18/07/2025
பலஸ்தீனப் பிரதேசங்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து கவலை தெரிவித்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் பொலிவியா, பிரேசில், சிலி, சீனா, கொலம்பியா, கியூபா, ஹொண்டுரஸ், ஐஸ்லாந்து, நமீபியா, ஸ்லோவேனியா, தென்னாபிரிக்கா, ஸ்பெயின், இலங்கை, வெனிசூலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன், ஜெனீவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களும் , இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
அல்பானீஸ் மற்றும் பிற ஐ.நா. நிபுணர்கள் மீதான சமூக ஊடகத் தாக்குதல்களை இந்த கடிதத்தின் ஊடாக கண்டித்துள்ள குறித்த நாடுகள், இது சர்வதேச சட்ட மீறல்களை அம்பலப்படுத்துபவர்களை இழிவுபடுத்தும் நியாயமற்ற முயற்சிகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z
👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk
‼️