25/08/2026
அப்பா தன்னிடமிருந்த
இரண்டில் ஒன்றை விற்று
அக்காளின் திருமணத்தை முடித்தார்.
அம்மா தன்னிடமிருந்த
இரண்டில் ஒன்றை விற்று
இன்னொரு அக்காளின்
திருமணத்தை முடித்தார்.
மூன்றாவது மகளாகிய
நான் மட்டும் கல்யாணம்
ஆகாமல் காலமெல்லாம் கன்னியாக...
என் செய்வது?
என் கல்யாணத்தை முன்னிட்டு
அப்பாவும், அம்மாவும் தங்களிடம்
மீதமுள்ள இன்னொன்றையும் விற்றால்,
இறந்தே போவார்கள்…
அவர்கள் உயிர் வாழ,
ஆளுக்கொரு
சிறுநீரகமாவது வேண்டாமா?
- கவிஞர் வாலி