FLASH News

FLASH News The Secret of Secrets

15/06/2023
லிட்ரோ விலை குறைப்பு - புதிய விலை விபரங்கள் உள்ளே!லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க...
04/06/2023

லிட்ரோ விலை குறைப்பு - புதிய விலை விபரங்கள் உள்ளே!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வீசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1281 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு!யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மது...
04/06/2023

24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்குவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு தங்கி இருந்தவர் ஆசிரியை அல்ல என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவரது நடத்தையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரங்களில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அருகிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியமும் இளம்பெண் ஒருவருடன் கத்தோலிக்க மதகுரு அங்கு வந்துள்ளார்.

அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் அந்தப் பகுதி பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். வீட்டுக்குள் மக்கள் சென்று பார்த்த போது அங்கு மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.. அத்துடன் கத்தோலிக்க மத குருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.

மதகுருவையும் அவருடன் தங்கி இருந்து யுவதியையும் பிடித்த பொதுமக்கள் தெல்லிப்பழை பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிசார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

29/05/2023

"தாலி கட்டிக்கொண்ட மாணவர்கள்"

மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றில் கல்விபயியிலும் 10 ஆம் தர மாணவன் ஒருவன் மேலுமொரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 09 ஆம் தர மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் சிலவருடங்களாக ஏற்பட்ட காதலில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 தரத்தில் கல்விகற்கும் போது 08 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு யாருக்கும் தெரியாமல் தங்கத்தில் தாலி கட்டியுள்ளான்.

இது யாருக்கும் தெரியாமல் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மாணவி சில தினகளுக்கு முன்பு பாடசாலைன் மூலம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியின் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்த சக மாணவிகள் இது குறித்து வினவி ஆசிரியையிடம் தெரிவித்தபோது

ஆசிரியை கழுத்தை காட்டும் படி குறித்த மனைவியை கேட்டுக்கொண்டுள்ளார் ஆனால் மாணவி மறுக்க கட்டாயத்தின் பேரில் ஆசிரியை மனைவியின் கழுத்தை பார்த்த போது தாலி இருப்பதை உறுதிசெய்துள்ள ஆசிரியர் குறித்த மாணவன் மற்றும் மனைவியின் வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார்.
___________________________

19/05/2023

காணவில்லை..

காத்தான்குடி கடற்கரை சிறுவர் பூங்காவில் விளையாடி விட்டு வெளியில் வந்த 08 வயது சிறுமியை காணவில்லை. அவர் நீல நிற டீசேர்ட்டும், நீல நிற காற்சட்டையும் அணிந்திருந்தார். கண்டவர்கள் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

0775941676

19/05/2023

காணாமல் போன பொருள் பற்றிய அறிவித்தல்..!

Mifsal என்பவருடைய அடையாள அட்டை
*NIC 200515500850*, இலங்கை வங்கி அட்டை சிறிய தொகை பணம் என்பன காத்தான்குடி பீச் வீதியில் இருந்து அமானுல்லா வீதி வரையிலான இடைப்பட்ட தூரத்தில் தவறவிடப்பட்டுள்ளது..

கண்டெடுத்தவர்கள் தயவுசெய்து.. இந்த இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்..

Call 0750411603

புதிய ஆளுநர்கள் நியமனம்வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிய...
17/05/2023

புதிய ஆளுநர்கள் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

16/05/2023

கடல் சீற்றம் காரணமாக காத்தான்குடி பூநொச்சிமுனை கடலில் நங்குரம் இடபட்டு இருந்த படகு ( டிப் போட்) ஒன்று கரை ஒதுங்கிய போது கடல் அலைகளால் முற்றாக சுக்கு நூராக ஆக்கபட்டுள்ளது.
படகின் எஞ்சிய சாதனங்களை மீட்க கலத்தில் மக்கள் கூட்டம்

தகவல்
மீனவர் சங்க தலைவர்

முத்தரிப்புத்துறை மற்றும் வவுனியா மாணவர்களை காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுமாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமட...
09/05/2023

முத்தரிப்புத்துறை மற்றும் வவுனியா மாணவர்களை காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வரும் மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மாணவனும் வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் நேற்றைய தினம் (8) மாங்குளம் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் மாணவர்கள் இருவரும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வருவது வழமை நேற்றைய தினம் (8) பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வேண்டுவதற்காக சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் விடுதி திரும்பவில்லை

அதன் பிறகு இரவு எட்டு மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர் ஒருவரால் காணாமல் போன மாணவனின் (மன்னார் முத்தரிப்புத்துறை) பெற்றோருக்கு தொடர்பு எடுத்து மகன் வீட்டுக்கு வந்தாரா? என்று கேட்டுள்ளனர் குறித்த பெற்றோர்கள் ஏதேனும் பிரச்சினையா? என்று கேட்ட போது விடுதி காப்பாளர்களால் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பாக விடுதி பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முத்தரிப்புத்துறையை சேர்ந்த மாணவணின் பெற்றோர்கள் மாங்குளம் விடுதிக்கு சென்றுள்ளதாக மாணவனின் பெற்றோர்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது

முத்தரிப்புத்துறை மாணவன் தரம் 11றிலும் வவுனியா மாணவன் தரம் 12லும் கல்வி கற்று வருகிறார்கள் இதேவேளை வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் பகுதியை சேர்ந்த மாணவணின் பெற்றோர்களும் மாங்குளம் விடுதிக்கு சென்றுள்ளதாக தெரிய வருகிறது

புகைப்படத்தில் இருக்கும் மாணவனை கண்டவர்கள் அல்லது இவர் பற்றிய தகவல் ஏதும் அறிந்தவர்கள் கீழ் உள்ள இலக்கத்திற்கு தகவல் தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் தயவு செய்து இத் தகவலை அதிகம் பகிர்ந்து குறித்த மாணவனை மீட்க உதவி செய்வோம்.0778785430

"காணாமல் போயுள்ள சிறுவன், தகவல் கிடைத்தால் அறிவிக்கவும்!"இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்...
08/05/2023

"காணாமல் போயுள்ள சிறுவன், தகவல் கிடைத்தால் அறிவிக்கவும்!"

இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள்.

நேற்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் கிடைத்தால் பின்வரும் இலக்கத்திற்கு அறியத்தருமாறும் பெற்றோர் கேட்டுக்கொள்கின்றார்கள்:

077-3609218
077-6510154
077-2309254

"மனைவியை திட்டமிட்டு கொலை செய்த கணவர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!"3 கோடி ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்...
07/05/2023

"மனைவியை திட்டமிட்டு கொலை செய்த கணவர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!"

3 கோடி ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 40 வயதுடைய மனைவியைக் கொன்ற 25 வயதுடைய நபரை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் தனது நண்பரைப் பயன்படுத்தி குறித்த பெண்ணை வாகன விபத்தில் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிடிகல மானம்பிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜீப் வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதனை ஓட்டிச் சென்ற நபர் ஜீப்புடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நிரோஷா உதயங்கனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் 25 வயதுடைய கணவர் மோட்டார் சைக்கிளில் விபத்து நடந்த இடத்திற்கு அவருடன் வந்து, அந்த இடத்தில் அவரை இறக்கிவிட்டு, தலைக்கவசத்தை உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பிறகே அங்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்னர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பிடிகல பொலிஸார் முதலில் விபத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியை கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, குறித்த ஜீப் வண்டியை உயிரிழந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் வாடகை அடிப்படையில் எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் இறந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதன்போது, இறந்த பெண்ணின் கணவரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வௌிநாட்டில் இருந்த போது ஈட்டிய பணத்தை பெற்றுக் கொள்வதற்கும் அவரின் மூன்று காப்புறுதிகளின் மூன்று கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்த கொலையை திட்டமிட்டதாக பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை குறித்த ஜீப் வண்டியை செலுத்திய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when FLASH News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLASH News:

Share