Sooriyan FM

Sooriyan FM 103.6 FM or 103.4 FM Islandwide. www.sooriyanfm.lk

Sooriyan FM, the Number 01 Tamil channel in Sri Lanka.
(542)

ரீங்காரம்🐝🦋🎼உங்கள் விஜித்துடன்!WhatsApp - 077 2 103 103📻103.6 | 103.4 www.sooriyanfm.lk
18/09/2026

ரீங்காரம்🐝🦋🎼
உங்கள் விஜித்துடன்!
WhatsApp - 077 2 103 103
📻103.6 | 103.4 www.sooriyanfm.lk

விடிய விடிய இரவுச்சூரியன்🔥🤙🎼உங்கள் விஜித்துடன்! 🫴😍Call☎️ - 011 2346744WhatsApp - 077 2 103 103📻103.6 | 103.4 www.sooriya...
18/09/2026

விடிய விடிய இரவுச்சூரியன்🔥🤙🎼
உங்கள் விஜித்துடன்! 🫴😍
Call☎️ - 011 2346744
WhatsApp - 077 2 103 103
📻103.6 | 103.4 www.sooriyanfm.lk

18/09/2026

உருவக் கேலிக்கு எதிராகக் கொதித்தெழுந்த ரசிகர்கள்: கத்ரீனாவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய பிரபலங்கள்

திருமணம் மற்றும் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு திரைத்துறையிலிருந்தும் பொது நிகழ்ச்சிகளிலிருந்தும் தற்காலிகமாக விலகியிருந்த பிரபல நடிகை கத்ரீனா கைஃப், அண்மையில் தனது கணவர் விக்கி கௌஷலுடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய கத்ரீனா கைஃபின் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியுள்ளது.

இருப்பினும், இணையவாசிகளில் சிலர் அவரது தற்போதைய தோற்றம், உடல் அமைப்பு மற்றும் எடை அதிகரிப்பு குறித்து எதிர்மறையான கருத்துகளையும் கடுமையான விமர்சனங்களையும் பதிவிட்டு வந்துள்ளனர்.

பெண்களின் உடல் தோற்றம் குறித்தும், பிரசவத்திற்குப் பிந்தைய உடல் மாற்றங்கள் குறித்தும் தொடுக்கப்பட்ட இந்த விமர்சனங்களுக்கு எதிராக கத்ரீனாவின் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

ரசிகர்களைத் தொடர்ந்து, நடிகைகள் குஷ்பூ மற்றும் திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட முன்னணித் தென்னிந்திய பிரபலங்களும் கத்ரீனா கைஃபுக்கு ஆதரவாகத் தங்களது குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.

பெண்ணின் உடலை உருவக் கேலி (Body Shaming) செய்வதைக் கண்டித்தும், பிரசவத்திற்குப் பிந்தைய இயல்பான மாற்றங்களை மதிக்குமாறும் அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

18/09/2026

அவுஸ்திரேலியாவில் திடீர் பரபரப்பு :50 மீட்டர் தொலைவில் கடலில் ஆபத்து

மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் பெர்த் நகருக்கு அருகே அமைந்த புகழ்பெற்ற சோரெண்டோ கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை எதிர்பாராத விதமாக அங்கு வந்த சுறா மீன் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

கடற்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நபரை மீட்கவும், தாக்குதல் நடத்திய சுறாவைக் கண்டறியவும் காவல்துறையினர் உடனடியாகக் விரைந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியிலுள்ள கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளன.

மேலும், காவல்துறையின் சிறப்புப் படகுகள் மற்றும் உலங்கு வானுார்திகள் மூலம் அந்த பகுதியில் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், தாக்குதல் நடத்திய சுறாவின் இனம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கண்டறியப்படவில்லை எனத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

18/09/2026

கைதுக்கு எதிரான சுரேஷ் சலேயின் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 27இல் உத்தரவு!

தனது கைது மற்றும் தடுத்து வைப்பு நடவடிக்கைகளைச் சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை (Writ) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி (Leave to proceed) வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உத்தரவை வரும் நவம்பர் 27ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதயத்தோடு இதயம்With  (9pm - 12am)Call ☎️ - 011 2346744WhatsApp - 077 2 103 103📻 103.6 | 103.4www.sooriyanfm.lk
18/09/2026

இதயத்தோடு இதயம்
With
(9pm - 12am)
Call ☎️ - 011 2346744
WhatsApp - 077 2 103 103
📻 103.6 | 103.4
www.sooriyanfm.lk

18/09/2026

சவூதி அரேபியாவில் தண்டனைளைய எதிர்கொண்டுள்ள அனோஜனின் விவகாரத்தை, நெருக்கமாக அவதானிப்பதாக இலங்கை கூறுகிறது.

18/09/2026

தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடருந்து திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், தொடருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் விரும்பி சாப்பிடும் சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்இட்லி – 6 முதல் 8தயி...
18/09/2026

எல்லோரும் விரும்பி சாப்பிடும் சுவையான தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
இட்லி – 6 முதல் 8
தயிர் – 1 கப்
பால் – ¼ கப்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை
முதலில் இட்லிகளை ஆறவைத்து, இரண்டாக அல்லது நான்காக வெட்டிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அதன் பின்னர் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

பின்பு இட்லித் துண்டுகளை தயிரில் போட்டு மெதுவாகக் கலந்து, 10–15 நிமிடங்கள் ஊறவிட்டு எடுத்தால் சுவையான இட்லி தயார்!

விரும்பினால் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மேலே ஊற்றலாம்.

எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கல்சியம் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதன்படி ...
18/09/2026

எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கல்சியம் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

இதன்படி பால், தயிர், முட்டை, மீன், கீரைகள், பருப்பு வகைகள், கேழ்வரகு, எள், பாதாம், பிஸ்தா போன்ற உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு கல்சியத்துடன் VITAMIN D யும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆகவே உடலில் VITAMIN D கிடைக்க இளவெயிலில் சிறிது நேரம் இருப்பது சிறந்ததாகும் .

மேலும் கொள்ளு ரசம், பிரண்டைத் துவையல் போன்ற பாரம்பரிய உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு ஆரோக்கியமாக சிறந்து விளங்கும்.

Address

World Trade Centre, Colombo 01
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Sooriyan FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sooriyan FM:

Shortcuts

Share

Category