19/09/2026
📂 இஸ்திகாரா துஆ...
✍️ வாழ்க்கையில் எதைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் குழப்பமா?
✍️ திருமணம், வேலை, தொழில், பயணம், படிப்பு போன்ற முக்கியமான காரியங்களில் எதைச் செய்வது நமக்கு நன்மையானது என்று தெரியாமல் குழப்பம் ஏற்படலாம்...
✍️ அத்தகைய நேரங்களில், அல்லாஹ்விடம் நன்மையானதைத் தேர்வு செய்து தருமாறு வேண்டி தொழப்படும் இரண்டு ரக்அத் தொழுகையே “இஸ்திகாரா தொழுகை” ஆகும்...
⚠️ இரண்டு ரக்ஆத்கள் தொழுத பின் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்...
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ
📖 துஆவின் பொருள்...
அல்லாஹ்வே! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன்.
நீ அனைத்தையும் அறிகிறாய் நான் அறியமாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்துக்கும், என்னுடைய வாழ்க்கைக்கும், என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதில் எனக்கு பரக்கத் செய்!
இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்துக்கும், என்னுடைய வாழ்க்கைக்கும், என்னுடைய மறுமைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தைவிட்டு என்னையும் திருப்பி விடு.
எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றுக்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா!
அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும். என்று நபி அவர்கள் கூறினார்கள்.
📗 ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி — 6382
ISLAMIC TAMIL UMMAH