𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐍𝐞𝐭𝐰𝐨𝐫𝐤

  • Home
  • 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐍𝐞𝐭𝐰𝐨𝐫𝐤

𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐍𝐞𝐭𝐰𝐨𝐫𝐤 தமிழ் பேசும் மக்களின் தனிதுவக்குரல்

📌ஹோமாகமயில் சிறுமி பாலியல் பலாத்காரம் - மாணவர்கள் 7 பேர் கைது..! READ MORE 👇🏻 👇🏻 👇🏻சிறுமி பாலியல் பலாத்காரம் - மாணவர்கள்...
05/04/2025

📌ஹோமாகமயில் சிறுமி பாலியல் பலாத்காரம் - மாணவர்கள் 7 பேர் கைது..!

READ MORE 👇🏻 👇🏻 👇🏻

சிறுமி பாலியல் பலாத்காரம் - மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣3️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/JoByghWlku4E4zwo2k0pm3

𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗠𝗘𝗗𝗜𝗔

05/04/2025

📌மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து கைது.

READ MORE 👇🏻👇🏻👇🏻.

கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣3️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/JoByghWlku4E4zwo2k0pm3

05/04/2025
05/04/2025

📌 #மட்டக்களப்பு #உன்னிச்சை குளத்தின் வான் பாயும் பகுதியில் நீராடிய ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது

05/04/2025
05/04/2025

📌 #ஓட்டமாவடி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல் முயற்சி - பொலிஸில் முறைப்பாடு

READ MORE 👇🏻👇🏻👇🏻

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தியாவட்டவான் வட்டாரத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் புஹாரி பெளர்தீன் தன் மீது எதிர்க்கட்சி வேட்பாளர் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதாகக்கூறி இன்று (வெள்ளிக்கிழமை) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாவலடி, மதீனா பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுமென முறைப்பாட்டாளரிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TH

✅மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து எமது WHATSAPP குழுமத்தில் இணைந்திருங்கள்

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣3️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/JoByghWlku4E4zwo2k0pm3

⭕மற்றவர்களும் பயனடைவார்கள் அதிகம் Share செய்து கொள்ளுங்கள்..!விசேட செய்திகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள்    போன்றவற்றினை அ...
17/05/2024

⭕மற்றவர்களும் பயனடைவார்கள் அதிகம் Share செய்து கொள்ளுங்கள்..!

விசேட செய்திகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் போன்றவற்றினை அறிய இப்போது இணைந்து கொள்ளுங்கள்👇🏻👇🏻

𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 0️⃣4️⃣ 👇🏻👇🏻

https://chat.whatsapp.com/KGdCCfdepLr3SDlA91Eo2U

➖➖➖➖➖➖➖➖➖

🔘நம்ப முடியாத மிகக் *குறைந்த கட்டணத்தில்* விளம்பர தொடர்புகளுக்கு.⤵️

🪀http://wa.me/+94750336926

🪀https://wa.me/+94742273427
➖➖➖➖➖➖➖➖➖

❤️எமது facebook பக்கத்தினை LIKE AND FOLLOW செய்து ஆதரவு தாருங்கள்

https://www.facebook.com/profile.php?id=61557584244537&mibextid=ZbWKwL

Address


Telephone

+94750836926

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐍𝐞𝐭𝐰𝐨𝐫𝐤 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐍𝐞𝐭𝐰𝐨𝐫𝐤:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share