News21 Tamil

News21 Tamil Reliable News. Follow Us

Around the Clock

2022 முதல் இயங்கும் News21 ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட்டது.

15+ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆசிரியர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. சிறந்த ஊடக கலாசாரத்தை பேணி, மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதே எங்கள் நோக்கம்.

Honda வாகனங்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை - Airbag தொடர்பில்  உடனே Check செய்யுங்கள்!இலங்கையில் Honda வாகனங்களைப் ப...
29/08/2026

Honda வாகனங்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை - Airbag தொடர்பில் உடனே Check செய்யுங்கள்!

இலங்கையில் Honda வாகனங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், தங்களது வாகனங்கள் தற்போது இடம்பெற்று வரும் SRS ஏர்பேக் (Airbag) சிஸ்டம் மேம்படுத்தல் மீளழைப்பு நடவடிக்கையால் தங்களது வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்குமாறு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு தொடர்பான மேம்படுத்தல் பணிகள், வாகன உரிமையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மீளழைப்பு நடவடிக்கையில் Honda நிறுவனத்தின் பிரபலமான பல வாகன மொடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றில்:

Honda Civic
Honda CR-V
Honda Accord
Honda Fit / Jazz
Honda City
Honda Insight
Honda Stream
Honda Odyssey
Honda Integra
Honda Crossroad

ஆகிய வாகனங்களின் தெரிவுசெய்யப்பட்ட மொடல் குறியீடுகள் ஆகும்.

வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் Chassis Numberஐ பயன்படுத்தி Honda Sri Lanka இன் பாதுகாப்பு மீளழைப்பு இணையதளத்தில் (Safety Recall Portal) வாகனம் இந்த நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான Airbag System மேம்படுத்தலை மேற்கொள்ளத் தவறினால், விபத்தொன்றின் போது Airbag செயல்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அல்லது முன் இருக்கையில் பயணிக்கும் நபருக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் Honda வாகனங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motor Co. (Pvt) Ltd., இந்த பாதுகாப்பு மேம்படுத்தல் பணிகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த வாகனம் Stafford Motor Co. நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படாததாக இருந்தாலும் அல்லது இதற்கு முன்னர் அந்நிறுவனத்திடம் சேவை பெறாததாக இருந்தாலும், இந்த பாதுகாப்பு மேம்படுத்தல் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, Honda வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் Chassis Numberஐ பயன்படுத்தி Recall நிலையை உடனடியாக பரிசோதித்து, தேவையெனில் பாதுகாப்பு மேம்படுத்தல் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்புநேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்...
29/08/2026

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்ததாக நம்பப்படும் ஏழு பேரின் சடலங்கள், எல்லையைத் தாண்டி இந்தியாவின் ஆறுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், நேபாள நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள மகாராஜ்கஞ்ச் (Maharajganj) மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத நான்கு சடலங்களும், குஷிநகர் மாவட்டத்தில் மேலும் மூன்று சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகள், நேபாளம் – இந்தியா எல்லையில் இருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில், வெள்ள நீர் செல்லும் திசையில் அமைந்துள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் என இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.

மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

உயிரியல் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஆஸி. பெண்!ஓர் ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், மற்றொரு தம்பதியினருக்காகக்...
29/08/2026

உயிரியல் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஆஸி. பெண்!

ஓர் ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், மற்றொரு தம்பதியினருக்காகக் கருவைச் சுமந்துகொண்டிருந்த அதே நேரத்தில், தனது சொந்தக் குழந்தை இயற்கையாகக் கருத்தரித்ததால், முற்றிலும் மாறுபட்ட உயிரியல் பெற்றோர்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்த மிகவும் அசாதாரணமான சம்பவம், குயின்ஸ்லாந் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு, 27 வயதான அந்தப் பெண், கருத்தரிக்க முடியாத ஒரு தம்பதியினருக்காகத் தன்னலமற்ற வாடகைத் தாயாகச் செயல்பட ஒப்புக்கொண்டிருந்தார்.

குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பிய பெற்றோருக்குச் சொந்தமான கரு, கடந்த ஆண்டு 2025 ஏப்ரல் மாதம் அந்த வாடகைத் தாய்க்கு மாற்றப்பட்டது.

இருப்பினும், ஏறக்குறைய அதே காலகட்டத்தில், அந்த வாடகைத் தாயும் தனது கணவருடன் இயற்கையாகக் கருத்தரித்தார்.

கரு மாற்றப்பட்ட சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், அவர் இரண்டு குழந்தைகளைச் சுமப்பதாக வெளிப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட மரபணுப் பரிசோதனையில், பெண் சிசு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பிய பெற்றோரின் உயிரியல் குழந்தை என்றும், ஆண் சிசு வாடகைத் தாய் மற்றும் அவரது கணவரின் உயிரியல் குழந்தை என்றும் உறுதி செய்யப்பட்டது.

இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2025 இல் பிறந்தன. அன்று முதல் ஒவ்வொரு தம்பதியினரும் தங்களது சொந்த உயிரியல் குழந்தையை வளர்த்து வருகின்றனர். மேலும், பெற்றோர் உரிமை குறித்து இரு குடும்பங்களுக்கும் இடையே எந்தவிதமான தகராறும் இல்லை.

ஆனால், இந்த அசாதாரண சூழ்நிலைகள் ஒரு சட்டச் சிக்கலை உருவாக்கின. ஏனெனில், குயின்ஸ்லாந்தின் வாடகைத் தாய் சட்டங்கள் பொதுவாக, ஒரு பன்முறைப் பிறப்பில் பிறந்த "பிறப்புச் சகோதரர்களை" வெவ்வேறு பெற்றோர் உரிமை உத்தரவுகள் மூலம் பிரிப்பதைத் தடுக்கின்றன.

இந்த விவகாரம், குயின்ஸ்லாந்தின் குழந்தைகள் நீதிமன்றத்தின் முன் சென்றது. அங்கு நீதிபதி ஜோடி வூல்ட்ரிட்ஜ், அந்த ஆணும் பெண்ணும் "கருவுற்ற இரட்டையர்கள்" என்றும், ஆனால், தனித்துவமான சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, வாடகைத் தாய் சட்டத்தின் நோக்கங்களுக்காக அவர்கள் "பிறப்புச் சகோதரர்கள்" அல்ல என்றும் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பு, பெற்றோர் உரிமை ஏற்பாடுகளை முறையாக அங்கீகரிக்க அனுமதித்தது.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

நவோதயாபுரம் உதயம்: வரவு - செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை; ஜனாதிபதி தெரிவிப்பு2023ஆம் ஆண்டு மண்சர...
29/08/2026

நவோதயாபுரம் உதயம்: வரவு - செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை; ஜனாதிபதி தெரிவிப்பு

2023ஆம் ஆண்டு மண்சரிவில் வீடுகளை இழந்த பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு “நவோதயாபுரம்” புதிய வீடுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நேற்று (28) கையளிக்கப்பட்டன.

ஒவ்வொரு வீடும் 10 பேர்சஸ் காணியில் 550 சதுர அடி பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 32 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4,000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்திலும் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

AI ஆபாச வீடியோக்கள் முதல் Facebook குழுக்கள் வரை – பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை!குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச ப...
28/08/2026

AI ஆபாச வீடியோக்கள் முதல் Facebook குழுக்கள் வரை – பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை!

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை பகிரும் சமூக ஊடக தளங்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய இலங்கை பொலிஸார் விசேட மின்னஞ்சல் முகவரியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் குழுக்களில், குழந்தைகள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் அதிகளவில் பரவி வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்வாறான ஆபாச உள்ளடக்கங்களை பகிரும் சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தளங்கள் தொடர்பான முறைப்பாடுகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான உள்ளடக்கங்களை பரப்பும் பேஸ்புக் குழுக்களை அடையாளம் கண்டு, அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், இலங்கை பொலிஸாரின் கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு 011 2381058 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்டு ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்குதல், பகிர்தல் அல்லது பரப்புதல் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

மட்டக்குதிரை மீது தாக்குதல் – சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இளைஞன் கைதுநுவரெலியாவில் மட்டக்குதிரை (Pony) ஒ...
28/08/2026

மட்டக்குதிரை மீது தாக்குதல் – சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இளைஞன் கைது

நுவரெலியாவில் மட்டக்குதிரை (Pony) ஒன்றைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மட்டக்குதிரை தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞனை கைது செய்துள்ளனர்.

விலங்குகளுக்கு கொடுமை செய்வதைத் தடுக்கும் 1907ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழும், தண்டனைச் சட்டக்கோவையின் 411 மற்றும் 412ஆவது பிரிவுகளின் கீழும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அழகு நிலையத்தை நடத்திய தம்பதி கைது – ரூ.7 கோடி போதைப்பொருள், பணம் என சிக்கிய ஆதாரங்கள்!மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந...
28/08/2026

அழகு நிலையத்தை நடத்திய தம்பதி கைது – ரூ.7 கோடி போதைப்பொருள், பணம் என சிக்கிய ஆதாரங்கள்!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று, நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த அழகு நிலையத்தை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமினி குமாரவின் மேற்பார்வையில், இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மாத்தறை வெலேகொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 6 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு கிராம் ஹெரோய்ன் சுமார் 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி!நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்ற...
28/08/2026

பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடர்களைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இலங்கை அரசு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கவுள்ளது.

நேபாளத்தில் நேர்ந்துள்ள இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த 1 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குமாறு அவர் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களின் சார்பாகவும், அரசாங்கத்தின் சார்பாகவும், குறிப்பாக தங்களது உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இலங்கை ஜனாதிபதி தனது அனுதாபங்களைப் பகிர்ந்துள்ளார்.

இலங்கை மற்றும் நேபாளத்துக்கு இடையே உள்ள நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதே, இந்த நிதியுதவியின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

உடல் எடையைக் குறைக்க தண்ணீர் மட்டும் அருந்திய பெண்: நினைவாற்றல் குன்றி, நடக்க முடியாமல் தவிப்பு!சீனாவின் ஹெனான் (Henan) ...
27/08/2026

உடல் எடையைக் குறைக்க தண்ணீர் மட்டும் அருந்திய பெண்: நினைவாற்றல் குன்றி, நடக்க முடியாமல் தவிப்பு!

சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஒருவர், உடல் எடையைக் குறைக்க ஆபத்தான உணவுமுறையைக் கடைப்பிடித்ததால் தற்போது நடக்க முடியாமல் தவித்து வருகிறார்.

தனது 70 கிலோ உடல் எடையைக் குறைப்பதற்காக, அவர் 15 நாட்களுக்கு உணவின்றித் தண்ணீர் மட்டுமே அருந்தியுள்ளார்.

இதன்மூலம் இரண்டு வாரங்களில் தனது உடல் எடையில் 20 கிலோகிராம் குறைத்துள்ளார்.

ஆனால், இந்த ஆபத்தான முறையால் அவரது மூளை பாதிக்கப்பட்டு, நினைவாற்றல் குன்றியுள்ளது.

நடப்பதற்கே மிகவும் சிரமப்படும் அந்தப் பெண், தற்போது பென்குயின் போன்று நடமாடுவதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதிலிருந்து முழுமையாகக் குணமடையாமல் வாழ்நாள் முழுவதும் அவதியுறக்கூடும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளார்.

சீனாவில் இது போன்ற ஆபத்தான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் கடும் உடல்நலச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலுக்குத் தேவையான உரிய ஊட்டச்சத்துக்களைப் பெற அனைவரும் முறையாகச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Source: South China Morning Post

செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது!முழுமையான செய்தியை வாசிக்க...
27/08/2026

செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது!

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

Address

Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when News21 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News21 Tamil:

Shortcuts

Share