www.instagram.com/lanka_tamil_news_1st?igsh=enI0NGJ6bDhmNjlp&utm_source=qr

💁‍♂️ Facebook - https://www.facebook.com/profile.php?id=100085135387890&mibextid=kFxxJD

💁‍♂️ Twitter - https://x.com/lankatamilnews1

💁‍♂️ TikTok - https://www.tiktok.com/.tamil.news?_t=8pLnHkQDxKK&_r=1

Lanka Tamil News 1st

ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குட...
30/01/2025

ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, எலபத பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்லபட கரங்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில், புதன்கிழமை (29) காலை 29 வயதான பட்டதாரி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளம் பெண் காலை 6.00 மணியளவில் தனது வீட்டின் சமையலறையில் இருந்தபோது, ​​குறித்த இளைஞன் வீட்டிற்கு பின்னால் இருந்து ரகசியமாக நுழைந்து அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி, எலபத, தெல்லபட பகுதியைச் சேர்ந்த சந்திமா ஹர்ஷனி குணரத்ன என்ற 29 வயது இளம் பெண், களனி பல்கலைக்கழக மாணவியுமான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவள் இரத்தினபுரி நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மாவையின் உடலை பெறுப்பெடுக்கிறார் சீ.வி.கேஇலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்று முன்னர் யாழில்...
30/01/2025

மாவையின் உடலை பெறுப்பெடுக்கிறார் சீ.வி.கே

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்று முன்னர் யாழில் காலமானார் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்...

உடல்நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(29.01.2025) இரவு 10.00 மணிக்கு 82வது வயதில்உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தாரிடம் இருந்து நாளைய தினம் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்கள் அமரர் மாவை சேனாதிராஜாவின் உடலை பொறுப்பெடுத்து அஞ்சலிக்கான அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அமரர் மாவை சேனாதிராசா அவர்களின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 02/02/2025, ஞாயிறு பி. ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று மேலும் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவரின் புகழுடலுக்கு அஞ்சலி...!!இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்களி...
30/01/2025

கட்சியின் மூத்த தலைவரின் புகழுடலுக்கு அஞ்சலி...!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார்.

நேற்று முன் தினம், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்திருந்த நிலையில், வைத்தியசாலையின் நிருவாக நடைமுறைகளைப் பின்பற்றி இன்று அதிகாலை அவரது புகழுடலைப் பொறுப்பேற்ற சிறீதரன் எம்.பி, மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து, கட்சியின் மூத்த தலைவரின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜா அவர்களின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2025.02.02, ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான நிலையில் டாட்டூ நிறுவனத்துக்கு சீல்!....யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ க...
29/01/2025

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான நிலையில் டாட்டூ நிறுவனத்துக்கு சீல்!....

யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

Address

Colombo
Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Tamil News 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka Tamil News 1st:

Shortcuts

Share